Published:Updated:

`மலேசியா பயணம்; தனிமைப்படுத்தல்!’ - சென்னை மருத்துவ மாணவி மரணத்தில் திடீர் திருப்பம்

மருத்துவக்கல்லூரி மாணவி பிரதீபா
மருத்துவக்கல்லூரி மாணவி பிரதீபா

சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி மாணவி மார்ச் மாதத்தில் மலேசியா சென்றுவந்துள்ளார். பின்னர் அவர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார் என்ற புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரி, சி.எம்.சி காலனியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரின் மகள் பிரதீபா (22). இவர், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரியில் இறுதியாண்டு படித்துவந்தார். பயிற்சி டாக்டராகச் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை லேபர் வார்டில் பணியாற்றிவந்தார். ஊரடங்கு காரணமாக பிரதீபா, மருத்துவக் கல்லூரி மாணவிகள் விடுதியில் அறை எண் 8-ல் தங்கியிருந்தார்.

2020 மார்ச் மாதம் 20-ம் தேதி மலேசியாவிலிருந்து சென்னைக்கு பிரதீபா வந்திருந்தார். அதனால் அவர், தனிமைப்படுத்தியிருந்தார். ஏப்ரல் 18-ம் தேதி முதல் அவர் பயிற்சி டாக்டராகப் பணியாற்றிவந்தார்.
மாணவியின் தந்தை ரமேஷ்
மாணவி மரணம் தொடர்பான பதிவு
மாணவி மரணம் தொடர்பான பதிவு
`எப்படி இறந்தார் சென்னைப் பயிற்சி டாக்டர் பிரதீபா?' - பிரேதப் பரிசோதனைக்குப் பின்னும் மர்மம்

கடந்த 1-ம் தேதி பிரதீபா, அறையிலிருந்து வெளியில் வரவில்லை. பூட்டிய அறைக்குள் அவர் சடலமாகக் கிடந்தார். இதையடுத்து அறையின் கதவை உடைத்து உள்ளே சென்ற விடுதியின் ஊழியர்கள், பிரதீபாவை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். பயிற்சி மருத்துவரும் மருத்துவக்கல்லூரி மாணவியுமான பிரதீபாவின் மரணத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. பிரேதப் பரிசோதனையின் முதற்கட்ட தகவலில் பிரதீபா, விஷம் குடித்து தற்கொலை செய்ததற்கான அறிகுறிகள் இல்லை என்று தெரியவந்தது. சடலத்தில் காயங்களும் இல்லை. அதனால் அவரின் மரணத்துக்கான காரணம் தெரியாமல் பிரதீபாவின் பெற்றோரும் குடும்பத்தினரும் போலீஸாரும் குழப்பம் அடைந்தனர்.

பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையிலிருந்து பிரதீபாவின் சடலம் வேலூருக்குக் கொண்டு செல்லப்பட்டு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. பிரதீபாவின் மரணத்துக்கான காரணம் பிரேதப் பரிசோதனையின் அறிக்கையில் தெரியவரும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்தச் சமயத்தில் பிரதீபாவின் அப்பா ரமேஷ் அளித்த புகாரில் புதிய தகவல்கள் உள்ளன. அதன் அடிப்படையில் கீழ்ப்பாக்கம் போலீஸார் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்துள்ளனர்.

எப்.ஐ.ஆர் நகல்
எப்.ஐ.ஆர் நகல்

அதில் கூறியிருப்பதாவது, ``நான் (ரமேஷ்), தனியார் நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றி வருகிறேன். என் மகள் பிரதீபா, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்தார். மார்ச் மாதம் 20-ம் தேதி மலேசியாவிலிருந்து பிரதீபா வந்திருந்தார். அதனால் அவர், தனிமைப்படுத்தியிருந்தார். ஏப்ரல் 18-ம் தேதி முதல் அவர் பயிற்சி டாக்டராகப் பணியாற்றிவந்தார்.

ஊரடங்கு காரணமாக மருத்துவக்கல்லூரி விடுதியில் தங்கியிருந்தார். ஏப்ரல் 29-ம் தேதி முதல் லேபர் வார்டில் பணியாற்றிவந்தார். செல்போனில் எங்களுடன் பிரதீபா பேசிக் கொண்டிருந்தார். அப்போது வேளைப்பளு காரணமாக சரியாகச் சாப்பிட முடியவில்லை என்று போனில் எங்களுடன் தெரிவித்தார். சில நாள்கள் வேலைப்பளு காரணமாக சாப்பிடாமல் இருந்துள்ளார்.

`விடுதியில் மர்மமாக இறந்த மருத்துவ மாணவி' -அதிர்ச்சியில் சென்னை அரசு மருத்துவக் கல்லூரி நிர்வாகம்
பிரதீபா
பிரதீபா

ஏப்ரல் 30-ம் தேதி இரவு 9.15 மணிக்கு போனில் எங்களுடன் பிரதீபா பேசினார். அப்போது அவர், டின்னர் முடித்துவிட்டதாகவும் தனக்கு காலில் வீக்கம் இருப்பதாகவும் கூறினார். அதைக் கேட்ட பிரதீபாவின் அம்மா, ஓய்வெடுக்கும்படி கூறினார். மே 1-ம் தேதி பிரதீபா, சுயநினைவில்லாமல் இருப்பதாக எங்களுக்கு போனில் தகவல் வந்தது" என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் பயிற்சி மருத்துவர் பிரதீபா, மரணத்துக்கு கொரோனா காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தவுடன் அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவில் பிரதீபாவுக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியானது. அவரின் பிரேதப் பரிசோதனை அறிக்கைக்காக போலீஸாரும் பெற்றோரும் காத்திருக்கின்றனர். விரிவான பிரேத பரிசோனை அறிக்கையில் பிரதீபாவின் மரணத்தில் மறைந்துள்ள மர்ம முடிச்சுக்கள் அவிழும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு