Published:Updated:

சிட்லபாக்கம்: 400 குடும்பங்களைக் காலிசெய்ய பொதுப்பணித்துறை நோட்டீஸ்! - நீர்நிலை ஆக்கிரமிப்பு காரணமா?

சிட்லபாக்கம்: 400 குடும்பங்களைக் காலிசெய்ய நோட்டீஸ்

சென்னை தாம்பரம் அருகே சிட்லபாக்கம் ஏரி உள்ளது. இந்தப் பகுதியில் ஏரிக்கு அருகே உள்ள பெரியார் தெரு, ஆனந்தா நகர் மற்றும் இராம கிருஷ்ணாபுரத்தில் 1972-ம் ஆண்டு முதல் 700 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.

சிட்லபாக்கம்: 400 குடும்பங்களைக் காலிசெய்ய பொதுப்பணித்துறை நோட்டீஸ்! - நீர்நிலை ஆக்கிரமிப்பு காரணமா?

சென்னை தாம்பரம் அருகே சிட்லபாக்கம் ஏரி உள்ளது. இந்தப் பகுதியில் ஏரிக்கு அருகே உள்ள பெரியார் தெரு, ஆனந்தா நகர் மற்றும் இராம கிருஷ்ணாபுரத்தில் 1972-ம் ஆண்டு முதல் 700 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.

Published:Updated:
சிட்லபாக்கம்: 400 குடும்பங்களைக் காலிசெய்ய நோட்டீஸ்

சென்னை சிட்லப்பாக்கம் ஏரிக்கரையோரமாக 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்துவந்த, 400-க்கும் மேற்பட்ட குடும்பங்களை, உடனடியாகக் காலி செய்யச் சொல்லி பொதுப்பணித்துறை நோட்டீஸ் அனுப்பியது, அந்தப் பகுதி மக்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்தநிலையில், நேற்று, குறிப்பிட்ட சில வீடுகளையொட்டி ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாக சில பகுதிகள் அகற்றப்பட்டன. ஒட்டு மொத்தமாக 403 வீடுகளும் அகற்றப்படுமோ என்கிற அச்சத்தில் இருக்கிறார்கள் அந்தப் பகுதி பொதுமக்கள்.

சிட்லபாக்கம்
சிட்லபாக்கம்

சென்னை தாம்பரம் அருகே சிட்லபாக்கம் ஏரி உள்ளது. இந்தப் பகுதியில் ஏரிக்கு அருகே உள்ள பெரியார் தெரு, ஆனந்தா நகர் மற்றும் இராம கிருஷ்ணாபுரத்தில் 1972-ம் ஆண்டு முதல் 700 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. அதில், 403 குடும்பங்களை, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் உடனடியாக வீட்டைக் காலி செய்து தரும்படி பொதுப்பணித் துறையிடமிருந்து நோட்டீஸ் கொடுக்கப்பட்டதாக தகவல் வந்தது. இதனைத் தொடர்ந்து நேரில் சென்று ஆய்வு செய்தோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அந்தப் பகுதியைச் சேர்ந்த பிரேம்குமார் என்பவர் பேசும்போது, ``1972 -ல் இருந்து சிட்லபாக்கத்தில் நாங்கள் வாழ்ந்து வருகிறோம் ஏரிக் கரையோரம் என்பதால் இந்த நிலங்கள் விவசாய நிலங்களாகவும் வண்டிப்பாதையாகவும் இருந்தன. எங்கள் தாத்தா காலங்களில் இங்கு நிலம் வாங்கி மக்கள் குடியேறினர். இங்கு வாழும் அனைவரும் சொந்த வீடு உடையவர்கள். எங்கள் பகுதியானது (புல எண் 256/1,256/2,256/3) சிட்லபாக்கம் ஏரியில் மேல்புற பகுதியாகும். இந்த பகுதிக்கும் ஏரிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. புல எண் 256/2,256/3 உள்ள வீடுகளுக்கு வீட்டுமனைப்பட்டா அரசால் வழங்கப்பட்டது. புல எண் 256/1 உள்ள வீடுகளுக்கு மட்டும் வீட்டுமனைப் பட்டா வழங்கப்படவில்லை. இதற்கு காரணம் 256/1 சப் டிவிஷனாக பிரிக்கும்போது வீடுகளும் ஏரி சப்டிவிஷனுடன் இணைக்கப்பட்டது. புல எண் 256/1 உள்ள வீடுகளுக்கு பட்டா வேண்டி 1972 -ல் இருந்து வருவாய் துறைக்கும் முதல்வர் தனிப்பிரிவுவுக்கும் மனு அளித்து வருகிறோம். அதற்கான சான்றுகளுகம் எங்களிடம் இருக்கின்றன.

சிட்லபாக்கம் ஏரி
சிட்லபாக்கம் ஏரி

1997-ல் காஞ்சிபுரம் ஆட்சியராக இருந்த இறையன்பு அவர்கள் எங்கள் கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். ஆனால் இன்றுவரை பட்டா கொடுக்கப்படவில்லை. அறப்போர் இயக்கம் சிட்லபாக்கம் ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றி ஏரியை மீட்டுத்தருமாறு உயர் நீதிமன்றத்தில் போடப்பட்ட வழக்கின் கீழ் பொதுப்பணித்துறை 403 வீடுகளை அகற்றுமாறு நோட்டீஸ் கொடுத்திருக்கிறது. ஆனால் இவை விவசாய நிலங்கள் என்பதற்குச் சான்றாக கிணறு இருக்கிறது. ஏரியிருந்த இடம் என்றால் வெள்ளம் வந்திருக்கும்; 2015-ம் ஆண்டு வெள்ளத்தின் போதும் கடந்த மழைக்காலத்தின் போதும் எங்கள் பகுதியில் மழை வெள்ளம் இதுவரை ஏற்பட்டதில்லை அரசாங்கம் எங்கள் கோரிக்கையை நிறைவேற்றாமல் காலம் தாழ்த்தியதற்கு, இப்போது எங்கள் வீடுகளை அகற்றப்போகிறோம் என்கிறார்கள். இதில் கொஞ்சம் கூட நியாயம் இல்லை'' என்றார்.

 ‘அறப்போர்’ ஜெயராம்
‘அறப்போர்’ ஜெயராம்

அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேஷன் இந்த விவகாரம் குறித்துப் பேசும்போது, ``சிட்லப்பாக்கம் ஏரியை மீட்டுத்தர வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் வழக்கு போட்டோம். எங்களது நோக்கம் குடியிருப்புகளை அகற்ற வேண்டும் என்பது அல்ல .ஏரியின் மீதுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. எது ஆக்கிரமிப்பு என்று அரசு தான் முடிவு செய்யும்'' என்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``சென்னையில் உள்ள குடியிருப்புகளை நீர்நிலை ஆக்கிரமிப்பு என்ற பெயரில் அரசு தொடர்ந்து அகற்றி வருகிறது. பெரும்பாலான குடியிருப்பு பகுதிகள் நீர்நிலை ஆக்கிரமிப்பு என்பதற்கு எந்த சாட்சியமும் இல்லை. நீர்நிலை ஆக்கிரமிப்பு என்ற பெயரில் அகற்றப்படும் குடியிருப்புகளுக்கு மாற்றாக நீர்நிலை தானே இருக்க வேண்டும் , ஆனால் அகற்றப்பட்ட குடியிருப்பு இடங்கள் வேறு ஏதாவது கம்பெனிக்கும் அரசு திட்டங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது'' என்கிறார், நகர்புற குடியிருப்பு நில உரிமை கூட்டமைப்பைச் சேர்ந்த செபாஸ்டின்.

நகர்ப்புற குடியிருப்பு - நிலவுரிமைக் கூட்டமைப்பு - செபஸ்டின்
நகர்ப்புற குடியிருப்பு - நிலவுரிமைக் கூட்டமைப்பு - செபஸ்டின்

இந்தக் குடியிருப்புகள் அகற்றம் குறித்து பொதுப்பணித்துறை துணைப் பொறியாளர் பிரபுவிடம் பேசியபோது, ```சென்னை உயர் நீதிமன்றம் ஏரி ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளது.. 403 குடியிருப்புகளும் ஏரிக்கான புல எண் 256/1 எண்ணுடன் இணைந்து இருப்பதாக வருவாய்த்துறை ரெக்கார்டு தெரிவிக்கிறது. அதன் அடிப்படியில் அகற்றம் செய்ய உள்ளோம்'' என்றார்.

சிட்லபாக்கம் வரைபடம்
சிட்லபாக்கம் வரைபடம்

இது மாதிரியான குடியிருப்புகள் அகற்றம் சிட்லபாக்கம் மட்டுமல்லாமல் கொளத்தூர் ஈஞ்சம்பாக்கம், பெத்தேல் நகர் என மாநகர் முழுவதும் தொடர்கிறது. இதனால் அங்கு வாழும் மக்களின் கல்வியும் வேலைவாய்ப்பும் வாழ்வாதாரமும் சிக்கலுக்குள்ளாகிறது என்பதையும் அரசு கருத்தில் கொள்ள வேண்டும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism