Published:Updated:

`வீட்டுல பாசம்; தேர்தல்ல எதிரும் புதிரா இருந்தோம்!' - கவுன்சிலர்களாகும் சென்னை அக்கா-தம்பி

தம்பியுடன் சங்கீதா

சென்னை மாநகராட்சியின் 31-வது வார்டில் காங்கிரஸ் சார்பில் சங்கீதா பாபுவும், 23-வது வார்டில் சுயேச்சையாகப் போட்டியிட்ட இவரின் தம்பி ராஜன் பர்ணபாஸும் வெற்றி பெற்றுள்ளனர். பாசமலர்கள் இருவரும் தற்போது மாமன்ற உறுப்பினர்களாக அடியெடுத்து வைக்கவிருப்பது குறித்து, சங்கீதாவிடம் பேசினோம்.

`வீட்டுல பாசம்; தேர்தல்ல எதிரும் புதிரா இருந்தோம்!' - கவுன்சிலர்களாகும் சென்னை அக்கா-தம்பி

சென்னை மாநகராட்சியின் 31-வது வார்டில் காங்கிரஸ் சார்பில் சங்கீதா பாபுவும், 23-வது வார்டில் சுயேச்சையாகப் போட்டியிட்ட இவரின் தம்பி ராஜன் பர்ணபாஸும் வெற்றி பெற்றுள்ளனர். பாசமலர்கள் இருவரும் தற்போது மாமன்ற உறுப்பினர்களாக அடியெடுத்து வைக்கவிருப்பது குறித்து, சங்கீதாவிடம் பேசினோம்.

Published:Updated:
தம்பியுடன் சங்கீதா

சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் எப்படி இருந்தாலும், உள்ளாட்சித் தேர்தலில் ஆளுங்கட்சியே வெற்றி வாகை சூடும் என்பது அரசியலில் எழுதப்படாத விதி. அதுபோலவே, அண்மையில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஆளுங்கட்சியான தி.மு.க பெரும் வெற்றி பெற்றது. இந்த உள்ளாட்சித் தேர்தலில், முக்கிய அரசியல் கட்சிகளின் சார்பிலும், சுயேச்சைகளாகப் போட்டியிட்டும், கணவன் - மனைவி, அம்மா - மகள், அப்பா - மகன் உட்பட ஒரே குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்டோர் கவுன்சிலர்களாக ஜெயித்து கவனம் ஈர்த்தனர்.

தேர்தல் பிரசாரத்தில் சங்கீதா
தேர்தல் பிரசாரத்தில் சங்கீதா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அந்த வகையில் சென்னை மாநகராட்சியின் 31-வது வார்டில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் சங்கீதா பாபு வெற்றி பெற்றுள்ளார். இவரின் உடன்பிறந்த தம்பி ராஜன் பர்ணபாஸ், 23-வது வார்டில் சுயேச்சையாகப் போட்டியிட்டு வென்றிருக்கிறார். இவர்களின் பெற்றோர் இருவரும் ஏற்கெனவே கவுன்சிலர்களாக இருந்துள்ளனர். பாசமலர்கள் இருவரும் தற்போது மாமன்ற உறுப்பினர்களாக அடியெடுத்து வைக்கவிருப்பது குறித்து, சங்கீதாவிடம் பேசினோம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``எங்களோடது காங்கிரஸ் குடும்பம். அப்பா, தமிழ் மாநில காங்கிரஸ்ல இருந்தவர். 1990-கள்ல புழல் தனி பஞ்சாயத்தா இருந்துச்சு. அப்போ கவுன்சிலராவும், பஞ்சாயத்துத் தலைவராவும் அப்பா செயல்பட்டார். அவருக்குப் பிறகு, ரெண்டு பொறுப்புகள்லயும் காங்கிரஸ் கட்சியின் சார்பா ஜெயிச்ச அம்மாவும் மக்கள் பிரதிநிதியா பொறுப்பு வகிச்சாங்க. காங்கிரஸ்ல சேர்ந்து, நீண்ட காலமா நானும் அரசியல்ல இருக்கேன். சில வருஷங்களுக்கு முன்பு நடக்கவிருந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்ல எனக்கு சீட் கிடைச்சது. ஆனா, அப்போ தேர்தல் நிறுத்தப்பட்டதால, இம்முறை நிச்சயமா எனக்கு சீட் கிடைக்கும்னு நம்பினேன்.

தேர்தல் பிரசாரத்தில் சங்கீதா
தேர்தல் பிரசாரத்தில் சங்கீதா

நாங்க வசிக்கும் 31-வது வார்டு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டு, இந்த வார்டு தி.மு.க கூட்டணியிலேருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்பட்டுச்சு. எங்கக் கட்சியின் வேட்பாளரா நான் நிறுத்தப்பட்டேன். என் தம்பியும் தேர்தல்ல போட்டியிட ஆசைப்பட்டார். `நம்ம கட்சி சார்பா, அடுத்தமுறை போட்டியிடலாம்'னு அவர்கிட்ட சொன்னோம். ஆனா, 23-வது வார்டுக்கு உட்பட்ட புழலை அடுத்த காவாங்கரையில தம்பிக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறதால, வெற்றி வாய்ப்பு கிடைக்கும்னு அங்க சுயேச்சையா போட்டியிட்டார்.

தம்பி போட்டியிட்ட வார்டுல எங்கக் கூட்டணி கட்சியின் வேட்பாளர் போட்டியிட்டார். அதனால, தம்பிக்கு ஆதரவா நாங்களும், எனக்கு ஆதரவா தம்பியும் பிரசாரம் செய்ய ஆர்வம் காட்டலை. எதிர்பார்த்தபடியே நாங்க ரெண்டு பேரும் ஜெயிச்சுட்டோம். மொத்த குடும்பத்துக்கும் சந்தோஷம். சுயேச்சையா ஜெயிச்சாலும், எங்க கட்சியின் உறுப்பினரா தம்பியும் வேலை செய்வார். மக்கள் எங்களை ஜெயிக்க வெச்சதுக்கு, நியாயமான முறையில கவுன்சிலர்களா நாங்க செயல்படுவோம்" என்று புன்னகையுடன் முடித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism