Published:Updated:

மேற்கூரையில்லாத குரோம்பேட்டை ரயில் நிலையம்; சிரமத்தில் பயணிகள் - தென்னக ரயில்வே நடவடிக்கை எடுக்குமா?

மின்சார ரயில்

குரோம்பேட்டை ரயில் நிலையத்தை ஹஸ்தினாபுரம், நெமிலிச்சேரி, ஜமீன் ராயப்பேட்டை, திருமுடிவாக்கம், பழந்தண்டலம், திருநீர்மலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்கள் நாள்தோறும் பயன்படுத்திவருகின்றனர்.

மேற்கூரையில்லாத குரோம்பேட்டை ரயில் நிலையம்; சிரமத்தில் பயணிகள் - தென்னக ரயில்வே நடவடிக்கை எடுக்குமா?

குரோம்பேட்டை ரயில் நிலையத்தை ஹஸ்தினாபுரம், நெமிலிச்சேரி, ஜமீன் ராயப்பேட்டை, திருமுடிவாக்கம், பழந்தண்டலம், திருநீர்மலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்கள் நாள்தோறும் பயன்படுத்திவருகின்றனர்.

Published:Updated:
மின்சார ரயில்

குரோம்பேட்டை ரயில் நிலையத்தை ஹஸ்தினாபுரம், நெமிலிச்சேரி, ஜமீன் ராயப்பேட்டை, திருமுடிவாக்கம், பழந்தண்டலம், திருநீர்மலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்கள் நாள்தோறும் பயன்படுத்திவருகின்றனர். இந்த ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக ஜி.எஸ்.டி சாலை நுழைவுப்பகுதிக்கு அருகே பிளாட்பார்ம் 1 A நடைமேடை ஒரு வருடத்துக்கு முன்பு கட்டப்பட்டது. இதனால் மின்சார ரயில்கள் இரட்டை பிளாட்பாரத்தின் நன்மையைப் பெறுகின்றன.

மேற்கூரையில்லாத குரோம்பேட்டை ரயில் நிலையம்
மேற்கூரையில்லாத குரோம்பேட்டை ரயில் நிலையம்

பயணிகள் மின்சார ரயில்களில் ஒரு பெட்டியின் இருபுறமும் இறங்கலாம் அல்லது ஏறலாம். அதாவது 1A அல்லது 1 பிளாட்பாரத்திலிருந்து. ரயில்களில் விரைவாக நுழைவதற்கும் வெளியேறுவதற்கும் மற்றும் ஃபுட்ஓவர் பாலத்தின் நெரிசலைக் குறைக்கவும் இது உதவும். பிளாட்பாரம் 1A-ல், போதுமான எண்ணிக்கையிலான பெஞ்சுகள் உள்ளன. ஆனால் மேற்கூரை இல்லை. மழைக்காலங்களில், குரோம்பேட்டையிலுள்ள ஜி.எஸ்.டி சாலை, ரயில்வே ஸ்டேஷன் சாலை இரண்டையும் இணைக்கும் ஃபுட்ஓவர் பாலத்தின் படிக்கட்டுக்கு அருகில் பயணிகள் தஞ்சமடைகின்றனர்.

இதனால் வெயில், மழைக் காலங்களில் மக்கள் அந்த நடைமேடையைத் தவிர்த்து பிளாட்பார்ம் 1-ஐ பயன்படுத்திவருகின்றனர். குரோம்பேட்டை ரயில் நிலையத்துக்கு வரும் பயணிகள் 1A பிளாட்பார்மில் இறங்கி தண்டவாளத்தின் வழியாக பிளாட்பார்ம் 1-க்கு ஆபத்தான முறையில் இறங்கிச் செல்கின்றனர். பள்ளி, கல்லூரி, வேலைக்குச் செல்வோர் என வயது பேதமின்றி ஆபத்தான முறையில் கடக்கின்றனர்.

மேற்கூரையில்லாத குரோம்பேட்டை ரயில் நிலையம்
மேற்கூரையில்லாத குரோம்பேட்டை ரயில் நிலையம்

இது குறித்து பயணிகள் சிலரிடம் கேட்டபோது, ``இப்போ கட்டிருவோம், அப்போ கட்டிருவோம்னு சொல்றாங்க. ஆனா இன்னும் கட்டி முடிக்கிறதுக்கான எந்த அறிகுறியும் தெரியலை. நாளிதழ்கள் கூட 2022 ஏப்ரல் மாதத்துக்குள்ள மேற்கூரை அமைக்கப்பட்டுவிடும், அது கோடைக்காலங்களில் பயணிகளுக்கு வசதியா இருக்கும்னு தென்னிந்திய ரயில்வே சொன்னதா போட்டிருந்தாங்க. ஆனா ஒண்ணும் நடக்கலை. ஒரு மேற்கூரை அமைக்க ஏன் இத்தனை சிக்கல்னு தெரியலை. மக்கள் பயன்பாட்டுக்கு, வசதிக்காகக் கட்டப்பட்ட பிளாட்பாரம் மக்கள் பயன்படுத்தவே சிரமமாக இருப்பதை ரயில்வே நிர்வாகம் புரிஞ்சுக்கணும்" என்றனர் ஆதங்கத்தோடு.

பயணிகள்
பயணிகள்

இந்தப் பிரச்னை குறித்து பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் கேட்டபோது, ``இந்த பிளாட்பாரம் கட்டுறாங்கன்னு தெரிஞ்சதும் ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. ஈஸியா ட்ரெயின் ஏறிடலாம், அவசரத்துக்கு ஸ்டேசனுக் வர்றவங்க ட்ரெயினை மிஸ் பண்ணாம ஏறுறதுக்கு வாய்ப்பா இருக்கும்னு நினைச்சோம். ஆனா இப்போ வரைக்கும் மேற்கூரை இல்லை. மழை டைம்ல நிக்கவே முடியாது. பேக்கெல்லாம் நனைஞ்சுரும்னு நாங்க போய் ஃபுட்-ஓவர் பக்கம் இருக்குற தண்டவாளம் வழியா இறங்கி 1-வது பிளாட்பாரமுக்குப் போயிருவோம். சில சமயம் ட்ரெயினையும் மிஸ் பண்ணிருவோம்" என்றனர் வேதனையோடு.

இயங்குதளம் 1A -ல் உள்ள மற்றொரு சிக்கல் என்னவென்றால், அங்கே வெளிச்சம் இல்லை. இதனால், பெண்கள் நடைமேடை பாதுகாப்பற்ற நிலையில் இருக்கிறது. ஆயிரக்கணக்கான பயணிகள் பயன்படுத்தும் இந்த ரயில் நிலையத்தில் மேற்கூரையில்லாமல் மக்கள் அவதிப்படும் நிலை கவலைக்குரியது. தென்னகவே ரயில்வே அங்கே மேற்கூரை, மின்விளக்குககள் அமைப்பதற்குத் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைத்துப் பயணிகளின் கோரிக்கை.

-இ.சுந்தர வடிவேல் (மாணவப் பத்திரிகையாளர்)