Published:Updated:

கிருஷ்ணகிரி: சக பள்ளி மாணவனுடன் மோதல்; கீழே விழுந்ததில் பிளஸ்-2 மாணவன் பலி! - போலீஸ் விசாரணை

பிளஸ்-2 மாணவன் பலி

சிறிய டப்பாவிலிருந்து தைலத்தை எடுத்து, விளையாடுவதற்காக கோபிநாத்தின் மேல் பூச வந்துள்ளார். இதில், இருவருக்கும் தகராறு ஏற்பட்டதில், அந்த மாணவன் கோபிநாத்தை தாக்கி தள்ளிவிட்டுள்ளார்.

கிருஷ்ணகிரி: சக பள்ளி மாணவனுடன் மோதல்; கீழே விழுந்ததில் பிளஸ்-2 மாணவன் பலி! - போலீஸ் விசாரணை

சிறிய டப்பாவிலிருந்து தைலத்தை எடுத்து, விளையாடுவதற்காக கோபிநாத்தின் மேல் பூச வந்துள்ளார். இதில், இருவருக்கும் தகராறு ஏற்பட்டதில், அந்த மாணவன் கோபிநாத்தை தாக்கி தள்ளிவிட்டுள்ளார்.

Published:Updated:
பிளஸ்-2 மாணவன் பலி

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் தாலுகா, கப்பல்வாடி கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் கப்பல்வாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த, 380-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.

கிருஷ்ணகிரி: சக பள்ளி மாணவனுடன் மோதல்; கீழே விழுந்ததில் பிளஸ்-2 மாணவன் பலி! - போலீஸ் விசாரணை

இந்தப் பள்ளியில், சக்கில் நத்தம் கிராமத்தைச் சேர்ந்த, ஹோட்டல் ஊழியர் வெங்கடேசன்-சசிகலா தம்பதியின் மகன் கோபிநாத் (17), அறிவியல் பாடப்பிரிவில் பிளஸ்-2 படித்து வந்தார். நேற்று, (19–ம் தேதி) பருவத்தேர்வு எழுதுவதற்காக, நண்பர்களுடன் வகுப்பறைக்கு முன்பு அமர்ந்திருந்தார்.

அப்போது அங்கு வந்த பிளஸ்-2 படிக்கும் மாணவன் ஒருவன், சிறிய டப்பாவிலிருந்து தைலத்தை எடுத்து, விளையாடுவதற்காக கோபிநாத்தின் மேல் பூச வந்துள்ளார். இதில், இருவருக்கும் தகராறு ஏற்பட்டதில், அந்த மாணவன் கோபிநாத்தை தாக்கி தள்ளிவிட்டுள்ளார். அதில் கீழே விழுந்து மயக்கமடைந்த கோபிநாத்தை ஆசிரியர்கள் மீட்டு, பர்கூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்; மாணவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

மரணம்
மரணம்

இதையடுத்து, பர்கூர் போலீஸார் வழக்கு பதிந்து, கோபிநாத்தை தாக்கிய பிளஸ்-2 மாணவனைக் கைதுசெய்து, இறப்பிற்கான காரணத்தை கண்டறிய கோபிநாத்தின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பியுள்ளனர்.

கைதான பிளஸ்–2 மாணவன் போலீஸாரிடம், ``சார், நானும் அவனும் பக்கத்து, பக்கத்து வீடுதான்; ரொம்ப வருஷமா ஃபிரண்ட்ஸ். நான் விளையாட்டுக்கு தைலத்த தேய்கிறப்ப அவன் கண்ணுல பட்டுருச்சு. என்ன கெட்டவார்த்தைல திட்டிட்டான், நானும் பதிலுக்கு திட்டுனேன். ரெண்டு பேரும் சண்ட போட்டோம். போடானு சொல்லி தள்ளி விட்டேன், கீழ விழுந்து மயங்கிட்டான். உண்மையா இப்படியெல்லாம் நடக்கும்னு தெரியல சார்" எனக் கூறி, குற்ற உணர்ச்சியில் கண்ணீர் வடித்துள்ளார்.

வழக்கை விசாரிக்கும் போலீஸாரிடம் கேட்டதற்கு, ‘‘கோபிநாத் உடலில் காயங்கள் ஏதும் இல்லை. கீழே விழுந்தபோது வலிப்பு வந்ததா, அல்லது அவர் உடலில் வேறு ஏதேனும் பாதிப்புகள் உள்ளதா என விசாரிக்கிறோம். இறப்பிற்கான காரணத்தை அறிய, இன்று (20–ம் தேதி) மதியம், முழு உடல் பரிசோதனை மற்றும் உடற்கூராய்வு நடக்கிறது. ‘ரிப்போர்ட்’ வந்தால் தான் காரணம் தெரியும். மாணவர்களின் வீடுகள் ஒரே வீதியில் உள்ளதால், பிரச்னைகள் ஏற்படுவதை தடுக்க போலீஸார் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர்’’ என்றனர்.