Published:Updated:

திருவாரூர் இன்ஃபோ 200 - ஆர்வத்துடன் தேர்வு எழுதிய ஆயிரக்கணக்கான மாணவர்கள்!

திருவாரூர் இன்ஃபோ 200
திருவாரூர் இன்ஃபோ 200

இதில் வெற்றிபெறக்கூடிய ஆயிரம் மாணவர்களுக்கு பிப்ரவரி 9-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை திருவாரூர்-நாகப்பட்டினம் சாலையில் உள்ள திரு.வி.க அரசு கலைக்கல்லூரியில் பரிசளிப்பு விழா நடைபெறுகிறது.

சுட்டி விகடன் நடத்தும் இன்ஃபோ 200 தேர்வு திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்றது. இதில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு தேர்வு எழுதினார்கள்.

ஆனந்த விகடன் குழுமத்திலிருந்து வெளியாகும் சுட்டி விகடன், பள்ளி மாணவர்களிடம், அவர்கள் வசிக்கும் மாவட்டத்தைப் பற்றிய பொது அறிவை வளர்க்கும் நோக்கத்துடன், அந்தந்த மாவட்டங்களின் ஆச்சர்யத் தகவல்களைத் தொடுத்து இன்ஃபோ 200 என்ற தலைப்பில் சிறப்பிதழை வெளியிட்டு, தேர்வு நடத்தி, பரிசு வழங்கி வருகிறது. திருச்சி, தஞ்சை, தூத்துக்குடி, கிருஷ்ணகிரி உட்பட இதுவரை 12 மாவட்டங்களில் இன்ஃபோ 200 தேர்வு நடத்தப்பட்டு, பரிசு வழங்கப்பட்டது.

திருவாரூர் இன்ஃபோ 200
திருவாரூர் இன்ஃபோ 200

அதன் தொடர்ச்சியாக, திருவாரூர் இன்ஃபோ 200 தேர்வு, நேற்று திருவாரூர் மாவட்டத்தில் தொடங்கியது. வலங்கைமான், பூந்தோட்டம், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, திருவாரூர் நகரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள 60-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஏழாயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு இத்தேர்வை எழுதினார்கள்.

நேற்றும், இன்றும் நடைபெற்ற இத்தேர்வு நாளை நிறைவடைகிறது. இந்த மூன்று நாள்களில் பத்தாயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் இத்தேர்வை எழுதுகிறார்கள். இதில் வெற்றிபெறக்கூடிய ஆயிரம் மாணவர்களுக்கு, பிப்ரவரி 9-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை திருவாரூர்-நாகப்பட்டினம் சாலையில் உள்ள திரு.வி.க அரசு கலைக்கல்லூரியில் பரிசளிப்பு விழா நடைபெறுகிறது. இவ்விழாவில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் கல்வித்துறை உயர் அலுவர்களும் காவல்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டு சிறப்பிக்கிறார்கள்.

பின் செல்ல