Published:Updated:

Chennai Rains: வேலை செய்யாத வெள்ள அபாய டோல் ஃப்ரீ நம்பர்கள்; அவதிக்குள்ளாகும் பொதுமக்கள்!

2015-ம் ஆண்டின் பெருவெள்ள பயத்தை இன்னமும் மறக்காத சென்னை மக்களுக்கு, உதவி செய்யாத இந்த ஹெல்ப் லைன் எண்களால் என்ன பலன் என்றுதான் தெரியவில்லை.

வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, வட தமிழகம் மற்றும் அதையொட்டியுள்ள கடலோரப் பகுதிகளில் இன்று (07.11.2021) முதல் 11.11.2021 தேதி வரை இடி மின்னலுடன்கூடிய கனமழை முதல் மிகக் கன மழையும் சில நேரங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை கனமழை
சென்னை கனமழை
`அடுத்த 4 நாள்களுக்குத் தொடர் கனமழை எச்சரிக்கை!' - வானிலை ஆய்வு மையம்

இந்நிலையில், `வெள்ள அபாயம் தொடர்பான பிரச்னைகளுக்கு இந்த எண்களைத் தொடர்பு கொள்ளுங்கள்' என்ற வாசகங்களுடன் Greater Chennai Corporation-ன் டோல் ஃப்ரீ எண் 1913, `உங்கள் பகுதியில் வெள்ள அபாயம் ஏற்பட்டால் வாட்ஸ்அப் மெசேஜ் செய்யுங்கள்' என 94454 77205 என்கிற எண்ணும், இவற்றுடன் 044 2561 9206, 044 2561 9207, 044 2561 9208 ஆகிய தொலைபேசி எண்களும் சமூக வலைதளமெங்கும் பகிரப்பட்டு வருகின்றன. ஆனால், இதில் எந்த நம்பரும் ரிங் போகவில்லை. வாட்ஸ்அப் எண்ணுக்கு மெசேஜ் செய்தால் பார்க்கவும் இல்லை. அதே எண்ணுக்கு வாட்ஸ்அப் கால் செய்தாலும் எடுக்கவில்லை. 1913-க்கு போன் செய்தால் Chennai tourist enquiry என்று காட்டுகிறது. தவிர, அந்த எண்ணையும் யாரும் எடுக்கவில்லை.

தவிர, தமிழ்நாடு மாநில பேரிடர் மேனேஜ்மென்ட் அத்தாரிட்டியின் (TN SDMA ) ட்விட்டர் பக்கத்தில், ஸ்டேட் ஹெல்ப் லைன் என 1070 என்கிற நம்பரும், ஹெல்ப் லைனுக்கான வாட்ஸ் அப் நம்பர் என 94458 69848-ம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த வாட்ஸ்அப் நம்பருக்கு மெசேஜ் செய்தாலும், என்ன பிரச்னை எனக் கேட்டு எந்தப் பதிலும் வரவில்லை.

சென்னை கனமழை
சென்னை கனமழை
ரெட் அலர்ட்: `தொடரும் கனமழை... திறக்கப்படும் ஏரிகள்!'- வானிலை மையம் எச்சரிக்கை!

1070 என்ற எண்ணுக்கு போன் செய்தால், வெள்ள அபாயத்துக்கு எண் ஒன்றை அழுத்தவும், கொரோனாவுக்கு எண் இரண்டை அழுத்தவும் என ரெக்கார்ட் செய்யப்பட்ட குரல் பேசுகிறது. 2015-ம் ஆண்டின் பெருவெள்ள பயத்தை இன்னமும் மறக்காத சென்னை மக்களுக்கு, உதவி செய்யாத இந்த ஹெல்ப் லைன் எண்களால் என்ன பலன் என்றுதான் தெரியவில்லை.

இது தொடர்பாக சம்பத்தப்பட்ட அரசு அதிகாரிகளைத் தொடர்பு கொண்டுவருகிறோம். தகவல் விரைவில் அப்டேட் செய்யப்படும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு