Published:Updated:

``ஏதேச்சையாகப் பேசினேன், எமோஷனலாகிவிட்டேன்" - சென்னையில் காலில் விழுவதாகக் கூறிய போலீஸ் எஸ்.ஐ ரஷீத்

போலீஸ் எஸ்.எஸ்.ஐ ரஷீத்
போலீஸ் எஸ்.எஸ்.ஐ ரஷீத்

``முதலில் ஏதேச்சையாகப் பேசத் தொடங்கினேன். ஆனால் ஒருக்கட்டத்தில், என்னை அறியாமல் எமோஷனலாகிவிட்டேன்" என்று சென்னையில் காலி விழுவதாகக் கூறிய போலீஸ் எஸ்.எஸ்.ஐ ரஷீத் நம்மிடம் தெரிவித்தார்.

சென்னை அண்ணா சாலை, ஸ்பென்ஸர் பிளாசா சிக்னலில், நேற்று போக்குவரத்தை ஒழுங்கும்படுத்தும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார், போக்குவரத்துப் பிரிவு போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் (எஸ்.எஸ்.ஐ) ரஷீத். கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் நேற்று காலை அண்ணா சாலை ஸ்பென்ஸர் பிளாசா பகுதியில் ஏராளமானவர்கள் வாகனங்களில் வந்தனர். அதைப் பார்த்த போலீஸ் எஸ்.எஸ்.ஐ ரஷீத், `இத்தனைபேர் வந்தால், எப்படி கொரோனா தொற்றிலிருந்து நம்முடைய நாட்டையும் மக்களையும் காப்பாற்ற முடியும்?' என வாகனங்களில் வந்தவர்களைப் பார்த்துக் கூறினார். `உங்கள் காலைத் தொட்டு வணங்குகிறேன், தயவு செய்து வீட்டை விட்டு வெளியில் வராதீங்க' என்று கண்ணீர்மல்க ரஷீத் கூறினார். இந்த வீடியோ காட்சி வெளியாகி, சமூக வலைதளங்களில் வைரலாகியது. இதுதொடர்பாக செய்திகளும் வெளியாகின.

போலீஸ் எஸ்.எஸ்.ஐ ரஷீத்
போலீஸ் எஸ்.எஸ்.ஐ ரஷீத்

போக்குவரத்துப் பிரிவு போலீஸ் எஸ்.எஸ்.ஐ ரஷீத்திடம் பேசினோம்.

``என்னுடைய சொந்த ஊர் திருவண்ணாமலை. நான் பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளேன். கடந்த 1995-ம் ஆண்டு தமிழக காவல்துறையில் காவலராகப் பணிக்குச் சேர்ந்தேன். ஆவடி வீராபுரத்தில் உள்ள 8-வது பட்டாலியனில் முதலில் பணியாற்றினேன்.

பின்னர், சென்னை காவல்துறையில் மோட்டர் பிரிவில் பணிபுரிந்தேன். 2009-ல் போக்குவரத்துப் பிரிவுக்கு வந்தேன். தற்போது, 2 ஆண்டுகளாக அண்ணாசாலை போக்குவரத்துப் பிரிவில் பணியாற்றிவருகிறேன். நேற்று (25.3.2020) நான் அண்ணா சாலை, ஸ்பென்ஸர் பிளாசாவில் பணியில் இருந்தபோது, என்னுடைய உயரதிகாரி, அண்ணாசாலையில் செல்லும் வாகனங்களின் வேகத்தைக் குறைக்க வாகனத் தடுப்புகளை ஏற்படுத்துமாறு கூறினார். உடனே நானும் சக காவலர்களும் சேர்ந்து தடுப்புகளை அண்ணா சாலையில் வைத்துக் கொண்டிருந்தோம்.

போலீஸ் எஸ்.எஸ்.ஐ ரஷீத்
போலீஸ் எஸ்.எஸ்.ஐ ரஷீத்

அப்போது வாகனங்களில் பலர் வந்தனர். அவர்களிடம், 144 தடை உத்தரவு போட்ட பிறகும் எதற்காக இத்தனை பேர் வீட்டை விட்டு வெளியில் வருகிறீர்கள் என்று ஏதேச்சையாக பேசத் தொடங்கினேன். அதைக் கேட்ட சிலர், வெளியில் வந்ததற்கான காரணத்தை என்னிடம் கூறினர். அவர்களிடம், மக்கள்தொகை அதிகம் உள்ள நம்முடைய நாட்டில், கொரோனா பாதிப்பைத் தடுக்கத்தான் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் தயவு செய்து வீட்டை விட்டு வெளியில் வராதீங்க என்று சொன்னேன். இப்படி பேசிக்கொண்டிருக்கும்போது, என்னையே அறியாமல் எமோஷனலாகிவிட்டேன். அதனால்தான் என் கண்களிலிருந்து கண்ணீர் வந்துவிட்டது" என்றார்.

நீங்கள் பொதுமக்களிடம் உணர்ச்சி பொங்கப் பேசிய தகவல் வெளியான பிறகு, அதிகாரிகள் உங்களிடம் என்ன சொன்னார்கள்?

நான் காவல் துறையில் 95-ம் ஆண்டு முதல் பணியாற்றிவருகிறேன். இத்தனை ஆண்டுகள் மக்களுக்கு என்னால் முடிந்த அளவுக்கு சிறப்பான சேவைகளைச் செய்துவருகிறேன். நேற்று நான் பேசியதைக் கேட்ட சக காவலர்கள், அதிகாரிகள் போன் மூலம் எனக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

சாதாரணமாக நான் பேசிக்கொண்டிருக்கும்போது, அதைக் கேட்ட வாகன ஓட்டி ஒருவர், தன்னையறியாமல் என்னிடம் கை கொடுக்க வந்தார். நான் கை கொடுக்கவில்லை. அவர் என் காலில் விழ வந்தார். அதைப் பார்த்த நான் விலகிவிட்டேன் .
போலீஸ் எஸ்.எஸ்.ஐ ரஷீத்
போலீஸ் எஸ்.எஸ்.ஐ ரஷீத்
போலீஸ் எஸ்.எஸ்.ஐ ரஷீத்

காவல் துறை பணியில் எப்படிச் சேர்ந்தீர்கள்

பத்தாம் வகுப்பு படித்த பிறகு குடும்பச் சூழல் காரணமாக காவல்துறையில் சேர விண்ணப்பித்தேன். காவலராக பணிக்குச் சேர்ந்தேன். எனக்கு லட்சியம் என்று எதுவும் இல்லை. ஒவ்வொருவருக்கும் இறைவன் ஒரு வேலையைக் கொடுத்திருப்பான். அதைப்போலதான் எனக்கு காவல் பணியைக் கொடுத்திருக்கிறான். மக்களுக்கு சேவை செய்யும் இந்தப் பணி எனக்கு மன நிம்மதியைத் தருகிறது.

`உங்கள் காலைத் தொட்டு வணங்குகிறேன்; வெளியில் வராதீங்க'- சென்னையில் கண்ணீர்விட்ட போலீஸ் எஸ்.ஐ #Corona

உங்கள் குடும்பத்தைப் பற்றி சொல்லுங்கள்

கொரோனா 144 தடை உத்தரவு... சென்னை மாநகராட்சியின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன?

என் மனைவியின் பெயர் பேகம். ஒரு மகள், மகன் உள்ளனர். ஆயிரம் விளக்கு காவலர் குடியிருப்பில் குடியிருந்துவருகிறேன். எனக்கு இப்போது 50 வயதாகுகிறது.

உங்களின் பேச்சு குறித்து மனைவி, குழந்தைகள் என்ன சொன்னார்கள்.

`10 நாள்கள்; பல்வேறு நிகழ்ச்சிகள்!’ - சேலத்தில் 5 பேருக்கு உறுதி செய்யப்பட்ட கொரோனா தொற்று

நீங்கள் ஒருநாளும் இப்படிப் பேச மாட்டீர்களே, ஏன் இப்படிப் பேசினீர்கள் என்று கேட்டனர். நான், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தத்தான் அப்படிப் பேசினேன் என்று கூறினேன். அனைத்து செய்திகளிலும் நான் பேசிய தகவல் வந்ததை நானும் பார்த்தேன்.

144 தடை உத்தரவுக்குப் பிறகும் அண்ணா சாலையில் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கிறதா, மக்களுக்கு மீண்டும் என்ன சொல்லப்போகிறீர்கள்...

நேற்று காலை 11 மணி வரை மக்கள் நடமாட்டம் அங்கு இருந்தது. அதன் பிறகு குறைந்துவிட்டது. மக்கள் வீட்டை விட்டு வெளியில் வராமல் இருந்தால் மட்டுமே கொரோனா தொற்று பரவாமல் தடுக்க முடியும். இது நாட்டிற்கு மட்டுமல்ல, நம்முடைய குடும்பத்துக்கும் சமுதாயத்துக்கும், நாம் ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய கடமை. அதனால் தேவையில்லாமல் மக்கள் வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம்.

காவல் துறை பணி எப்படியிருக்கிறது, நீங்கள் பேசும்போது இளைஞர் ஒருவர் உங்கள் காலில் விழுந்தாரே...

`வாழு, வாழ விடு' அன்றே சொன்ன அஜித்தும் ஒரு இலுமினாட்டியா?! - `கொரோனா' கலாய்பீடியா

என்னைப் பொறுத்தவரைக்கும் காவல் துறைப் பணி எனக்கு மகிழ்ச்சியையும் மனநிறைவையும் அளிக்கிறது. ஒவ்வொரு பணிக்கும் ஒரு சிறப்பு இருக்கிறது. மக்களுடன் நேரடியாகத் தொடர்புகொள்ளும் பணிகளில் காவல் பணியும் ஒன்று. நேற்று, சாதாரணமாக நான் பேசிக்கொண்டிருக்கும்போது, அதைக் கேட்ட வாகன ஓட்டி ஒருவர், தன்னையறியாமல் என்னிடம் கை கொடுக்க வந்தார். நான் கை கொடுக்கவில்லை. அவர் என் காலில் விழ வந்தார். அதைப் பார்த்த நான் விலகிவிட்டேன் . மறுபடியும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன், மக்களே நீங்கள் உங்களை தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள். தயவுசெய்து தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள். வீட்டை விட்டு வெளியில் வராதீங்க சாமி!

அடுத்த கட்டுரைக்கு