Published:Updated:

சென்னை மெட்ரோவில் அதிகபட்ச கட்டணம் 50 ரூபாய்!

சென்னை மெட்ரோ ரயில்
சென்னை மெட்ரோ ரயில்

அதிகபட்ச கட்டணம் 50 ரூபாயாக இருக்கும் வகையில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

சென்னை மெட்ரோ ரயில் கட்டணத்தைக் குறைத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருக்கிறார். அதிகபட்ச கட்டணம் 50 ரூபாயாக மட்டுமே இருக்கும் வகையில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலில் மக்கள் விரைவாக அலுவலகம் சென்றடைவதற்காக, கடந்த ஐந்து ஆண்டுகளாக மெட்ரோ ரயில் சேவையை மக்கள் பயன்படுத்திவருகின்றனர். சென்னை மெட்ரோ ரயிலின் முதற்கட்டம் 54 கிலோமீட்டருக்கு முடிக்கப்பட்டு பயணிகள் சேவை நடைபெற்றுவருகிறது. மெட்ரோ ரயில் கட்டணம் அதிகமாக இருப்பதாகவும், அதைக் குறைக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுப்பப்பட்டுவந்தன. இந்தக் கோரிக்கைகளை ஏற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மெட்ரோ ரயில் கட்டணத்தைக் குறைத்து உத்தரவிட்டிருக்கிறார்.

மெட்ரோ கட்டணம்
மெட்ரோ கட்டணம்

4 கிலோமீட்டர் வரை 20 ரூபாய் கட்டணம் இருந்தநிலையில், தற்போது 20 ரூபாய் கட்டணத்தில் 5 கிலோமீட்டர் வரை பயணிக்கலாம். அதேபோல், 30 ரூபாய் கட்டணத்தில் 6 கிலோமீட்டர் வரை பயணிக்கலாம் என்ற நிலையில், தற்போது 30 ரூபாய் கட்டணத்தில் 12 கிலோமீட்டர் வரை பயணிக்கலாம். அதாவது, பழைய கட்டணத்தில் தற்போது இருமடங்கு தூரம் பயணம் மேற்கொள்ளும் வகையில் புதிய கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. 50 ரூபாய் கட்டணத்தில் 18 கிலோமீட்டர் வரை பயணிக்கலாம் என்ற நிலையில் தற்போது 50 ரூபாய் கட்டணத்தில் 32 கிலோமீட்டர் வரை பயணிக்கலாம். மேலும், அதிகபட்ச கட்டணம் 70 ரூபாயாக இருந்தது, தற்போது அதிகபட்சக் கட்டணம் வெறும் 50 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

`உள்நாட்டு தொழில்நுட்பத்தில்  ஓட்டுநர் இல்லா முதல் மெட்ரோ ரயில்!’- அறிமுகம் செய்த ராஜ்நாத் சிங்
அடுத்த கட்டுரைக்கு