Published:Updated:

சென்னை கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட அரசு டாக்டர், நர்ஸ்! -இருதயவியல் துறை கட்டடத்துக்கு சீல்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் டாக்டர், நர்ஸ் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதனால் அவர்கள் பணியாற்றிய இருதயவியல் துறை கட்டடத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டுவருகிறது.

கொரோனா வைரஸின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. அதைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களுக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சென்னையைப் பொறுத்தவரை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தனிவார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சென்னை 74 வயது மூதாட்டி குணமடைந்தது எப்படி?
கொரோனா சிறப்பு வார்டு
கொரோனா சிறப்பு வார்டு
representational image
இருதயவியல் துறையின் முதுகலை மாணவரும் டாக்டருமான ஒருவர் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் பரிசோதனை முடிவு இன்னும் வரவில்லை. அதனால் அந்த டாக்டருக்கு இன்னும் கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை.
டீன் ஜெயந்தி

சென்னை ஓமந்தூரார் அரசு சிறப்பு மருத்துவமனையில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று குணமடைந்த 30 பேர் இன்று வீடு திரும்பினர். தமிழகத்தில் இதுவரை 180 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 5 நாள்களாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வயதானவர்களும் குணமடைந்து வருகின்றனர். இது மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், கொரோனாவுக்கு சிகிச்சை அளித்த அரசு டாக்டர்கள், தனியார் மருத்துவமனை டாக்டர்கள், நர்ஸ்களையும் இந்த நோய் விட்டுவைக்கவில்லை. தமிழகத்தில் இதுவரை 8 டாக்டர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. ஆந்திராவைச் சேர்ந்த டாக்டர் ஒருவர், சென்னை தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்காக சிகிச்சை பெற்றுவந்தார். சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரின் சடலம் பல்வேறு போராட்டங்களுக்குப்பிறகு சென்னை வளசரவாக்கத்தில் தகனம் செய்யப்பட்டது.

கொரோனா வார்டு
கொரோனா வார்டு
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை கொரோனா வார்டு டயட் மெனு என்ன தெரியுமா? நம்பமாட்டீங்க!

தற்போது சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவக்கல்லூரியில் இருதயவியல் துறையில் மேல்படிப்பு படிக்கும் 34 வயது டாக்டர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே பிரிவில் உள்ள செவிலியர் ஒருவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இந்தத் தகவல் வெளியானதும் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை வளாகத்தில் செயல்படும் இருதயவியல் துறை கட்டடத்துக்கு தற்காலிகமாக சீல் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அந்தக் கட்டடத்தில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர். மேலும், கட்டடம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. சென்னை மருத்துவமனை டாக்டருக்கும் செவிலியருக்கும் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட தகவல், அரசு மருத்துவமனை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் இருவருக்கும் கொரோனா தொற்று பரவியது எப்படி என்று அவர்களின் டிராவல் ஹிஸ்ட்ரியை சுகாதாரத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை

இதுகுறித்து ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் டீன் ஜெயந்தியிடம் பேசினோம். ``இருதயவியல் துறையின் முதுகலை மாணவரும் டாக்டருமான ஒருவர் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் பரிசோதனை முடிவு இன்னும் வரவில்லை. அதனால் அந்த டாக்டருக்கு இன்னும் கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை. மேலும் இருதயவியல் துறை கட்டடத்துக்கும் சீல் வைக்கப்படவில்லை. அங்கு கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் நடந்துவருகின்றன. இன்னும் 2 தினங்களில் அந்தக்கட்டடம் வழக்கம்போல செயல்படத் தொடங்கும். சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையிலிருந்து இன்று 2 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு