Published:Updated:

`288 சோதனைச் சாவடிகள்; பழைய இ-பாஸ் கேன்சல்!’ - சென்னையில் கடுமையாக்கப்படும் ஊரடங்கு

சென்னை - ஊரடங்கு
சென்னை - ஊரடங்கு

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு ஜூன் 19ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இது வரும் 30-ம் தேதி வரை அமலில் இருக்கும்.

கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஜூலை 19-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படும் எனத் தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து சென்னை மாநகரக் காவல்துறை தரப்பில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருக்கிறது.

சென்னை - ஊரடங்கு
சென்னை - ஊரடங்கு
காவல்துறை அறிவிப்பின் முக்கிய அம்சங்கள்

*அத்தியாவசியப் பொருள்கள் வாங்க வாகனங்களைப் பயன்படுத்தாமல் 2 கி.மீ சுற்றளவில் நடந்துசென்று வாங்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.

*மருத்துவத் தேவை, ரயில், விமானப் பயணம் தவிர பிற தேவைக்காக ஆட்டோ, டாக்ஸி, தனியார் வாகனங்களில் செல்ல அனுமதி இல்லை. இதற்காகப் பயணிப்பவர்கள் பயணச் சீட்டு வைத்திருக்க வேண்டும்.

மீண்டும் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு... மக்கள் கருத்து என்ன? #VikatanPollResults

*அரசு அனுமதித்துள்ள மத்திய, மாநில அரசு நிறுவனங்களில் 33 சதவிகித பணியாளர்கள் வேலைக்குச் செல்லும்போது அதற்கான அனுமதிச் சீட்டைக் கண்டிப்பாகக் காட்ட வேண்டும். அதை `A5 Size’-ல் பிரின்ட் எடுத்துத் தொங்கவிட்டிருக்க வேண்டும்.

*சென்னைக்கு வெளியே தினசரி பணிக்காகத் தொழிலாளர்கள் செல்ல அனுமதி இல்லை.

*தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் காவலாளிகள் சீருடையில் இருந்தால் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

``சென்னை உட்பட 4 மாவட்டங்களில் கடுமையான ஊரடங்கு!''- தலைமைச் செயலாளர் உத்தரவு

* அத்திவாசியமின்றி வெளியே சுற்றுபவர்களை ட்ரோன் கேமரா மூலம் கண்காணிக்கப்பட உள்ளார்கள்.

* முழு ஊரடங்கை முழுமையாக அமல்படுத்த சென்னை பெருநகரில் 288 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, அங்கு கூடுதல் காவலர்கள் பணியமர்த்தப்பட இருக்கிறார்கள்.

* பெருநகர எல்லையில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டு போக்குவரத்து கண்காணிக்கப்பட இருக்கிறது. இ-பாஸ் பெறாமல் செல்வோர் மீது வழக்கு பதியப்படும்.

* அண்ணா சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள் மூடப்பட்டு போக்குவரத்தைக் குறைக்க நடவடிக்கை.

* ஒவ்வொரு காவல்நிலையத்திலும் முகக்கவசம் அணியாமல் பயணிப்போர் மீது நடவடிக்கை எடுக்க வருவாய் மற்றும் பெருநகர மாநகராட்சியினருடன் இணைந்து இரண்டு தனிப்படைகள்.

* ஏற்கெனவே பெறப்பட்ட பழைய இ-பாஸ்கள் அனைத்தும் செல்லுபடியாகாது. புதிதாக இ-பாஸுக்கு tnepass.tnea.org என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

சென்னை - ஊரடங்கு
சென்னை - ஊரடங்கு
காய்கறி மற்றும் மளிகைக் கடை உரிமையாளர்களுக்கான அறிவுறுத்தல்கள்.

* கடை உரிமையாளர்கள் அரசு அறிவித்துள்ள நேரக் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.

* கடைக்குள்ளும் அதைச் சுற்றியும் கிருமி நாசினி தெளிக்க வேண்டும்.

* உரிமையாளர்களும் விற்பனையாளர்களும் முகக்கவசம் மற்றும் கையுறை அணிந்திருக்க வேண்டும்.

* பொதுமக்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வண்ணம் வரிசை அமைத்தல், வட்டம் வரைதல் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

* பொதுமக்களுக்கு சானிடைசர் அல்லது கைகழுவுவதற்கு சோப், தண்ணீர் வைத்திருக்க வேண்டும்.

* கண்டிப்பாகக் குளிர்சாதன இயந்திரங்களை இயக்கக் கூடாது’’ என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு