Published:Updated:

தாம்பரம் அரசு மருத்துவமனைக்குள் புகுந்த மழைநீர்... அவதிக்குள்ளான நோயாளிகள்!

தாம்பரம் அரசு மருத்துவமனையில் மழைநீர்

தாம்பரம் அரசு மருத்துவமனையில் மழைநீர் புகுந்ததால், சிகிச்சை பெற்றுவந்தவர்கள் அவதிக்குள்ளாகியிருக்கின்றனர்.

தாம்பரம் அரசு மருத்துவமனைக்குள் புகுந்த மழைநீர்... அவதிக்குள்ளான நோயாளிகள்!

தாம்பரம் அரசு மருத்துவமனையில் மழைநீர் புகுந்ததால், சிகிச்சை பெற்றுவந்தவர்கள் அவதிக்குள்ளாகியிருக்கின்றனர்.

Published:Updated:
தாம்பரம் அரசு மருத்துவமனையில் மழைநீர்

சென்னையின் பல்வேறு பகுதிகளில், நேற்று இரவு முழுவதும் கனமழை கொட்டித் தீர்த்தது. அதிகாலையில் சற்றுக் குறைந்திருந்த மழை, தற்போது மீண்டும் வேகமெடுக்கத் தொடங்கியிருக்கிறது. கனமழை காரணமாகப் பல்வேறு பகுதிகளிலும் மழைநீர் தேங்கி நிற்கிறது. சில இடங்களில் வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்துவிட்ட காரணத்தால் மக்கள் அவதிக்குள்ளாகியிருக்கின்றனர்.

இந்த நிலையில், தாம்பரம் அரசு மருத்துவமனையில் இன்று காலை மழைநீர் புகுந்துவிட்டது. இதனால் அங்கு சிகிச்சை பெற்றுவந்த நோயாளிகள் பலரும் கடும் அவதிக்கு ஆளாகியிருக்கின்றனர். கீழ்த்தளம் முழுவதும் முழங்காலுக்கு மேல் தண்ணீர் நிற்பதால், சிகிச்சை பெற்றுவருபவர்களை இடமாற்றம் செய்திருக்கின்றனர். நோயாளிகள் சிலரை மேல் தளத்துக்கும், சிலரை வேறு மருத்துவமனைக்கும் மாற்றியிருக்கின்றனர். மழைநீர் புகுந்ததால் புதிதாகச் சிகிச்சைக்கு வருபவர்களை அனுமதிக்க முடியாத சூழல் அங்கு ஏற்பட்டிருக்கிறது.

தாம்பரம் அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்த ராதாகிருஷ்ணன்
தாம்பரம் அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்த ராதாகிருஷ்ணன்

இதையடுத்து, தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு வந்த தமிழக சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன், அங்கு ஆய்வு மேற்கொண்டார். தற்போது மருத்துவமனைக்குள் புகுந்த வெள்ள நீரை வெளியேற்றும் பணிகள் தொடங்கப்பட்டிருக்கின்றன.