Published:Updated:

`விபத்தில் சிக்கிய இளைஞர்; 2 நாள்களுக்குப்பின் அதிர்ச்சி’ -தனிமைப்படுத்தப்பட்ட சென்னைக் காவலர்கள்

விபத்து
விபத்து

சென்னையில், விபத்தில் சிக்கிய இளைஞரை மீட்ட போலீஸார், அவரை மருத்துவமனையில் சேர்க்க உதவினர். தற்போது அந்த இளைஞருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், உதவிய போலீஸாரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

சென்னை கிழக்குக் கடற்கரை சாலை, ஈஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்த 26 வயது இளைஞர். இவர், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த 28-ம் தேதி, பைக்கில் அந்த இளைஞர் ஈஞ்சம்பாக்கத்திலிருந்து சென்னைக்கு வந்தார். ஆழ்வார்பேட்டை அருகே வந்தபோது விபத்தில் சிக்கினார். ஊரடங்கையொட்டி அந்தப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட போலீஸார், உடனடியாக அந்த இளைஞருக்கு முதலுதவி செய்தனர். பின்னர், சம்பவம் குறித்து சாஸ்திரி நகர் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

`குட்நைட் சொல்லிவிட்டுச்  சென்றாள்..' -சென்னை பயிற்சி மருத்துவர் மரணத்தில் வெளியான அதிர்ச்சித் தகவல்
பைக் விபத்து
பைக் விபத்து
representational image
விபத்து நடந்து 2 நாள்களுக்கு பிறகு, இளைஞருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதனால் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக காவலர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டால், அந்தக் காவலர்களுடன் தொடர்புடையவர்களும் தனிமைப்படுத்தப்படுவார்கள்.
போலீஸ் அதிகாரி

சம்பவ இடத்துக்கு வந்த போக்குவரத்து போலீஸார், இளைஞரிடம் விபத்து குறித்து விசாரித்தனர். அவரின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால், அவரை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர், இதுதொடர்பாக போக்குவரத்து போலீஸார் வழக்குப் பதிந்தனர். இந்தச் சமயத்தில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞருக்கு இருமல், காய்ச்சல் அறிகுறி இருந்துள்ளது.

இதையடுத்து, அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டபோது, அவருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டது. இந்தத் தகவல் உடனடியாக சாஸ்திரி நகர் போக்குவரத்து போலீஸாருக்குத் தெரிவிக்கப்பட்டது. விபத்து நடந்த இடத்துக்குச் சென்று விசாரித்த காவலர்களை உடனடியாக தனிமைப்படுத்த போலீஸ் உயரதிகாரிகள் உத்தரவிட்டனர். அவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

டூவீலர் மீது மோதிய கார்; விபத்து செட்அப்! - ராமநாதபுரத்துக்கு அதிர்ச்சி கொடுத்த படுகொலை
போக்குவரத்து போலீஸ்
போக்குவரத்து போலீஸ்
representational image

இதுகுறித்து போக்குவரத்து போலீஸ் உயரதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு, ``விபத்தில் சிக்கிய இளைஞருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட தகவல் எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விபத்து நடந்து 2 நாள்களுக்குப் பிறகு, கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவலர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டால், அந்தக் காவலர்களுடன் தொடர்புடையவர்களும் தனிமைப்படுத்தப்படுவார்கள். எனவே, பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியில் சுற்றுவதைத் தவிர்க்க வேண்டும். கொரோனா அறிகுறிகள் இருந்தால், உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு