Published:Updated:

கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி: முதல் இரண்டு இடங்களில் சென்னை, நெல்லை மருத்துவக்கல்லூரிகள்!

கொரோனா தடுப்பூசி போடும் பணி
கொரோனா தடுப்பூசி போடும் பணி

பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு கொரோனா தடுப்பூசி திட்டத்தை சென்னை மற்றும் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மையங்கள் சிறப்பாகச் செயல்படுத்தி வருகின்றன.

கொரோனா அச்சுறுத்தலில் இருந்து மக்களைப் பாதுகாக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு அறிவித்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. பின்னர், கொரோனா தாக்கம் குறைத் தொடங்கியதும் படிப்படியாக ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் முதல் அலையின்போது தடுப்பூசிகள் இல்லாததால் தனிநபர் இடைவெளி மற்றும் முகக்கவசம் மூலமாக மட்டுமே கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தடுப்பூசி மையத்தில் உள்ள கூட்டம்
தடுப்பூசி மையத்தில் உள்ள கூட்டம்
கோவாக்சின் இரண்டாவது டோஸ் கிடைக்காமல் அல்லாடும் மதுரை மக்கள்; நடவடிக்கை எடுக்குமா அரசு?

கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் தீவிரம் அடைந்ததால் மீண்டும் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டது. ஏற்கெனவே ஓராண்டாக தொழில் நிறுவனங்கள் பெரும் பாதிப்பைச் சந்தித்த நிலையில், 2-ம் அலையின் காரணமாக பெரும் பொருளாதார பின்னடைவு ஏற்பட்டது. இந்த நிலையில், கடந்த மார்ச் மாதத்தில் கொரோனா தடுப்பூசி தயாரிக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.

நெல்லை மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகம், அனைத்துப் பகுதிகளிலும் உள்ள ஆரம்ப சுகாதார மையங்கள், பல்வேறு கிராமங்களின் சிறப்பு மையங்கள் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்களுக்குத் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.

தடுப்பூசி மையம்
தடுப்பூசி மையம்
Covid Questions: தடுப்பூசி போட்டதை உறுதிப்படுத்தும் SMS வரவில்லை; தடுப்பூசிச் சான்றிதழ் கிடைக்குமா?

தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ள பொதுமக்கள் தயக்கம் காட்டிய சூழலில், அவர்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் சுகாதாரத் துறையினர் தீவிர விழிப்புணர்வுப் பணிகளை மேற்கொண்டனர். அதன் பின்னரே பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்கிறார்கள்.

தடுப்பூசி செலுத்தப்பட்ட மையங்களின் பட்டியலில் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முதலிடத்தில் இருக்கிறது. அங்குள்ள மையத்தில் நேற்று வரை 54,000 பேருக்குத் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. ஒரே மையத்தில் அதிக எண்ணிக்கையில் தடுப்பூசி செலுத்தப்பட்ட பட்டியலில் இது முதலிடம் வகிக்கிறது.

ஆர்வத்துடன் திரண்ட மக்கள்
ஆர்வத்துடன் திரண்ட மக்கள்
செங்கல்பட்டு தடுப்பூசி நிறுவனம்:
யாரும் டெண்டர் எடுக்கவில்லை; தமிழக அரசிடம் கொடுக்குமா மோடி அரசு?

நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியில் உள்ள மையத்தில் நேற்று வரை 50,230 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இதன் மூலம் மாநில அளவில் இரண்டாம் இடத்தை நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மையம் பெற்றுள்ளது. தடுப்பூசி குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தியதால் பொதுமக்கள் தடுப்பூசி மையங்களுக்கு ஆர்வத்துடன் வருவதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.

அடுத்த கட்டுரைக்கு