Published:Updated:

``ஆட்சியில் இருந்தபோதும் இல்லாதபோதும், மக்களுக்கு உதவும் இயக்கம் திமுக” - முதல்வர் ஸ்டாலின்

ஊட்டி அரசு விழா

நீலகிரியின் முதல் கலெக்டரும் ஊட்டி நகரை நிர்மானித்தவருமான ஜான் சல்லிவனின் உருவச் சிலையைத் திறந்து வைத்தார். தமிழகத்தில் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

``ஆட்சியில் இருந்தபோதும் இல்லாதபோதும், மக்களுக்கு உதவும் இயக்கம் திமுக” - முதல்வர் ஸ்டாலின்

நீலகிரியின் முதல் கலெக்டரும் ஊட்டி நகரை நிர்மானித்தவருமான ஜான் சல்லிவனின் உருவச் சிலையைத் திறந்து வைத்தார். தமிழகத்தில் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

Published:Updated:
ஊட்டி அரசு விழா

4 நாள் பயணமாக நீலகிரி மாவட்டம் ஊட்டியில் தங்கியிருக்கும் முதல்வர் ஸ்டாலின், 124வது ஊட்டி மலர் கண்காட்சியைத் நேற்றுத் துவக்கி வைத்தார்‌. நேற்று மாலை, வெலிங்டன் ராணுவ முகாமில் உள்ள போர் நினைவுத் தூணில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். ராணுவ அதிகாரிகளுடனும் கலந்துரையாடினார்.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

இதனைத் தொடர்ந்து, ராஜீவ் காந்தி நினைவு தினமான இன்று ஊட்டி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள ராஜீவ் காந்தி சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். நவீன ஊட்டி நகரம் நிர்மாணிக்கப்பட்டு 200 ஆண்டுகளை எட்டியுள்ள நிலையில், நீலகிரியின் முதல் கலெக்டரும் ஊட்டி நகரை நிர்மானித்தவருமான ஜான் சல்லிவனின் உருவச் சிலையைத் திறந்து வைத்தார். தமிழகத்தில் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதனைத் தொடர்ந்து ஊட்டியில் உள்ள அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற 'உதகை 200' தொடக்க விழா மற்றும் அரசு நலத்திட்டங்கள் வழங்கும் விழாவிற்கு தலைமை ஏற்று பேசினார். படுகு மொழி மற்றும் பழங்குடியின மொழிகளான தோடர், கோத்தர் மொழிகளில் வணக்கத்தையும் நலம் விசாரிப்பையும் பேசி உரையைத் தொடங்கினார்.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், "நான் முதல்வராகப் பொறுப்பேற்றப் பின் நீலகிரியில் நடக்கும் முதல் அரசு விழா இதுதான். இந்தக் கூட்டத்தைப் பார்க்கும் போது அரசு வாழாவா அல்லது மாநாடா என ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது. மக்களின் வரவேற்பும் உற்சாகமும் என்னை உங்களுக்காக உழைக்கும் உத்வேகத்தை அதிகப்படுத்தியிருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தியாவின் முன்னோடித் திட்டமான பொதுப் போக்குவரத்தை நாட்டுடைமையாக்கும் திட்டத்தை அப்போதைய முதல்வர் கலைஞர் ஊட்டியில் இருந்துதான் தொடங்கி வைத்தார். திமுக ஆட்சியில் இருந்த போதும் இல்லாதபோதும் மக்களுக்கு உதவி செய்யும் மக்கள் இயக்கமாகவே இருந்து வந்திருக்கிறது. கூடலூரின் நீண்ட நாள் பிரச்னையான பிரவு 17 நிலத்திற்கு விரைவில் தீர்வு காணப்படும். முதுமலை, தெப்பக்காட்டில் உள்ள யானைகள் முகாமை நவீனப்படுத்தப்படும்" என்றார்.

ஊட்டி அரசு விழா
ஊட்டி அரசு விழா

தொடர்ந்து, ரூபாய் 118 கோடியில் 9,500 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளைத் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் காவல்துறையினரின் கடுமையான கெடுபிடியால் பயனாளிகள் பாதிப்படதாக புகாரும் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism