Published:Updated:

கருக்கலைப்பு செய்து கொண்ட பெண் பரிதாபமாக உயிரிழப்பு; உரிமம் பெறாத மருத்துவமனைக்கு அதிகாரிகள் சீல்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்
போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்

சந்திரலேகாவை பரிசோதித்த மருத்துவர், குழந்தையின் வளர்ச்சி சரியில்லை என்று கூறியதாகச் சொல்லப்படுகிறது. அதனைத் தொடர்ந்து அவருக்கு கருக்கலைப்பு செய்துள்ளார், அந்த தனியார் மருத்துவமனையின் மருத்துவர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சின்னசேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் கருக்கலைப்பு சிகிச்சை செய்துகொண்ட இளம்பெண் உயிரிழந்திருக்கும் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள பாண்டியங்குப்பம் கலைஞர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள் (31). இவரின் மனைவி சந்திரலேகா (29). இந்த தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் சந்திரலேகா மீண்டும் கர்ப்பம் தரித்துள்ளார். 4 மாத கர்ப்பிணியாக இருந்த சந்திரலேகா, சின்ன சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கடந்த வாரம் சிகிச்சைக்காகச் சென்றுள்ளார்.

போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்
போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்
உயிரையே பறிக்குமா கருக்கலைப்பு மாத்திரைகள்? சென்னை அதிர்ச்சி சம்பவமும் எச்சரிக்கையும்!

அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர், குழந்தையின் வளர்ச்சி சரியில்லை என்று கூறியதாகச் சொல்லப்படுகிறது. அதனைத் தொடர்ந்து சந்திரலேகாவிற்கு கருக்கலைப்பு செய்துள்ளார், அந்த தனியார் மருத்துவமனையின் மருத்துவர். உடன், குடும்ப கட்டுப்பாடு சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. அதைத் தொடர்ந்து அவரது உடல்நிலை மோசமான நிலைக்குச் சென்றதால், கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போதும் அவரது உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லாததால், சேலத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஒரு கட்டத்தில் அவரது உடல்நிலை கவலைக்கிடமான நிலைக்குச் சென்றுள்ளது.

இதனால் மனம் வருத்தமடைந்து கோபம் கொண்ட உறவினர்கள், சின்னசேலம் தனியார் மருத்துமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சையில் சந்தேகம் இருப்பதாகக் கூறி நேற்று முன்தினம் உயிருக்குப் போராடிய நிலையில் இருந்த சந்திரலேகாவை ஆம்புலன்ஸிலேயே வைத்து கள்ளக்குறிச்சி - சேலம் சாலையில் நிறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல்ஹக், சந்திரலேகாவின் உறவினர்களின் குறைகளை கேட்டறிந்து, அவரை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார். அதை தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில், அந்த மருத்துவமனை உரிய அனுமதி இன்றி செயல்பட்டதும் தெரியவந்துள்ளது. கள்ளக்குறிச்சி எஸ்.பி-யின் முன்னிலையில், வருவாய்த்துறை அதிகாரிகள் அந்த தனியார் மருத்துவமனைக்கு அதிரடியாக சீல் வைத்துள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்
போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்
`ஆண் குழந்தைதான் வேண்டும்’ ; 8 முறை கட்டாயக் கருக்கலைப்பு!-கணவன்மீது ஓய்வுபெற்ற நீதிபதி மகள் புகார்

மிகவும் கவலைக்கிடமான நிலையில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சந்திரலேகா நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக சின்னசேலம் காவல் நிலையத்தில் தொடர்பு கொண்டு பேசினோம். ``தன் மனைவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக, சின்னசேலம் தனியார் மருத்துவமனை மீது சந்திரலேகாவின் கணவர் கொடுத்துள்ள புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறோம். பிரேத பரிசோதனையின் முடிவிலேயே தகவல்கள் தெரிய வரும்" என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு