Published:Updated:

மெட்ரோ பணிகளுக்காக கமல் ஹாசனின் ராஜ் கமல் தயாரிப்பு நிறுவனத்தின் நிலம் எடுக்கப்படுகிறதா?

Kamal Haasan

மெட்ரோ ரயில் பணிகளுக்காக நடிகர் கமல் ஹாசனின் ராஜ் கமல் தயாரிப்பு நிறுவனத்தின் நிலம் எடுக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை நகரில் ஆங்காங்கே இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த இரண்டாம் கட்ட திட்டத்தில் மட்டும் மொத்தம் 120 புதிய மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. இதன் ஒரு பகுதியாக நான்காம் மெட்ரோ வழித்தடம் கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரை மொத்தம் 30 நிலையங்களுடன் அமையவுள்ளது. தற்போது, இந்த வழித்தடத்தில் அமையவுள்ள பாரதிதாசன் சாலை மெட்ரோ நிலையத்திற்கான நிலம் எடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

சென்னை மெட்ரோ
சென்னை மெட்ரோ

இந்நிலையில் மெட்ரோ வழித்தடத்திற்கான சாலை ராஜ் கமல் தயாரிப்பு நிறுவனத்தின் நுழைவுவாயில் நிலத்தின் அருகில் அமைவதால், ராஜ் கமல் நிறுவனத்திற்குச் சொந்தமான 600 Sq.Ft (24.5 அடி) நிலத்தை எடுத்துக்கொள்ளப் போவதாக சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த அறிவிப்பின்படி மெட்ரோ ரயில் சார்பில் எடுக்கப்படும் நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!