Published:Updated:

கொரோனா ஊரடங்கிலும் பிறந்தநாள் பார்ட்டி! - சென்னையில் சிக்கிய 14 இளைஞர்கள்

கொரோனா ஊரடங்கு
கொரோனா ஊரடங்கு

கொரோனா ஊரடங்கில், யாருக்கும் தெரியாமல் பிறந்தநாள் விழாவைக் கொண்டாடிய கல்லூரி மாணவர்கள், 2 பெண்கள் உள்பட 14 இளைஞர்கள் போலீஸாரிடம் சிக்கியுள்ளனர்.

கொரோனா ஊரடங்கு

கொரோனா வைரஸின் பாதிப்பு சென்னை உள்பட 4 மாவட்டங்களில் அதிகமாக உள்ளது. அதனால் 4 மாவட்டங்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் சென்னை உள்பட 4 மாவட்டங்களின் சாலைகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன. தேவையில்லாமல் வாகனங்களில் வெளியில் வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுவருகின்றன. இந்த நிலையில், அமைந்தகரை பூந்தமல்லி நெடுஞ்சாலையில், கோயம்பேடு போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜ் வாகனச் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

பூந்தமல்லி நெடுஞ்சாலை
பூந்தமல்லி நெடுஞ்சாலை

அப்போது அமைந்தகரையிலிருந்து மின்னல் வேகத்தில் ஒரு கார் வந்தது. ஊரடங்கு என்பதால் சாலை வெறிச்சோடி காணப்பட்டதால் அந்தக் காரும் வேகமாக வந்தது. அதைக் கவனித்த சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜ், காரை வழிமறித்தார். ஆனால் கார் நிற்காமல் சென்றுவிட்டது. அதனால் சுந்தர்ராஜ், வாக்கிடாக்கியில் அடுத்தடுத்த சிக்னலில் இருக்கும் காவலர்களுக்குத் தகவல் தெரிவித்தார்.

மின்னல் வேகத்தில் சென்ற கார்

உடனடியாக போக்குவரத்துப் பிரிவு உதவி கமிஷனர் சொக்கன் தலைமையிலான போலீஸார் அந்தக் காரை நிறத்த முயன்றனர். ஆனாலும் கார் எங்கும் நிற்காமல் வேகமாகச் சென்றது. இதனால் உதவி கமிஷனர் சொக்கன் தலைமையிலான போலீஸார் தங்களின் வாகனங்களில் காரை விரட்டினர். சினிமாவைப் போல பூந்தமல்லி நெடுஞ்சாலையில் காரை போலீஸார் விரட்டிச் சென்றனர். ஆனாலும் காரை பிடிக்க முடியவில்லை.

பிறந்தநாள் கொண்டாட்டம்
பிறந்தநாள் கொண்டாட்டம்
representational image
`பிரிக்கப்படாத பிறந்தநாள் கேக் பார்சல்!’ - கொரோனா பணிக்குப்பின் பெண் காவலர் எடுத்த விபரீத முடிவு

இதையடுத்து, மின்னல் வேகத்தில் சென்ற காரைப் பிடிக்க வாக்கி டாக்கி மூலம் ஜெ.ஜெ.நகர் போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஜெ.ஜெ.நகர் போலீஸாரும் அந்தக் காரை வழிமறித்தனர். அப்போதும் கார் நிற்காமல் சென்றததால் அவர்களும் காரை விரட்டினர். இறுதியில், ஜெ.ஜெ.நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு முன் கார் நிறுத்தப்பட்டது. காரிலிருந்து இறங்கிய 2 பேர் தப்பி ஓட முயன்றனர். அதில் ஒருவரை போலீஸார் மடக்கிப் பிடித்தனர்.

பிறந்தநாள் பார்ட்டி

விசாரணையில், அவரின் பெயர் கிரண் (22) எனத் தெரியவந்தது. அவர், பி.எஸ்ஸி 3-ம் ஆண்டு படித்துவருகிறார். கிரணிடம் விசாரித்தபோது, அந்தப் பகுதியில் உள்ள விடுதியில் ஆகாஷ் என்ற நண்பனுக்கு பிறந்தநாள் விழா, அதற்காக காரில் வந்ததாகக் கூறியுள்ளார். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு போலீஸார் சென்றபோது, அங்கு பிறந்தநாள் பார்ட்டி கோலாகலமாக நடந்துக் கொண்டிருந்தது. அதைப் பார்த்து போலீஸார் அதிர்ச்சியடைந்தனர். போலீஸாரைப் பார்த்த பிறந்தநாள் பார்ட்டிக்கு வந்தவர்களும் பீதியடைந்தனர்.

பிறந்தநாள் மூலம் பரவிய கொரோனா! -தி.மு.க பிரமுகரால் அதிர்ச்சியில்  அதிகாரிகள்
பிறந்தநாள்
பிறந்தநாள்

பிறந்தநாள் விழாவுக்கு வந்த 2 பெண்கள் உள்பட 14 பேரைப் பிடித்த போலீஸார், முகப்பேர் மேற்கு 6-வது பிளாக்கில் உள்ள சமூதாய நலக்கூடத்துக்கு அழைத்துவந்தனர். அங்கு வைத்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படவுள்ளது. மேலும், பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்ட 2 பெண்களை மட்டும் அவர்கள் தங்கியிருக்கும் விடுதிக்கு போலீஸார் அனுப்பிவைத்தனர். பிறந்தநாள் கொண்டாடியவர்கள், விழாவுக்கு வந்தவர்கள் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சம்பந்தப்பட்டவர்களின் பெற்றோருக்கும் போலீஸார் தகவல் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்துவருகிறது.

அடுத்த கட்டுரைக்கு