Published:Updated:

``நவம்பர் 9-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும்!" - வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை

நவம்பர் 9-ம் தேதி, இலங்கையை ஒட்டியுள்ள தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

``நவம்பர் 9-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும்!" - வானிலை ஆய்வு மையம் தகவல்

நவம்பர் 9-ம் தேதி, இலங்கையை ஒட்டியுள்ள தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Published:Updated:
மழை

வடகிழக்குப் பருவமழை தமிழகம், புதுவை, காரைக்காலில் தீவிரமடைந்துவருகிறது. இதன் காரணமாக பல இடங்களில் மழை பெய்துவருகிறது. இந்த நிலையில், வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில், ``கடந்த 24 மணி நேரத்தில் பரவலாக மழை பெய்திருக்கிறது. 12 இடங்களில் கனமழை பதிவாகியிருக்கிறது. அதிகபட்சமாக சென்னை தண்டையார்பேட்டையில் 14 செ.மீ மழை பதிவாகியிருக்கிறது. தமிழகத்தில் நிலவிவந்த மேலடுக்கு சுழற்சி மேற்கு திசையில் நகர்ந்து கேரளா பகுதிகளுக்கு மேல் நிலவுகிறது.

சென்னை கனமழை
சென்னை கனமழை

அடுத்த மூன்று தினங்களுக்குப் பரவலாக அநேக இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். கனமழையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்துக்கு, மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியிருக்கும் குமரி, நெல்லை, நீலகிரி, கோவை, திண்டுக்கல், தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும்... திருச்சி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். தற்போதைய வானிலை நிலவரப்படி, வரும் நவம்பர் 9-ம் தேதி இலங்கையை ஒட்டியிருக்கும் தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். இது, வரும் நவம்பர் 10, 11-ம் தேதிகளில் வடமேற்கு திசையில் தமிழகம், புதுவை கடற்கரையில் நகரக்கூடும். காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலை மற்றும் நகர்வு குறித்துத் தொடர்ந்து கண்காணித்து தகவல் தெரிவிக்கப்படும்.

சென்னை கனமழை
சென்னை கனமழை

மீனவர்கள் வரும் நவம்பர் 8, 9-ம் தேதிகளில் தென் மேற்கு வங்கக்கடல், மத்திய மேற்கு வங்கக் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். வடகிழக்குப் பருவமழையைப் பொறுத்தவரை, கடந்த அக்டோபர் 1-ம் தேதி முதல் நவம்பர் 4-ம் தேதி வரை 210 மி.மீ மழை பதிவாகியிருக்கிறது. இந்த காலகட்டத்தில் இயல்பு மழை 202 மி.மீ ஆகும். இது இயல்பைவிட நான்கு சதவிகிதம் அதிகம். அதேபோல, சென்னையைப் பொறுத்தவரை, கடந்த 31-ம் தேதிவரை, பதிவான மழையின் அளவு 413 மி.மீ இது இயல்பை (325 மி.மீ) விட 25 சதவிகிதம் அதிகம்" என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருக்கிறது.