Published:Updated:

’நீங்கள்தான் நிஜ ஹீரோக்கள்' -தூய்மைப் பணியாளர்களைக் கௌரவப்படுத்திய தி.மு.க பிரமுகர்

அசைவ விருந்தளித்த தி.மு.கவினர்
அசைவ விருந்தளித்த தி.மு.கவினர்

எங்கள் பகுதியில் தூய்மைப் பணியை மேற்கொள்ளும் உங்களுக்கு நாங்கள் என்றைக்கும் பக்க பலமாகவும், சமூகத்தில் உங்களைச் சமமாக மதித்து உரிய அந்தஸ்தையும் கௌரவத்தையும் எப்போதும் வழங்குவோம்.

``கொரோனாவிடமிருந்து மக்களைத் தற்காத்துக்கொண்டிருக்கும் மூன்று தெய்வங்களுக்கு நாம் மரியாதை செலுத்தவேண்டும். அவர்கள்தான் நிஜ ஹீரோக்கள். தூய்மைப் பணியாளர்களைப் பல இடங்களில் ஏளனமாகப் பேசுகிறார்கள். அதை மாற்றவேண்டும்" என்றுகூறி அவர்களுக்கு மாலை மரியாதையுடன் பாத பூஜை செய்து, நிவாரணப்பொருள்கள், மட்டன் பிரியாணி விருந்து கொடுத்து திக்குமுக்காட வைத்திருக்கிறார் தி.மு.க பிரமுகர் ஒருவர்.

பாத பூஜை
பாத பூஜை

கடலூர் மாவட்டம் கிள்ளை பேரூராட்சியில் பணியாற்றும், நிரந்தர மற்றும் தற்காலிகத் தூய்மைப் பணியாளர்கள் அனைவரும் நேற்று மதியம் பணி முடிந்ததும் வரவழைத்து தனிமனித விலகலுடன் வரிசையாக நிற்க வைக்கப்பட்டனர். தொடர்ந்து தி.மு.க தலைமைச் செயற்குழு உறுப்பினர் கிள்ளை ரவீந்திரன் தலைமையில் ஒன்றிய செயலாளர் கலையரசன் உள்ளிட்ட கிராம முக்கியஸ்தர்கள் பலரும் தூய்மைப் பணியாளர்களின் கால்களைக் கழுவி, சந்தனம், குங்குமம், வைத்து பாதமலர் தூவி, அவர்களுக்கு மாலைகள் அணிவித்து தூய்மைப் பணியாளரைக் கெளரவப்படுத்தியிருக்கிறார்கள்.

இந்த நிகழ்வை ஏற்பாடு செய்த தி.மு.க தலைமைச் செயற்குழு உறுப்பினர் கிள்ளை ரவீந்திரனிடம் பேசினோம். ”இந்தியா உட்பட உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் பரவல் நாளுக்குநாள் உச்சத்தை எட்டி வருகிறது. இந்தியாவைப் பொறுத்தவரைக் கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளது.

தூய்மைப் பணியாளர்கள்
தூய்மைப் பணியாளர்கள்

தமிழகத்தில் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை முதலிடத்தில் உள்ளது. கொரோனாவிடமிருந்து மக்களைத் தற்காத்துக்கொண்டிருக்கும் மூன்று தெய்வங்களுக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும். முதலில் மருத்துவர்கள், அடுத்ததாக அதிகாரிகள் மற்றும் போலீஸார். மூன்றாவதாக தூய்மை பணியாளர்கள்.

இவர்கள் மூவர்தான் இன்று நிஜ ஹீரோக்கள். பல இடங்களில் தூய்மைப் பணியாளர்களை மதிக்காமல் ஏளனமாகப் பேசுகிறார்கள். அவர்களை நாம் கெளரவுபடுத்த வேண்டும் என்பதற்காகத்தான் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தேன். “நகரைத் தூய்மைப்படுத்தும் உங்களையும், இந்தக் கொரோனா வைரஸ் தொற்று நேரத்தில் கால நேரம் பார்க்காமல் பணியாற்றும் காவல்துறையினர், மருத்துவர்கள், உள்ளிட்டவர்களையும் நன்றி உணர்வோடு நினைத்துப் பார்ப்போம்.

அசைவ விருந்தளித்த தி.மு.கவினர்
அசைவ விருந்தளித்த தி.மு.கவினர்

எங்கள் பகுதியில் தூய்மைப் பணியை மேற்கொள்ளும் உங்களுக்கு நாங்கள் என்றைக்கும் பக்க பலமாகவும், சமூகத்தில் உங்களைச் சமமாக மதித்து, உரிய அந்தஸ்தையும், கௌரவத்தையும் எப்போதும் வழங்குவோம். உங்களின் குடும்பம் உயர, பொருளாதாரம், கல்வி, வேலை வாய்ப்பில் முன்னேற உறுதுணையாக உங்களுக்கு இருப்போம்" என்று அங்கிருந்த அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டோம் என முடித்தார்.

’நீங்கள்தான் நிஜ ஹீரோக்கள்' -தூய்மைப் பணியாளர்களைக் கௌரவப்படுத்திய தி.மு.க பிரமுகர்

பின்னர் அனைவரும் மட்டன் பிரியாணி விருந்து வெகு சிறப்பாக நடைபெற்றது. சாப்பிட்டு முடித்ததும் தூய்மைப் பணியாளர்கள் அனைவருக்கும் பத்துக் கிலோ அரிசி, மளிகை, காய்கறி, உள்ளிட்ட நிவாரணப் பொருள்களும் வழங்கப்பட்டன. பின்பு தனிமனித விலகலுடன் அனைவரும் கலைந்துசென்றனர்.

அடுத்த கட்டுரைக்கு