Published:Updated:

`2,636 எலியை பிடிக்க 5.89 கோடி செலவு!'- அதிர்ச்சி கொடுத்த தென்னக ரயில்வே

ஓர் எலியைப் பிடிக்க 22,334 ரூபாய் செலவளித்ததாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு, தென்னக ரயில்வேயின் சென்னை மண்டலம் பதில் கொடுத்திருக்கிறது.

எலி
எலி ( Pixabay )

கடந்த ஜூலை மாதம் 17-ம் தேதி கேட்கப்பட்ட கேள்விக்கு, பதில் அளித்த தென்னக ரயில்வேயின் சென்னை மண்டல அதிகாரிகள், ``கடந்த சில ஆண்டுகளாகவே எலித்தொல்லை அதிகமாக உள்ளது. அதனால், மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். எலிகளால் பல்வேறு சேதங்களையும் ரயில்வே துறை சந்தித்துள்ளது. மேலும், எலிகளை ஒழிக்க எங்கள் அதிகாரிகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டும் வருகின்றனர்'' என்று சொல்லியிருக்கிறார்கள்.

ரயில்
ரயில்

கடந்த மூன்றாண்டுகளில் அதாவது, மே மாதம் 2016 முதல் ஏப்ரல் 2019 வரை மட்டுமே எலிகளை ஒழிக்க சென்னை மண்டல ரயில்வே சுமார் 5.89 கோடி ரூபாய் செலவழித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

அதில், கடந்த ஆண்டு மட்டும் குறைந்தபட்சமாக 2,636 எலிகளைப் பிடித்துள்ளதாகவும் அதில், 1,715 எலிகள் சென்னை சென்ட்ரல், எழும்பூர், செங்கல்பட்டு, தாம்பரம் மற்றும் ஜோலார்பேட்டை போன்ற பகுதிகளிலிருந்தும் மீதம் 921 எலிகளை ரயில்வே துறை பயிற்சி மையங்களிலும் பிடித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

`ரூ.25 லட்சத்துக்கு காப்பீடு; தாமதமானால் இழப்பீடு!’ - இந்தியாவின் முதல் கார்ப்பரேட் ரயில்

தோராயமாக, ஒரு எலியைப் பிடிக்க 22,334 ரூபாய் செலவளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. ஒரு எலியைப் பிடிக்க செலவு ரூபாய் 22,334 என ரயில்வே கூறும் இந்தக் கூற்றானது, மக்களுக்கு ஏற்புடையதாக இல்லை. ஒரு எலிக்கு அவ்வளவு செலவு செய்யும் ரயில்வே, மற்ற விஷயங்களிலும் கவனம் செலுத்த வேண்டும். இன்னும்கூடப் பல ரயில் நிலையங்களில் குடிநீர் வசதி, நிழற்குடை வசதி போன்றவை முறையாக இல்லை.

ரயில்வே
ரயில்வே

மேலும், இந்திய ரயில்வே துறையின் மிக அசுத்தமான ரயில்வே நிலையங்கள் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தைப் பெற்று வருகிறது சென்னை மண்டலம்.