Published:Updated:

விருதுநகர்: விதிமீறல்களுடன் இயங்கிய 70 பட்டாசு ஆலைகள் மூடல்! - `குண்டர் சட்டம் பாயும்’ என எச்சரிக்கை

பட்டாசு உற்பத்தி ( மாதிரிப் படம் )

விருதுநகரில் விதிகளை மீறி இயங்கிய 70 பட்டாசு ஆலைகளுக்கு தற்காலிகத் தடைவிதித்து மூடப்பட்டன. `சட்டவிரோதமாகப் பட்டாசு உற்பத்தி செய்தால் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை பாயும்’ என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

விருதுநகர்: விதிமீறல்களுடன் இயங்கிய 70 பட்டாசு ஆலைகள் மூடல்! - `குண்டர் சட்டம் பாயும்’ என எச்சரிக்கை

விருதுநகரில் விதிகளை மீறி இயங்கிய 70 பட்டாசு ஆலைகளுக்கு தற்காலிகத் தடைவிதித்து மூடப்பட்டன. `சட்டவிரோதமாகப் பட்டாசு உற்பத்தி செய்தால் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை பாயும்’ என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

Published:Updated:
பட்டாசு உற்பத்தி ( மாதிரிப் படம் )

விருதுநகர் மாவட்டம் சாத்தூர், சிவகாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 1,050 பட்டாசு ஆலைகள் இயங்கிவருகின்றன. சாத்தூர் அருகேயுள்ள அச்சங்குளத்தில் கடந்த பிப்ரவரி 12-ம் தேதி, சந்தனமாரி என்பவருக்குச் சொந்தமான ஃபேன்ஸி ரக தயாரிப்புக்கான நாக்பூர் உரிமம் பெற்று இயங்கிய 'ஸ்ரீ மாரியம்மாள் பட்டாசு ஆலை'யில் மருந்து கலக்கும்போது ஏற்பட்ட உராய்வால் விபத்து ஏற்பட்டது. அதில், 20 அறைகள் இடிந்து தரை மட்டமாகின. 27 பேர் உடல் கருகியும் சிதறியும் உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

பட்டாசு உற்பத்தி
பட்டாசு உற்பத்தி

முழுமையான விதிமீறலும், தொழிலாளர்களுக்கு அளிக்கப்பட்ட அதிகப்படியான பட்டாசு உற்பத்தி அழுத்தமும்தான் இந்த விபத்துக்குக் காரணமாகச் சொல்லப்பட்டது. சட்டவிரோதமாக ஒரே ஆலை, நான்கு பேருக்கு உள் குத்தகைக்கு விடப்பட்டதும் தெரியவந்தது. அந்தச் சம்பவம் நடந்த அடுத்த சில நாள்களிலேயே சிவகாசி அருகே காளையார்குறிச்சியில் நடந்த மற்றுமொரு பட்டாசு ஆலை விபத்தில் ஆறு பேர் உயிரிழந்தனர், 16 பேர் படுகாயமடைந்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அந்த ஒரே மாதத்தில் அடுத்தடுத்து நான்கு வெடி விபத்துகள் நடந்தன. ஆலைகளில்தான் சட்ட விரோதமாகப் பட்டாசு உற்பத்தி செய்யப்படுகிறது என்றில்லை. வீடுகளிலும் சட்ட விரோதமாக கருந்திரிகள் தயாரிக்கப்பட்டுவருகின்றன. இது தொடர்பாக போலீஸார் பலரைக் கைதுசெய்து நடவடிக்கை எடுத்துவந்தாலும்கூட, மீண்டும் மீண்டும் இந்தப் பகுதிகளிலுள்ள வீடுகளில் கருந்திரி, பட்டாசு உற்பத்தி நடந்துகொண்டேதான் இருக்கிறது. கடந்த ஜூன் 21-ம் தேதி தாயில்பட்டியில் சூர்யா என்பவர், தனது வீட்டில் சட்டவிரோதமாக `சோல்சா’ ரகப் பட்டாசு தயாரித்தபோது, சமையலறையிலிருந்து வெளிப்பட்ட தீப்பொறி பட்டு விபத்து ஏற்பட்டது.

பட்டாசு உற்பத்தி
பட்டாசு உற்பத்தி

இதில், அடுத்தடுத்த மூன்று வீடுகள் இடிந்து 5 வயது மகன் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர். இதையடுத்து சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டன. தற்போது தீபாவளிப் பண்டிகை நெருங்குவதால் மீண்டும் சட்டவிரோதமாகப் பட்டாசு உற்பத்தி செய்வது தலைதூக்கியிருக்கிறது. சட்டவிரோதமாகப் பட்டாசு உற்பத்தி செய்வதைத் தடுக்கவும், தொடர் பட்டாசு விபத்துகள், உயிரிழப்புகளைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல தரப்பினரும் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முதற்கட்டமாக 758 பட்டாசு ஆலைகளில் நடத்திய ஆய்வில், சட்ட விரோதமாகச் செயல்பட்டுவந்த 70 பட்டாசு ஆலைகளுக்கு தற்காலிகத் தடைவிதிக்கப்பட்டு மூடப்பட்டன. 116 ஆலைகளுக்கு விளக்கம் கோரும் நோட்டீஸ் அளிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி விடுத்துள்ள அறிக்கையில், ``விருதுநகர் மாவட்டத்தில் இயங்கிவரும் பட்டாசுத் தொழிற்சாலைகளில் ஏற்படும் தொடர் வெடி விபத்துகளைத் தடுக்கும் நோக்கில் அமைக்கப்பட்ட சிறப்பு ஆய்வுக்குழுவினர், கடந்த ஜூலை 9-ம் தேதி முதல் ஆய்வு நடத்திவருகிறார்கள். சிவகாசி, வெம்பக்கோட்டை, சாத்தூர், விருதுநகர், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், அருப்புக்கோட்டை ஆகிய தாலுகாக்களில் 758 பட்டாசு தொழிற்சாலைகள் ஆய்வுசெய்யப்பட்டன.

பட்டாசு உற்பத்தி
பட்டாசு உற்பத்தி

அதில், அதிகப்படியான விதிமீறல்களில் ஈடுபட்ட 70 தொழிற்சாலைகளுக்கு தற்காலிகத்தடை விதிக்கப்பட்டு, தற்காலிகமாக மூடப்பட்டன. 116 தொழிற்சாலைகளுக்கு விளக்கம் கோரும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக வீடுகளில் பட்டாசு உற்பத்தி செய்யப்பட்டதாக இந்திய வெடிபொருள் சட்டம் 1884 பிரிவு 9 (B) (1) (b) ன் கீழ் ஆறு வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. சட்டவிரோதமாக தொடர்ச்சியாகப் பட்டாசு உற்பத்தி செய்பவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும்” எனக் கூறியுள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism