Published:Updated:

`நச்சுப்புகையால் மூச்சுவிட முடியவில்லை!’ -வேலூரில் குழந்தைகளை அச்சுறுத்தும் அபாயக் கழிவுகள்

குப்பையிலிருந்து வெளியேறும் நச்சுப்புகை
குப்பையிலிருந்து வெளியேறும் நச்சுப்புகை

குடியிருப்புப் பகுதியில், பிளாஸ்டிக் கழிவுகளை மலைபோல் குவித்துத் தீ மூட்டுவதால் குழந்தைகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்படுவதாக மூலக்கொல்லை மக்கள் புகார் கூறுகிறார்கள்.

வேலூர் சத்துவாச்சாரியை அடுத்த மூலக்கொல்லைப் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்துவருகிறார்கள். மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள இந்தப் பகுதி மக்களுக்குச் சாதாரண அடிப்படை வசதிகளைக் கூட மாநகராட்சி நிர்வாகம் இதுநாள் வரை செய்துகொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது.

மூலக்கொல்லை பகுதி
மூலக்கொல்லை பகுதி

இந்த நிலையில், செங்காநத்தம் செல்லும் சாலையோரம் குடியிருப்புகளுக்கு எதிரில் உள்ள காலி இடத்தில் லாரி உரிமையாளர்கள் சிலர் மின்சாரப் பொருள்களின் அபாயகரமான கழிவுகள், பிளாஸ்டிக் குப்பைகள், கட்டடக் கழிவுகள், கார் உதிரிப்பாகங்களை நாள்தோறும் லாரிகளில் கொண்டுவந்து கொட்டி மலைபோல் குவித்துவருகிறார்கள்.

`பள்ளத்தில் தடுமாறிய பைக்; மின்னல் வேகத்தில் பறந்த குப்பை லாரி!'-சென்னைக் காவலருக்கு நேர்ந்த துயரம்

கழிவுகளில் தீ மூட்டுவதால் அதிலிருந்து வெளியேறும் நச்சுப்புகை அந்தப் பகுதியை முழுவதுமாகச் சூழ்கிறது. பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியிருக்க வேண்டிய அவலநிலை காணப்படுகிறது. நேற்றும் தீ மூட்டப்பட்டதால் இளைஞர்கள் சிலர் தீயணைப்பு வாகனத்தை வரவழைத்து தீயை அணைக்க முயன்றனர்.

குப்பையிலிருந்து வெளியேறும் நச்சுப்புகை
குப்பையிலிருந்து வெளியேறும் நச்சுப்புகை

ஆனாலும், புகை மூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால், குழந்தைகளுக்கும் முதியவர்களுக்கும் மூச்சுத் திணறல், சுவாசப் பிரச்னை ஏற்படுவதாகப் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.

நம்மிடம் பேசிய மூலக்கொல்லை மக்கள், ``தினமும் கழிவுகளைக் கொட்டி எரிக்கும்போது அதில் கிடக்கும் மின்சாரக் கழிவுகள் வெடித்துச் சிதறுகின்றன. குழந்தைகளை வீடுகளிலிருந்து வெளியில் அனுப்புவதற்கே அச்சமாக இருக்கிறது. ஒருவிதமான துர்நாற்றம் வீசுகிறது. எங்களின் பகுதியே சுகாதாரச் சீர்கேட்டால் அழிந்துவருகிறது.

குப்பையிலிருந்து வெளியேறும் நச்சுப்புகை
குப்பையிலிருந்து வெளியேறும் நச்சுப்புகை

கழிவுகள் கொட்டுவதைத் தடுத்தால் லாரி உரிமையாளர்கள் எங்களை மிரட்டுகிறார்கள். வேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து பணத்துக்கு ஆசைப்பட்டு லாரி உரிமையாளர்கள் இந்தக் கழிவுகளைக் கொண்டுவந்து எங்கள் பகுதியில் கொட்டுகிறார்கள். மாநகராட்சி அதிகாரிகளும் காவல்துறையினரும் கழிவுகளைக் கொட்டுவதைத் தடுக்க வேண்டும்’’ என்கின்றனர் வேதனையுடன்.

அடுத்த கட்டுரைக்கு