Published:Updated:

`அடுத்த 24 மணி நேரத்துக்கு தமிழகத்தில் மழை நிலவரம் என்ன?!' - வானிலை ஆய்வு மையம் தகவல்

வானிலை ஆய்வு மையம்
News
வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் மேலடுக்குச் சுழற்சியின் காரணமாக, கடலோர மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் மேலடுக்குச் சுழற்சியின் காரணமாக, கடலோர மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது. ராமநாதபுரம், தூத்துக்குடி, புதுக்கோட்டை, நாகப்பட்டினம், நெல்லை ஆகிய மாவட்டங்களில் நேற்று முதல் கனமழை பெய்துவருகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலும் இன்று காலை முதல் ஆங்காங்கே கனமழை பெய்துகொண்டிருக்கிறது. இந்த நிலையில், வரும் 29-ம் தேதி அந்தமான் அருகே புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் என்றும், அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை வரை பெய்வதற்கு வாய்ப்பிருப்பதாகவும், சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருக்கிறது.

மழை
மழை

இது தொடர்பாகச் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், ``கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்திலும் புதுச்சேரியிலும் மிதமானது முதல் கனமழை வரை பதிவாகியிருக்கிறது. வடகிழக்குப் பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்திருப்பதால், கடந்த 25 மணி நேரத்தில் மூன்று இடங்களில் அதி கனமழையும், நான்கு இடங்களில் கனமழையும், 70 இடங்களில் மிதமான மழையும் பதிவாகியிருக்கின்றன. அதிகபட்சமாகத் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் பகுதியில் 31 செ.மீ மழை பதிவாகியிருக்கிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
வானிலை ஆய்வு மையம்
வானிலை ஆய்வு மையம்

அடுத்த 24 மணி நேரத்தைப் பொறுத்தவரையில், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, திருவண்ணாமலை, ராமநாதபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், அதி கனமழையும் பெய்யக்கூடும். அதேபோல, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மதுரை, தென்காசி, திண்டுக்கல், தேனியிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளிலும் மிதமானது முதல் கனமழை பெய்யக்கூடும்" என்றார்.