Published:Updated:

`சம்பளமும் இல்லை; வேலையும் இல்லை!' -நடிகர் கமல் வீட்டில் நோட்டீஸ் ஒட்டியவரின் வேதனை

நடிகர் கமல்ஹாசன் வீட்டில்நோட்டீஸ் ஒட்டும் வினோத்குமார்
நடிகர் கமல்ஹாசன் வீட்டில்நோட்டீஸ் ஒட்டும் வினோத்குமார்

நடிகர் கமல்ஹாசனுக்கு சொந்தமான கட்டடத்தில் தனிமைப்படுத்தப்பட்ட வீடு என்ற நோட்டீஸ் ஒட்டிய மாநகராட்சி ஊழியருக்கு இதுவரை பணி வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சென்னை ஆழ்வார்பேட்டையில் நடிகர் கமல்ஹாசனுக்கு சொந்தமான கட்டடத்தில் கடந்த மார்ச் மாதம் 28-ம் தேதி தனிமைப்படுத்தப்பட்ட வீடு என்ற நோட்டீஸ் ஓட்டப்பட்டது. இதுகுறித்து செய்திகள் வெளியான நிலையில் நடிகர் கமல்ஹாசனும் விளக்கம் அளித்தார். இதற்கிடையில் சென்னை மாநகராட்சி ஊழியர்கள் அந்த நோட்டீஸை தவறுதலாக ஒட்டிவிட்டதாகக் கூறினர். சென்னை மாநகராட்சியின் இந்த நடவடிக்கை விமர்சனத்துக்குள்ளானது. இந்தச் சம்பவத்துக்குப்பிறகு நடிகர் கமல்ஹாசன் வீட்டில் நோட்டீஸ் ஒட்டிய ஊழியர் வினோத்குமாருக்கு இதுவரை பணிவழங்கவில்லை.

வினோத்குமாரின்அடையாள அட்டை
வினோத்குமாரின்அடையாள அட்டை

இதுகுறித்து நம்மிடம் பேசிய வினோத்குமார், ``நான் ராயப்பேட்டையில் குடியிருந்துவருகிறேன். கடந்த 9 ஆண்டுகளாக மண்டலம் 9, வார்டு 123-ல் மலேரியா நோய் தடுப்பு பிரிவில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றிவருகிறேன். கொரோனாவையொட்டி நான் பணியாற்றிய வார்டில் தனிமைப்படுத்தப்பட்ட வீடு என்ற நோட்டீஸை மார்ச் 25-ம் தேதி முதல் ஒட்டிவந்தேன். சென்னை ஆழ்வார்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் உள்ள நடிகர் கமல்ஹாசனின் முகவரியிலும் தனிமைப்படுத்தப்பட்ட வீடு என்ற நோட்டீஸை எனக்கு மேல் உள்ள அதிகாரிகள் ஒட்டும்படி கூறினர். அதன்படி நான் ஒட்டினேன். அதன்பிறகு அந்த நோட்டீஸை கிழிக்கும்படி அதிகாரிகள் என்னிடம் தெரிவித்தனர். அதன்படி செய்தேன்.

இதுதொடர்பாக மாநகராட்சி உயரதிகாரி ஒருவர் என்னிடமும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும் விசாரித்தனர். அதன்பிறகு எனக்கு பணி வழங்கப்படவில்லை. எனக்கு தினமும் 387 ரூபாய் சம்பளம் கிடைக்கும். அந்த வருமானத்தைக் கொண்டுதான் குடும்பம் நடத்திவருகிறேன். தற்போது எனக்கு கடந்த மாதம் சம்பளம் கிடைக்கவில்லை. வேலையும் இல்லாமல் சிரமப்பட்டுவருகிறேன்.

எனக்கு ஆங்கிலம் தெரியாது. அதை அதிகாரியிடம் கூறியபோது முகவரிகளைக் கொடுத்து உதவிக்கு ஒருவரை அனுப்பி வைத்தார். நடிகர் கமல்ஹாசன் வீட்டில் நோட்டீஸ் ஒட்டிவிட்டு அவரின் பெயரை ஆங்கிலத்தில் அதிகாரி போனில் கூறியதைப் போல எழுதினேன். ஆனாலும் கமல் என்று எழுதுவதற்கு பதிலாக கமலா என்று தவறுதலாக ஆங்கிலத்தில் எழுதிவிட்டேன்
வினோத்குமார்
வினோத்குமார்
வினோத்குமார்

என்னை பணிநீக்கம் செய்துள்ளதாக அதிகாரிகள் கூறினர். ஆனால் அதற்கான எந்த ஆர்டரையும் எனக்கு தரவில்லை. அதனால், சென்னை மாநகராட்சியின் உயரதிகாரி மதுசூதனன்ரெட்டியைச் சந்தித்து முறையிட்டேன். அப்போது அவர் உன்னை நான் பணிநீக்கம் செய்யவில்லை. இன்று முதல் (9.5.2020) வேலைக்குச் செல்லும்படி கூறினார். அதன்படி இன்று வேலைக்குச் சென்றபோது வருகைப்பதிவேட்டில் என்னை கையெழுத்து போட வார்டில் உள்ள அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. ஏற்கெனவே மனஉளைச்சலில் இருக்கும் என்னை சில அதிகாரிகள் தேவையில்லாமல் அலைக்கழித்துவருகின்றனர். எனக்கு மேல் உள்ள அதிகாரிகள் செய்த தவறை மறைக்க என் மீது பழிசுமத்தப்பார்க்கிறார்கள்" என்றார்.

வினோத்குமாரிடம், நடிகர் கமல்ஹாசன் வீட்டில் நோட்டீஸ் ஒட்டக்கூறியது யார் என்று கேட்டதற்கு, ``எனக்கு மேல் உள்ள அதிகாரிகள்தான் முகவரியைக் கொடுத்து நோட்டீஸையும் தந்தார்கள். எனக்கு ஆங்கிலம் தெரியாது. அதை அதிகாரியிடம் கூறியபோது முகவரிகளைக் கொடுத்து உதவிக்கு ஒருவரை அனுப்பி வைத்தார். நடிகர் கமல்ஹாசன் வீட்டில் நோட்டீஸ் ஒட்டிவிட்டு அவரின் பெயரை ஆங்கிலத்தில் அதிகாரி போனில் கூறியதைப் போல எழுதினேன். ஆனாலும் கமல் என்று எழுதுவதற்கு பதிலாக கமலா என்று தவறுதலாக ஆங்கிலத்தில் எழுதிவிட்டேன்" என்றார்.

றடிகர் கமல்ஹாசன் வீட்டில் ஒட்டப்பட்ட நோட்டீஸ்
றடிகர் கமல்ஹாசன் வீட்டில் ஒட்டப்பட்ட நோட்டீஸ்
நடிகையின் பாஸ்போர்ட்டில் இருந்த முகவரி.. குழப்பம்.. கமல் வீட்டில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது ஏன்?

இதுகுறித்து சுகாதார ஆய்வாளர் முத்துரத்தினவேலிடம் கேட்டதற்கு, ``ஒப்பந்த பணியாளர் வினோத்குமாருக்கு 112-வது வார்டில் பணி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் அங்குச் செல்லாமல் 123-வது வார்டில்தான் பணியாற்றுவேன் என்று பிடிவாதம் செய்கிறார்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு