Published:Updated:

மூக்கில் ரத்தம் வடிய மயங்கிய காவலர், காப்பாற்றிய இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி; என்ன நடந்தது?

சரவணணுக்கு சிகிச்சை வழங்கப்பட்டபோது

``உயர் ரத்த அழுத்தம் இருந்தால், சிலருக்கு மூக்கில் ரத்தம் வர ஆரம்பிக்கும். முதல் முறை மூக்கிலிருந்து ரத்தம் வரும்போதே, சிகிச்சை எடுத்துக்கொள்வது நல்லது. காவலர் சரவணன், மூக்கில் ரத்தம் வடிதலை பலமுறை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார்."

மூக்கில் ரத்தம் வடிய மயங்கிய காவலர், காப்பாற்றிய இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி; என்ன நடந்தது?

``உயர் ரத்த அழுத்தம் இருந்தால், சிலருக்கு மூக்கில் ரத்தம் வர ஆரம்பிக்கும். முதல் முறை மூக்கிலிருந்து ரத்தம் வரும்போதே, சிகிச்சை எடுத்துக்கொள்வது நல்லது. காவலர் சரவணன், மூக்கில் ரத்தம் வடிதலை பலமுறை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார்."

Published:Updated:
சரவணணுக்கு சிகிச்சை வழங்கப்பட்டபோது

சென்னை டி.பி சத்திரம் காவல் ஆய்வாவர் ராஜேஸ்வரி, சென்னை பட்டினப்பாக்கத்தின் காவலர் சரவணனின் உயிரைக் காப்பாற்றிய செய்தி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இது குறித்து இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரியிடம் பேசினோம். ``சனிக்கிழமை இரவு, சென்னை, பட்டினப்பாக்கத்தின் காவலர் சரவணன், மூக்கில் ரத்தம் வடிய வந்தார்.

பதறிப்போய், `எங்கேயாவது விழுந்துட்டியா... யாரும் அடிச்சுட்டாங்களா'னு கேட்டேன். அதுக்கு சரவணன், `இல்லம்மா திடீர்னு மூக்குலேருந்து ரத்தம் வருது. ஏற்கெனவே சில முறை இதே மாதிரி ரத்தம் வந்துச்சு. கொஞ்ச நேரத்துல தானா சரியாயிரும். இப்பவும் சரியாகிரும்னு நினைச்சேன். ஆனா, ரத்தம் வர்றது நிக்கல. உசுருக்கு ஆபத்தான்னும் தெரியல. பயமா இருக்கு. உங்ககிட்ட சொன்னா ஏதாவது உதவி பண்ணுவீங்கன்னு நினைச்சு இங்க வந்தேன்'னு சொன்னாரு.

ராஜேஸ்வரி
ராஜேஸ்வரி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நிலைமையைப் புரிஞ்சுக்கிறதுக்குக்குள்ள சரவணன் மயங்கி விழுந்துட்டார். ஆம்புலன்ஸுக்கு போன் பண்ணா எப்படியும் அஞ்சு நிமிஷமாவது காத்துட்டு இருக்கணும். அதனால், எனக்கு கொடுத்திருக்குற காவல்துறை வாகனத்துல ஏத்திக்கிட்டு, மைலாப்பூர்ல உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு வந்துட்டேன். அந்த மருத்துவமனையில முதலுதவி செய்து அபிராமபுரத்துல உள்ள காது, மூக்கு, தொண்டை மருத்துவமனைக்கு அனுப்பி வெச்சாங்க. அங்கே சரவணனுக்கு சிகிச்சை கொடுத்தாங்க.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சிகிச்சை முடிச்சுட்டு வந்த டாக்டர், `உயர் ரத்த அழுத்தம் காரணமாக மூக்குல ரத்தம் வர ஆரம்பிச்சிருக்கு. சரியான நேரத்துக்குக் கூட்டிட்டு வந்திருக்கீங்க. கொஞ்சம் லேட்டாகியிருந்தாகூட, மூளைக்குப் போற நரம்பு வெடிச்சு உயிர்ச் சேதம் ஏற்பட்டிருக்க வாய்ப்பு அதிகம்'னு சொன்னார்.

சக காவலருடன் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி
சக காவலருடன் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி

சரவணன் சென்னையில் தனியா வாழ்ந்துகிட்டு இருக்காரு. அவர் கூட இருந்து கவனிச்சுக்க யாரும் இல்ல. அதனால மறுநாள் காலையில மருத்துவமனைக்கான கட்டணத்தைக் கட்ட நான் போயிருந்தேன். என் கூட வேலை செய்யுற சக காவலர் பில்லை என்கிட்ட கொடுத்தார். அதுல, சரவணனின் பெயர் மட்டும் எழுதப்பட்டு இருந்தது. கட்டணம் எதுவும் குறிப்பிடலை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மருத்துவமனையில விசாரிச்சப்ப, மருத்துவர் மோகன் காமேஸ்வரனின் மனைவியை எனக்கு அறிமுகம் பண்ணாங்க. அவங்ககிட்ட , `பில் கட்டணும், தொகை எவ்வளவுனு சொல்லலையே'னு கேட்டேன். எதுவும் பேசாம, இறுக்கமா கட்டிப்பிடிச்சு, `காவல்துறை மக்களுக்காக எவ்வளவோ தொண்டு செய்றீங்க. இது அதுக்கான நன்றிக்கடன். பணம் எதுவும் வேண்டாம். சக காவலரை நீங்க கவனிச்சுக்கிட்ட விதம் மெய்சிலிர்க்க வைக்குது'னு சொன்னாங்க. சில நிமிடங்கள் ஆச்சர்யமாக இருந்தாலும், மனிதம் இன்னும் கொண்டாடப் படுதுனு தோணுச்சு" என்று நடந்த விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி

மோகன் காமேஸ்வரனின் மனைவியுடன் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி
மோகன் காமேஸ்வரனின் மனைவியுடன் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி

இது குறித்து, காவலர் சரவணனுக்கு இலவசமாக சிகிச்சை அளித்த மருத்துவர், மோகன் காமேஸ்வரனிடம் பேசினோம். ``உயர் ரத்த அழுத்தம் இருந்தால், சிலருக்கு மூக்கில் ரத்தம் வர ஆரம்பிக்கும். முதல் முறை மூக்கிலிருந்து ரத்தம் வரும்போதே, சிகிச்சை எடுத்துக்கொள்வது நல்லது. காவலர் சரவணன், மூக்கில் ரத்தம் வடிதலை பலமுறை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார். இதனால் ஆபத்தான நிலையில்தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை வழங்கினேன். காவல்துறை மக்களுக்கு எவ்வளவோ நல்ல விஷயங்களைச் செய்கிறார்கள், அவர்களுக்கு நன்றி செய்யும் விதமாகக் கட்டணம் வாங்காமல் சிகிச்சை வழங்கினோம். இதை மனித நேயமாகவே பார்க்கிறேன்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism