Published:Updated:

மெட்ராஸ் டே: `டிராம் வாகனம், பக்கிங்ஹாம் கால்வாய்,' - சென்னையில் மறைந்துபோன விஷயங்கள்!

மெட்ராஸ் டே Aug 22
மெட்ராஸ் டே Aug 22

சென்னை தினத்தை எப்படிக் கொண்டாடப்பட வேண்டும் என்ற யோசனையைச் சென்னை பத்திரிகையாளர் வின்சென்ட் டி சோசா வரலாற்று ஆசிரியர் முத்தையாவிடம் 2004-ல் பரிந்துரைத்து, சென்னை தினம் கொண்டாடப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தமிழ்நாட்டின் தலைநகரமும், இந்தியாவின் நான்காவது பெரிய நகரமான மெட்ராஸ் இந்த வருடம் தனது 382-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது. 1996 -ஆம் ஆண்டுக்கு முன்பு வரை மெட்ராஸ் என்று அழைக்கப்பட்டு வந்தது. கடந்த 1996 -ஆம் ஆண்டு ஜூலை 17 -ம் தேதி 'சென்னை' என்று அதிகாரப்பூர்வமாகப் பெயர் மாற்றப்பட்டது. மதராசப்பட்டினம் கிராமத்தைக் கிழக்கிந்திய நிறுவனத்துக்கு விற்ற நினைவாக மெட்ராஸ் தினம் கொண்டாடப்படுகிறது. ஆகஸ்ட் 22-ம் தேதி 1639 ஆம் ஆண்டு முதல் இன்று வரை ஒவ்வொரு ஆண்டும் சென்னை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

மெட்ராஸ்
மெட்ராஸ்

சென்னை தினத்தை எப்படிக் கொண்டாடப்பட வேண்டும் என்ற யோசனையைச் சென்னை பத்திரிகையாளர் வின்சென்ட் டி சோசா வரலாற்று ஆசிரியர் முத்தையாவிடம் 2004-ல் பரிந்துரைத்து, சென்னை தினம் கொண்டாடப்படுகிறது. தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் நகர வளர்ச்சியின் காரணமாகச் சென்னையில் இன்று மறைந்த விஷயங்கள் பல உள்ளன. முன்பு மெட்ராஸிலிருந்த காலப்போக்கில் மறைந்துபோன சிலவற்றின் தொகுப்பைக்ட காணலாம்.

டிராம் வாகனம்

டிராம் வாகனங்கள் 19ஆம் நூற்றாண்டு தொடங்கி 67 ஆண்டுகள் வரை பயன்பாட்டில் இருந்தன. முதல் மின்சார டிராம் 7 மே 1895 அன்று செயல்படத் தொடங்கியது. இது சரக்குகள் மற்றும் மக்களை ஏற்றிச் செல்வதால் அவசியமான ஒன்றாகக் கருதப்பட்டது. இந்த வாகனம் மவுண்ட் ரோடு, பூந்தமல்லி சாலை, ரிப்பன் பில்டிங், பாரிஸ் கார்னர் ஆகியவற்றை உள்ளடக்கிய வழித்தடத்தில் பயணித்தது . நகர வளர்ச்சியின் காரணமாக டிராம்களின் இருப்பு முற்றிலும் மறைந்துவிட்டது.

ட்ராம் வண்டி
ட்ராம் வண்டி

குதிரை வண்டி

பண்டைய காலங்களில் குதிரை போர் முதல் போக்குவரத்து வரை பயன்பட்டது. ஆங்கிலேயர்கள் ஆட்சியிலும், வாகனங்கள் வருவதற்கு முன்பு குதிரைதான் போக்குவரத்துக்கு அதிகம் பயன்படுத்தப்பட்டு வந்தது. 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை சென்னையில் பெரும்பாலான இடங்களில் குதிரை வண்டிகள் அணிவகுத்து நிற்பதை நம்மால் பார்த்திருக்க முடியும். தற்போது எப்படி ஆட்டோ, டாக்சி, கார் என்று வாகனங்களை மக்கள் பயன்படுத்தி வந்தார்களோ, காலப்போக்கில் அந்த குதிரை வண்டிகள் எல்லாம் காணாமல் போனது. தற்போது சென்னை புறநகர் பகுதியில் , மெரினா கடற்கரையிலும் மட்டுமே அரிதாகக் குதிரைகளைக் காண முடிகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

டபுள் டெக்கர் பேருந்து

டபுள் டெக்கர் பேருந்து 80-களின் கனவுப் பேருந்து. பார்க்கவே பிரமாண்டமாய் இருக்கும். இது மக்கள் பலருக்கும் தினசரி போக்குவரத்தாக பயன்பாட்டில் இருந்தது. இந்த பேருந்து நகரப் போக்குவரத்துக்குப் பொருத்தமற்றதாக இருந்தாலும், அதிக பராமரிப்பு தேவைப்பட்டதாலும் 1990-களிலேயே இதன் பயன்பாடு நிறுத்தப்பட்டது. பாதுகாப்பு இல்லாமை மற்றும் அதன் உயரம் அப்பேருந்து நிறுத்தப்பட்டதிற்குக் காரணமாகச் சொல்லப்பட்டது.

மெட்ராஸ்
மெட்ராஸ்

பக்கிங்ஹாம் கால்வாய்

வணிகத்திற்குச் சென்னைக்குள் ஒரு நீர் வழிப்பாதை இருந்தால் சுலபமாகப் பொருட்களை எடுத்துச் செல்ல முடியும் என்று ஆங்கிலேயர்களால் செயற்கையாக உருவாக்கப்பட்டது பக்கிங்ஹாம் கால்வாய். ஆந்திராவிலிருந்து தமிழகம் வரை கிட்டத்தட்ட 800 கி.மீட்டருக்கும் அதிகமான முக்கிய நீர் வழிப்பாதையாக இந்த கால்வாய் இருந்து வந்தது. நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான படகுகளில் மனிதர்கள், பொருட்களை ஏற்றிக்கொண்டு இந்த கால்வாயில் பயணம் செய்தனர். 19-ம் நூற்றாண்டில் மிக முக்கிய நீர் வழிப்பாதையாக விளங்கியது இந்த பக்கிங்ஹாம் கால்வாய். காலப்போக்கில் இந்த கால்வாயின் அகலம் குறைந்து தற்போது வாய்க்கால் போன்று காட்சியளித்து வருகிறது. சுனாமியின்போது சென்னையில் பெரும் அரணாக இருந்தது. இந்த கால்வாய்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இடம், பொருள், ஆவல்: ஏழரை லட்சம் தமிழர்களின் உயிரைக் காப்பாற்றிய கால்வாய்!

தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையை தென் சென்னை மற்றும் வட சென்னை எனப் பொதுவாகச் சொல்வதுண்டு. ஆயிரம் விளக்கு, தேனாம்பேட்டை, கிண்டி, அடையார், குரோம்பேட்டை, மயிலாப்பூர் எனப் பல பகுதிகளை தென் சென்னை உள்ளடக்கியுள்ளது. அதேபோல் வியாசர்பாடி, புளியந்தோப்பு, ஓட்டேரி, மூலக்கடை, சௌகார்பேட்டை, ராயபுரம், பெரம்பூர் போன்ற முக்கிய இடங்களைக் வடசென்னை கொண்டுள்ளது.

மெட்ராஸ் வரலாறு
மெட்ராஸ் வரலாறு
Vikatan

வட சென்னை

வட சென்னை நகரத்தின் இதயத்துடிப்பு என்றும் கூறலாம். ஏனென்றால் விளையாட்டு முதல் உணவுவரை வட சென்னை தனித்துவத்துவத்துடன் விளங்குகிறது. இந்தியாவிற்கு எவ்வாறு ஹாக்கி தேசிய விளையாட்டாக விளங்குகிறதோ, அதேபோல் வடசென்னையில் 'பாக்ஸிங்' மற்றும் 'கால்பந்து' முக்கிய விளையாட்டாகும். வட சென்னை லோகோ வேலைகள் (இரயில் சீர்செய்தல் மற்றும் தயார்ப் படுத்துதல்), மார்க்கெட், பர்மீஸ் உணவு வகைகள் முதலியவற்றுக்குப் புகழ்பெற்றது. தெர்மல் மின் நிலையம், பெட்ரோலிய நிறுவனம், ஆட்டோமொபைல்ஸ், ரப்பர் தொழிற்சாலை, காட்டன் டெக்ஸ்டைல்ஸ், இறைச்சி உற்பத்தி, போன்ற பலதுறைகளில் வட சென்னை தலைசிறந்து விளங்குகிறது. நிலக்கரி, தானியங்கள், பெட்ரோல் போன்ற பலபொருட்கள் வட சென்னை துறைமுகத்தின் மூலம்தான் சென்னைக்கு வந்திறங்குகிறது.

மெட்ராஸ் துறைமுகம்
மெட்ராஸ் துறைமுகம்

தென் சென்னை

பெரும்பாலும் புகழ்பெற்ற கோவில் தென் சென்னையில் அமைந்துள்ளது. அருங்காட்சியகம், வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களும் தென் சென்னையில் உள்ளது. பல புராதன இடங்கள், வணிக வர்த்தக நிறுவனங்கள் இங்குதான் அதிகம் இருக்கிறது. புகழ்பெற்ற திரைத்துறை படப்பிடிப்பு நிறுவனங்களும் இங்கே அமைந்துள்ளது. அதோடு, வணிக வளாகங்கள், ஐ.டி நிறுவனங்கள் எனப் பல தொழில்நுட்ப பூங்கா தென் சென்னையின் புகழாகும்.

-குயின்ஸி வில்ஃபிரடா, யோகேஸ்வரி. அ

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு