Published:Updated:

குழந்தை சுர்ஜித் உடல் நல்லடக்கம்! - கண்ணீர்மல்க விடைகொடுத்த மக்கள்

ஆழ்துளைக் கிணற்றில் தவறிவிழுந்த குழந்தை சுர்ஜித்தின் உடல் மணப்பாறை பாத்திமாபுதூர் கல்லறையில் காலை சுமார் 8.25 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

சுர்ஜித் உடல் நல்லடக்கம்
சுர்ஜித் உடல் நல்லடக்கம்

ஆழ்துளைக் கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை சுர்ஜித்தின் உடலுக்கு நடுக்காட்டுப்பட்டியை அடுத்த பாத்திமாபுதூர் கல்லறையில் பெற்றோர்கள், உறவினர்கள், பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். அவர்களின் அஞ்சலிக்குப் பின்னர் குழந்தையின் உடலை நல்லடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்தது. பின்னர், கல்லறையில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. மண்ணுக்குள் நிரந்தரமாகத் துயில்கொண்ட குழந்தை சுர்ஜித்துக்கு பொதுமக்கள் கண்ணீர்மல்க விடைகொடுத்தனர்.

குழந்தை சுர்ஜித்தின் உடல்முன்பாக அமர்ந்திருந்த அவரது தாயார் கலாமேரி கதறி அழுதார். அவருக்கு உறவினர்கள் ஆறுதல் கூறிவருகின்றனர். பொதுமக்கள் அஞ்சலிக்குப் பின்னர் குழந்தையின் உடல் பாத்திமாபுதூர் கல்லறையில் நல்லடக்கம் செய்யப்படுகிறது. நல்லடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

விடியற்காலை 4.30 மணி அளவில் சிறுவன் சுர்ஜித் உடல் ஆழ்துளைக் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டது

மணப்பாறை அரசு மருத்துவமனையில் பிரதேப் பரிசோதனை நிறைவடைந்த பின் சுர்ஜித் உடல் நல்லடக்கம் செய்வதற்காக ஆம்புலன்ஸ் வாகனம் மூலமாக கல்லறை தோட்டத்துக்கு கொண்டு வரப்பட்டது.

குழந்தை சுர்ஜித் உடல் நல்லடக்கம்! - கண்ணீர்மல்க விடைகொடுத்த மக்கள்

ஆவாரம்பட்டி பாத்திமா புதூர் கல்லறையில் குழந்தை சுர்ஜித்தின் உடலுக்கு இறுதிச்சடங்குகள் நடைபெறுகின்றன.

80 மணி நேரத்துக்கு மேலாக நீண்ட மீட்பு முயற்சி தோல்வி குறித்து வருவாய்த் துறை ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறுகையில்,``வெள்ளிக்கிழமை மாலை 5.40 மணிக்கு ஆழ்துளைக் கிணற்றில் குழந்தை தவறி விழுந்தது. 80 மணி நேரத்துக்கு மேலாக நீண்ட மீட்பு முயற்சி தோல்வி அடைந்தது. தனியார் மீட்புக்குழுக்கள் மற்றும் பேரிடர் மீட்புக்குழு குழந்தையை மீட்க முயற்சி மேற்கொண்டது. இந்த நிலையில், இரவு 10 மணிக்கு ஆழ்துளைக் கிணற்றில் வாடை வருகிறது. அதனால் உடலை மீட்கும் நடவடிக்கை குறித்து கூறப்படும் என்றார். அவரது பேட்டி கீழே...

கடைசி கட்ட முயற்சிகள்....

சிறுவன் சுர்ஜித்தை மீட்பதற்காக ரிக் இயந்திரம் மூலம் 65 அடிக்கு குழி தோண்டப்பட்டுள்ளது. அந்த குழிக்குள் ஆய்வு செய்ய ஆக்சிஜன் சிலிண்டர் உதவியுடன் ஏணி மூலம் அஜித்குமார் என்ற வீரர் சென்றார். குழிக்குள் உள்ள மண் பாறையின் தன்மை ஆய்வு செய்தபின் தொடர்ந்து குழி தோண்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. உள்ளே சென்ற வீரர் திரும்ப வந்துவிட்டார். உள்ளிருந்து ரிக் இயந்திரத்துக்கு இடையூறாக இருந்த பாறை ஒன்றையும் வெளியே எடுத்துவந்தார். இந்தப் பாறையால் ரிக் இயந்திரம் தோண்டுவது தாமதமானது. அஜித்குமார் பேசுகையில், ``சிறுவனை மீட்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இப்போது 50 அடிக்கு கீழே சென்றுவந்திருப்பேன். எளிதாக தான் இருந்தது" எனக் கூறினார்.

குழந்தை சுர்ஜித்தை மீட்க ரிக் இயந்திரத்தால் 63 அடி வரை குழி தோண்டப்பட்டுள்ளது. தோண்டப்பட்டுள்ள குழியில் போர்வெல் இயந்திரம் மூலம் துளைகளிடப்பட்டு ரிக் இயந்திரத்தால் குடைந்தெடுக்கப்பட்டு வருகிறது. இந்தப் பணி தொடர்ந்து நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ``55 அடிக்கு கீழ் மணல் பாறைகள் என்பதால் துளையிடும் பணி வேகமெடுத்துள்ளது. ரிக் இயந்திரம் மூலம் குழிதோண்டி முடித்தாலும் பக்காவட்டுப் பகுதியில் துளையிடுவதுதான் சவாலானது. கைகளால் துளையிடவுள்ளதால் சற்று கடினமாகவே இருக்கும்" எனக் கூறியுள்ளார்.

இதற்கிடையே, தி.மு.க தலைவர் ஸ்டாலின் மீட்பு பணி குறித்து கூறுகையில், ``இந்த விஷயத்தை அரசியலாகப் பார்க்கவில்லை. குழந்தை சுஜித் நலமுடன் திரும்ப வேண்டும் என்று அனைவரையும்போல நானும் எதிர்பார்க்கிறேன். குழந்தையை மீட்பதற்கான அனைத்து முயற்சிகளும் நடைபெற்று வருவதை பார்க்கிறேன்" எனக் கூறியுள்ளார்.

ரிக் இயந்திரம் மூலம் மீண்டும் பள்ளம் தோண்டும் பணி தொடங்கியது. சிறிதுநேரத்திலேயே இயந்திரத்தில் பழுது ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனைச் சரிசெய்து மீண்டும் பணிதுவங்கிய நிலையில், தற்போது நடுக்காட்டுப்பட்டி பகுதியில் மழை பெய்துவருகிறது. மழையிலும் பள்ளம் தோண்டும்பணி தீவிரமடைந்துள்ளது. 60 அடிவரை தோண்டப்பட்டுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், 65 அடிக்கு கீழ் இனி மணல் இருக்கும் எனக் கூறப்படுகிறது. இதனால் பள்ளம் தோண்டும் பணி இனி வேகமெடுக்கும் எனத் தெரிகிறது.

போர்வெல் மூலம் கடினமான பாறைகளை 5 பகுதிகளாக துளையிடப்பட்டது. ரிக் இயந்திரம் எளிதாக பாறைகளை உடைப்பதற்கு இப்படி துளையிடப்பட்டது. சுமார் 1 மணியளவில் தொடங்கிய பணி தற்போது முடிவுக்கு வந்துள்ளது. ஏற்கெனவே 45 அடி வரை ரிக் இயந்திரம் மூலம் தோண்டப்பட்ட நிலையில் தற்போது போர்வெல் மூலம் மேலும் 20 அடி ஆழம் வரை தோண்டப்பட்டுள்ளது எனக் கூறப்படுகிறது. போர்வெல் துளையிட்ட கற்களின் தூள்களை ரிக் இயந்திரம் மூலம் அகற்றும் பணிகள் தற்போது நடந்துவருகிறது.

குழந்தை சுர்ஜித் பற்றி முதல்வர் பழனிசாமியிடம் பிரதமர் மோடி விசாரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக மோடி பதிவிட்டுள்ள ட்விட்டில், ``தைரியமான சுர்ஜித் வில்சனுக்காக எனது பிரார்த்தனைகள். சுர்ஜித்தை காப்பாற்றுவதற்கான மீட்பு முயற்சிகள் குறித்து தமிழக முதல்வரிடம் பேசினேன். சுர்ஜித் பாதுகாப்பாக இருப்பதை உறுதிப்படுத்த ஒவ்வொரு முயற்சியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது" எனக் கூறியுள்ளார்.

கடினமான பாறைகள் இருப்பதால் ரிக் இயந்திரத்தால் துளையிடும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இதையடுத்து, அந்தப் பாறைகளை போர்வெல் இயந்திரம் மூலம் துளையிடும் பணி தொடங்கியது. அதற்கு முன்பாக ஏணி மூலம் குழிக்குள் தீயணைப்பு வீரர் ஒருவர் இறங்கி பாறையில் குறியிட்டார். அந்தக் குறியீட்டின் அடிப்படையில் போர்வெல் இயந்திரம் மூலம் துளையிடும் பணி நடைபெறுகிறது. முதல்வரிடம் பேசினேன். சுர்ஜித் பாதுகாப்பாக இருப்பதை உறுதிப்படுத்த ஒவ்வொரு முயற்சியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது" எனக் கூறியுள்ளார்.

கடினமான பாறைகள் இருப்பதால் ரிக் இயந்திரத்தால் துளையிடும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இதையடுத்து, அந்தப் பாறைகளை போர்வெல் இயந்திரம் மூலம் துளையிடும் பணி தொடங்கியது. அதற்கு முன்பாக ஏணி மூலம் குழிக்குள் தீயணைப்பு வீரர் ஒருவர் இறங்கி பாறையில் குறியிட்டார். அந்தக் குறியீட்டின் அடிப்படையில் போர்வெல் இயந்திரம் மூலம் துளையிடும் பணி நடைபெறுகிறது.

தீயணைப்பு வீரர்
தீயணைப்பு வீரர்

திருச்சி ஆட்சியருடன் சம்பவ இடத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன், ``பாறைகளை அடுத்து கரிசல் மண் தென்பட வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. அதனால், குழந்தையை மீட்பதற்காகத் தோண்டும் பணி தொடர்ந்து நடைபெறும். 98 அடி ஆழத்துக்குப் பள்ளம் தோண்டத் திட்டமிடப்பட்டிருக்கிறது. குழந்தையை மீட்கும் திட்டம் எக்காரணத்தைக் கொண்டும் கைவிடப்படாது'' என்று தெரிவித்தார்.

ராதாகிருஷ்ணன்
ராதாகிருஷ்ணன்

சிறுவன் சுர்ஜித் மீட்புப் பணிகளை த.மா.க தலைவர் ஜி.கே.வாசன் நேரில் பார்வையிட்டார். சுர்ஜித்தின் பெற்றோர்களை சந்தித்தும் அவர் ஆறுதல் கூறினார். பின்னர் அமைச்சர் விஜயபாஸ்கருடன் ஜி.கே.வாசன் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அவர் கூறுகையில், ``ஆறுதல் கூறும் நிலையில் சுர்ஜித்தின் பெற்றோர்கள் இல்லை. சிறுவனுக்கு சாதகமான சூழலை இறைவன்தான் ஏற்படுத்த வேண்டும். பாறைகள் கடினமாக இருப்பதால், துளையிடப்படும் பணி தாமதமாகிறது. முடிந்த அளவு எல்லா முயற்சிகளையும் தமிழக அரசு செய்துகொண்டிருக்கிறது'' என்றார்.

`அந்த நல்ல செய்திக்காக நானும் காத்திருக்கிறேன்’ - சுர்ஜித் மீட்புப் பணிகள் குறித்து சத்யராஜ்

அப்போது, மீட்புப் பணிகள் குறித்து செய்தியாளர்கள் அமைச்சர் விஜயபாஸ்கரிடம் கேள்வி எழுப்பினர். அந்தக் கேள்விகளுக்குப் பதிலளித்துப் பேசிய விஜயபாஸ்கர், ``துளையிடும் பணி மிகவும் சவாலானதாக இருக்கிறது. தேசிய, மாநில பேரிடர் மீட்புக் குழுக்கள், எல் அண்ட் டி நிறுவன அதிகாரிகள், இவ்வளவு பெரிய இயந்திரத்தை இயக்கும் பணியாளர்கள் என குழுவாக முயற்சி செய்தும், துளையிடும் பணி சவால் நிறைந்ததாகவே இருக்கிறது. துளையிடும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட இயந்திரங்களின் பாகங்கள் அனைத்தும் உடைந்துபோகின்றன. இவ்வளவு கடினமான பாறைகளை இதுவரை பார்த்ததில்லை.

விஜய பாஸ்கர், ஜி.கே.வாசன்
விஜய பாஸ்கர், ஜி.கே.வாசன்

மத்திய அரசு சார்பில் ஐஐடி பேராசிரியர்களும் துறைசார்ந்த நிபுணர்களும் வந்து மண் பரிசோதனை மேற்கொண்டனர். அதேபோல், கூகுள் உதவியுடன் இந்தப் பகுதியின் நிலவியல் அமைப்பு குறித்து ஆய்வு செய்தோம். தொடர்ந்து பாறைகளே இருக்கிறது. அந்தப் பாறைகள் இவ்வளவு கடினமாக இருப்பதை நாம் எதிர்பார்க்கவில்லை'' என்றார்.

துணை முதல்வர் நேரில் ஆய்வு! - சுர்ஜித் குடும்பத்துக்கு ஆறுதல் #PrayforSurjit

63 மணி நேரத்தைத் தாண்டு மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மாற்று ஏற்பாடுகள் ஏதேனும் செய்யப்பட்டிருக்கிறதா என்று செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். அந்தக் கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் விஜயபாஸ்கர், ``தற்போதைய முறை பலனளிக்குமா என்பது நிச்சயம் கேள்விக்குறியே. ஏனென்றால், நம்முடைய திட்டத்தின்படி 90 அடி ஆழ குழி தோண்டியபின்னர் தற்போதைய நிலையில், பக்கவாட்டுப் பகுதியில் கிடைமட்டமாகக் குழி தோண்டப்பட்டுக் கொண்டிருக்க வேண்டும். குழந்தையை மீட்பதற்காக தேசிய பேரிடர் மீட்புக் குழு மற்றும் தீயணைப்புப் படை வீரர்கள் தயாராக இருக்கிறார்கள். ஆனால், பாறைகள் கடினமாக இருப்பதால், நம்மால் திட்டமிட்டபடி செயல்பட முடியவில்லை.

ராமநாதபுரத்தில் இருந்து மூன்று மாவட்டங்கள் வழியாக அதிகத் திறன் கொண்ட இந்த இயந்திரத்தை நாம் வரவழைத்தோம். அதை செயல்படுத்த கிட்டத்தட்ட 4 முதல் 5 மணி நேரம் பிடித்தது. இரவு 11 மணிக்குப் பின்னரே அதன் மூலம் பணியைத் தொடங்கினோம். அப்போது துணை முதல்வரும் சம்பவ இடத்தில் இருந்தார். முதலில் 7, 8 அடி வேகமாகச் சென்றது. அதன்பின்னர், இயந்திரங்களே திணறக்கூடிய அளவுக்கு பாறைகள் இருந்தன.

சுர்ஜித் மீட்புப் பணி
சுர்ஜித் மீட்புப் பணி

குழந்தை மீது ஒரு இன்ச் அளவுக்கு மண் துகள்கள் மூடியிருக்கின்றன. இதனால், குழந்தை எப்படி இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள முடியவில்லை. நேற்று முன்தினம் மாலை 5.30 மணிக்குப் பின்னர், குழந்தையிடமிருந்து எந்த அசைவையும் பார்க்க முடியவில்லை. சுவாசத்தையும் உணரமுடியவில்லை என்பதை ஏற்கெனவே நான் விளக்கியிருக்கிறேன். அதேநிலைதான் தற்போதும் நீடிக்கிறது. இதுதொடர்பாக குழந்தையின் பெற்றோரிடமும் பேசிக்கொண்டிருக்கிறோம். அடுத்தகட்ட நடவடிக்கைகள் மற்றும் மாற்றுவழிகள் குறித்து துணை முதல்வர், மாவட்ட நிர்வாகம், தேசிய, மாநில பேரிடர் மீட்புக் குழுக்கள் ஆகியோருடன் இணைந்து ஆலோசித்து வருகிறோம். ரிக் இயந்திரங்கள் மூலம் துளையிட்டு குழந்தையை மீட்கும் பணியில் தொய்வு ஏற்பட்டிருக்கிறது.

நாடு முழுவதும் ஏறக்குறைய 18 மாநிலங்களில் இதுபோன்ற சூழல்களில் குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டு வடும் 8 குழுக்களிடம் இதுகுறித்து ஆலோசித்து வருகிறோம். அவர்கள் அனைவரையும் இன்று வரவழைத்திருக்கிறோம். `நீங்கள் அனைவரும் இணைந்து ஆலோசித்து குழந்தையை எப்படி மீட்கலாம் என்று சொல்லுங்கள்' என அவர்களிடம் ஆலோசனை கேட்டிருக்கிறோம். இறுதியாக ஒரு முடிவெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.

சுர்ஜித் மீட்புப் பணி
சுர்ஜித் மீட்புப் பணி

தோண்டுவதற்காக முதலில் பயன்படுத்தப்பட்ட இயந்திரம் இத்தாலியில் தயாரிக்கப்பட்டது. தற்போது பணியில் ஈடுபட்டிருக்கும் இந்த ரிக் இயந்திரம் ஜெர்மனியில் தயாரானது. நெய்வேலி நிலக்கரி சுரங்கம், ஓ.என்.ஜி.சி மற்றும் எல் அண்ட் டி நிறுவனம், அரசு உயரதிகாரிகள் என அனைவருமே இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள்'' என்றார்.

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியில் உள்ள ஆழ்துளைக் கிணறு ஒன்றில் சிறுவன் சுர்ஜித், கடந்த 25-ம் தேதி விழுந்தார். இதையடுத்து, அவரை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. தன்னார்வ குழுக்கள், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். கயிறு கட்டி மீட்கும் பணி பலனளிக்காமல் போகவே, ஆழ்துளைக் கிணறு அருகே மற்றொரு குழி தோண்டி அதன்மூலம் மீட்கும் பணி நேற்று காலை 7 மணிக்குத் தொடங்கியது.

மீட்புப் பணி
மீட்புப் பணி

இதற்காக குழிதோண்டும் ரிக் இயந்திரம் வரவழைக்கப்பட்டு, பணி தொடங்கியது. முதலில் 26 அடி ஆழத்தில் சிக்கியிருந்த சிறுவன் பின்னர் 70 அடிக்கும் அதிகமான ஆழத்துக்குச் சென்றான். ஆழ்துளைக் கிணற்றுக்கு அருகில் மற்றொரு குழி தோண்டும்போது அந்தப் பகுதியில் கடினமான பாறைகள் இருந்ததால், பணியில் தொய்வு ஏற்பட்டது. மீட்புப் பணியை முதல்நாள் முதலே சம்பவ இடத்தில் இருந்து அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோர் மீட்புப் பணியை ஆய்வு செய்து வருகிறார்கள். ரிக் இயந்திரம் மூலம் போடப்படும் துளை வழியாக சென்று குழந்தை சுர்ஜித்தை மீட்க தீயணைப்புப் படையைச் சேர்ந்த மீட்புப் படை வீரர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். அதேபோல், சம்பவ இடத்தில் ஆம்புலன்ஸ்கள் உள்ளிட்ட மருத்துவக் குழுக்கள் குழந்தைக்குச் சிகிச்சை அளிக்கும் நோக்கில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

மீட்புப் பணிகளை சம்பவ இடத்துக்கு வந்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் பார்வையிட்டார். குழந்தை சுர்ஜித்தின் தந்தைக்கும் ஆறுதல் கூறிய ஓ.பன்னீர்செல்வம், குழந்தை பத்திரமாக மீட்க அனைத்து நடவடிக்கையையும் தமிழக அரசு எடுத்து வருவதாகத் தெரிவித்தார். அதேபோல், கரூர் எம்.பி ஜோதிமணி, தேனி எம்.பி ஓ.பி.ரவீந்திரநாத் குமார் ஆகியோரும் சம்பவ இடத்துக்குச் சென்று மீட்புப் பணிகளைப் பார்வையிட்டதோடு, குழந்தையின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினர். போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரும் மீட்புப் பணிகளை நேரில் பார்வையிட்டார்.

குழந்தை சுர்ஜித் பத்திரமாக மீட்க வேண்டி தமிழகம் மட்டுமல்லாது உலகின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள வழிபாட்டுத் தலங்களில் வழிபாடுகள் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. சமூக வலைதளங்களிலும் சுர்ஜித் மீட்கப்பட வேண்டி நெட்டிசன்கள் வேண்டுதலை முன்னெடுத்து வருகின்றனர்.

மீட்புப் பணி
மீட்புப் பணி

கடினமான பாறைகள் இருப்பதால், குழி தோண்டுவதில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. முதல் ரிக் இயந்திரம் போக, அதிக திறன் கொண்ட இரண்டாவது ரிக் இயந்திரம் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டு குழிதோண்டும் பணி நடைபெற்று வருகிறது. முதல் இயந்திரம் சுமார் 35 அடி அளவுக்குத் துளையிட்ட நிலையில், நள்ளிரவில் இரண்டாவது ரிக் இயந்திரம் துளையிடும் பணியைத் தொடங்கியது. இரண்டாவது இயந்திரம் பணியைத் தொடங்கி சுமார் 7 மணி நேரம் நிறைவடைந்திருக்கும் நிலையில், கடினமான பாறைகள் இருப்பதால் அந்த இயந்திரம் 5 அடி அளவுக்குக் குழி தோண்டியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குழந்தையை மீட்க 110 அடி ஆழம் கொண்ட குழிதோண்டத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, ரிக் இயந்திரம் மூலம் துளையிடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.