Published:Updated:

நெல்லை: `சாலை விபத்து கொடுமைகளை நேரில் பார்த்திருக்கிறேன்!’ - விழிப்புணர்வு ஏற்படுத்தும் இளைஞர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
சாலை பாதுகாப்பு  விழிப்புணர்வு
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

சாலை விபத்துகளில் சிக்குபவர்கள் ஹெல்மெட் அணியாததால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். தலைக்கவசம் அணிந்திருந்தால், பலர் உயிர்களை இழக்க நேர்ந்திருக்காது என்பதை நேரில் கண்ட இளைஞர் ஒருவர் சாலை விழிப்புணர்வுப் பணிகளில் ஈடுபட்டுவருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நெல்லை மாவட்டம், சேரன்மாகாதேவி கங்கனாபுரத்தைச் சேர்ந்தவர், சாமுவேல் ராஜ். 34 வயது இளைஞரான இவர், பட்டப் படிப்பு முடித்ததும் முதலுதவி தொடர்பான பட்டயப் படிப்பைப் படித்துவிட்டு தனியார் மருத்துவமனையில் விபத்து சிகிச்சைப் பிரிவில் பணியாற்றிவருகிறார்.

சாமுவேல் ராஜ்
சாமுவேல் ராஜ்

விபத்தில் சிக்கி மருத்துவமனைக்கு வரும் பலருக்கும் தலைக்காயம் ஏற்பட்டு ஆபத்தான நிலை ஏற்படுவதை அனுபவபூர்வமாக நேரில் பார்த்ததால், மக்களுக்குத் தலைக்கவசம் அணிய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுவருகிறார்.

கைவினைக் கலைஞரான சாமுவேல் ராஜ் பிளாஸ்டிக் கூடைகள், பெட்டிகள், அழகுப்பொருள்கள் உள்ளிட்டவற்றை ஓய்வு நேரத்தில் செய்து விற்பனை செய்கிறார். அவற்றை எடுத்துக்கொண்டு மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதிகள், பேருந்து நிலையம், கல்லூரி வாயில்கள் ஆகிய இடங்களில் சாலை விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறார்.

சாலை பாதுகாப்பு பிரசாரம் செய்யும் சாமுவேல் ராஜ்
சாலை பாதுகாப்பு பிரசாரம் செய்யும் சாமுவேல் ராஜ்

அவரது வாகனத்தில் சாலை விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய அட்டைகள் கட்டப்பட்டிருக்கின்றன. அத்துடன், சாலையில் செல்பவர்களுக்கும் விழிப்புணர்வு பிரசாரம் செய்வதுடன், தலைக்கவசம் அணிந்தபடி, அவர் செய்திருக்கும் கைவினைப் பொருள்களை வாங்க வருபவர்களுக்குத் தள்ளுபடி விலையில் அவற்றை விற்பனை செய்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது பற்றி சாமுவேல் ராஜிடம் பேசியபோது, ``நான் தனியார் மருத்துவமனையில் விபத்து சிகிச்சைப் பிரிவில் பணியாற்றியதால், விபத்துகளில் சிக்கி, காயத்துடன் வருபவர்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. விபத்துகளில் சிக்குபவர்களுக்கு அதிகமாக தலைக்காயம் ஏற்படுகிறது.

சிறுமியின் விழிப்புணர்வு பிரசாரம்
சிறுமியின் விழிப்புணர்வு பிரசாரம்

சிலருக்கு உடலில் சிறிய காயம்கூட இல்லாத நிலையில், தலைக்காயம் காரணமாகவே உயிரிழக்கிறார்கள். அதையெல்லாம் நேரில் பார்த்ததால் தலைக்கவசம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று தோன்றியது. அதனால் நான் மட்டுமல்லாமல் என்னுடைய 8 வயது மகள் லக்‌ஷண்யா ராஜுடன் சேர்ந்து இந்தப் பணியைச் செய்துவருகிறேன்.

என் மனைவி ராதா செவிலியராகப் பணியாற்றிவருகிறார். எனக்கு லக்‌ஷண்யா ராஜ், ஆரண்யா ராஜ் என இரு குழந்தைகள் இருக்கிறார்கள். மூத்த மகளும் என்னோடு சேர்ந்து விழிப்புணர்வுப் பணியில் ஈடுபட்டுவருகிறார். இது தவிர கைவினைப் பொருள்களை செய்வது பற்றியும் கிராமத்து இளைஞர்களுக்குப் பயிற்சி கொடுக்கிறேன்.

விழிப்புணர்வு பிரசாரம் செய்யும் சிறுமி லக்‌ஷண்யா ராஜ்
விழிப்புணர்வு பிரசாரம் செய்யும் சிறுமி லக்‌ஷண்யா ராஜ்

கேரளாவில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டபோது நானும் என் மகளும் சேர்ந்து கைவினைப் பொருள்களை விற்பனை செய்து, அதன் மூலம் கிடைத்த பணத்தை அரசுக்குக் கொடுத்தோம். மரங்களை நடவு செய்து அவற்றைப் பராமரிக்கும் பணியையும் செய்கிறோம். சாலை விபத்துகள் நடக்காத அளவுக்கு மக்கள் விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதே என் விருப்பம்” என்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு