Published:Updated:

`உறைகிணற்றுக்குள் உயிரிழந்த 3 வயதுக் குழந்தை!'- தாயின் கண்முன் நடந்த பரிதாபம்

உறைகிணறு
உறைகிணறு

கிணற்றுக்குள் குழந்தை தவறி விழுந்ததைப் பார்த்த தாய், கதறி அழுதார். அவரின் சத்தம் கேட்டு கிணற்றுக்குள் குதித்து அந்தக் குழந்தையைச் சிலர் மீட்டனர். ஆனால், அந்தக் குழந்தையை உயிரோடு காப்பாற்ற முடியவில்லை.

சென்னை அம்பத்தூரை அடுத்த திருமுல்லைவாயல், சரஸ்வதி நகர், 6-வது குறுக்குத் தெருவில் குடியிருப்பவர் யுவராஜ். இவரின் மனைவி லாவண்யா. சில தினங்களுக்கு முன் யுவராஜுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. அதனால், லாவண்யாவின் தங்கை சரண்யா, திருத்தணியிலிருந்து திருமுல்லைவாயலுக்கு வந்தார். அப்போது தன்னுடைய 2 குழந்தைகளையும் அழைத்துவந்திருந்தார்.

representational image
representational image

அக்காள் வீட்டுக்கு 20-ம் தேதி வந்த சரண்யா, லாவண்யாவுக்கு உதவியாக இருந்தார். லாவண்யா வீட்டில் உறைகிணறு உள்ளது. அந்தக் கிணற்றில் 23-ம் தேதி மதியம் சரண்யா, துணிகளை துவைத்துக்கொண்டிருந்தார். அப்போது 2 குழந்தைகளும் கிணற்றின் அருகில் விளையாடிக்கொண்டிருந்தனர்.

சரண்யாவின் மூத்த மகள் மித்ரா (3). இவர், கிணற்றின் அருகே நடந்து சென்றார். அதை சரண்யா கவனிக்கவில்லை. அந்தக் கிணற்றில் தடுப்புச் சுவர் இல்லை. அதனால் கிணற்றுக்குள் மித்ரா தவறி விழுந்தார். சத்தம் கேட்டு சரண்யா கிணற்றுக்குள் எட்டிப்பார்த்தார். அப்போது தண்ணீருக்குள் மித்ரா மூழ்கிக் கொண்டிருந்தார். சரண்யாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு வந்தனர். உடனடியாகச் சிலர் கிணற்றுக்குள் குதித்து மித்ராவை மீட்டனர்.

உறைகிணறு
உறைகிணறு
`பார்ட்டிக்குச் சென்ற தாய்; சோப்பு பவுடரை சாப்பிட்ட குழந்தை!' - ரஷ்யாவை உலுக்கிய கொடூர மரணம்

உடனடியாக மித்ராவை அம்பத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது அவர் மயக்க நிலையிலேயே இருந்தார். அதனால், தனியார் மருத்துவமனையிலிருந்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மித்ராவைப் பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதையடுத்து திருமுல்லைவாயல் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், மித்ராவின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காகக் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சரண்யாவிடம் என்ன நடந்தது என்று விசாரித்தனர். அப்போது அவர், இரண்டு குழந்தைகளும் என் கண் முன்னால் கிணற்றின் அருகில் விளையாடிக்கொண்டிருந்தனர். திடீரென மித்ராவைக் காணவில்லை. அப்போது கிணற்றுக்குள் ஏதோ விழும் சத்தம் கேட்டது. கிணற்றுக்குள்ளிருந்து குழந்தையின் அழுகை சத்தமும் வந்தது. அதனால் கிணற்றுக்குள் எட்டிப்பார்த்தபோதுதான் மித்ரா தண்ணீருக்குள் மூழ்கிக்கொண்டிருந்தார் என்று கூறியுள்ளார். சரண்யா அளித்த தகவலின்படி விபத்து என போலீஸார் வழக்கு பதிந்துள்ளனர்.

மித்ராவை அம்பத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது அவர் மயக்க நிலையிலேயே இருந்தார். அதனால், தனியார் மருத்துவமனையிலிருந்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மித்ராவைப் பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``சரண்யாவின் கணவர் ஹேம்குமார். இவர் கூலி வேலை செய்துவருகிறார். இவர்கள் திருத்தணி, ராகவேந்திராநகரில் குடியிருந்து வருகின்றனர். அக்காள் கணவரின் உடல் நலத்தை விசாரிக்க 2 குழந்தைகளோடு சரண்யா, திருமுல்லைவாயலுக்கு வந்துள்ளார். அப்போதுதான் மித்ரா கிணற்றுக்குள் விழுந்துள்ளார். இந்தச் சம்பவத்தையடுத்து அந்தக் கிணற்றில் பாதுகாப்பை ஏற்படுத்துமாறு வீட்டின் உரிமையாளரிடம் தெரிவித்துள்ளோம்" என்றனர்.

பின் செல்ல