Published:Updated:

`எல்.கே.ஜி, யு.கே.ஜி மாணவர்களுக்கு விடுமுறை உண்மைதான்’- முதல்வர் எடப்பாடி பழனிசாமி

முதல்வர் எடப்பாடி பழனிசாமி
முதல்வர் எடப்பாடி பழனிசாமி

``மழலையர் வகுப்புகளுக்கு விடுமுறை வழங்குவது தொடர்பாக சுகாதாரத்துறை மற்றும் தமிழக அரசுடன் விவாதிக்க வேண்டியுள்ளதால் இந்த உத்தரவு நிறுத்திவைக்கப்படுவதாக தகவல்கள் வெளியானது”

உலகளவில் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வந்த கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவி வருகிறது. இந்த நிலையில், அண்டை மாநிலங்களில் வைரஸ் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருவதைத் தொடர்ந்து தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனைத் தொடர்ந்து எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது தொடர்பாக குழப்பங்கள் நிலவி வந்தன. அதற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தற்போது விளக்கமளித்துள்ளார்.

எல்.கே.ஜி, யு.கே.ஜி மாணவர்கள்
எல்.கே.ஜி, யு.கே.ஜி மாணவர்கள்

முன்னதாக எடப்பாடி பழனிசாமி, தமிழக அமைச்சர்களுடன் கொரோனா வைரஸ் தடுப்பு குறித்து ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தினார். அதனைத் தொடர்ந்து, கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் எல்.கே.ஜி மற்றும் யூ.கே.ஜி பயிலும் மாணவர்களுக்கு வரும் 16ம் தேதி முதல் 31ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் அதேபோல், கேரளாவை ஒட்டிய கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி, கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் 5ஆம் வகுப்பு வரை விடுமுறை அறிவித்து பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது என்றும் செய்திகள் வெளியானது.

`எனக்கான விளம்பரத்தை ஸ்டாலினே செய்கிறார்!' -தஞ்சை திருமண விழாவில் கலகலத்த எடப்பாடி பழனிசாமி

ஆனால், இன்று அந்த உத்தரவு நிறுத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது. மழலையர் வகுப்புகளுக்கு விடுமுறை வழங்குவது தொடர்பாக சுகாதாரத்துறை மற்றும் தமிழக அரசுடன் விவாதிக்க வேண்டியுள்ளதால் இந்த உத்தரவு நிறுத்திவைக்கப்படுவதாக தகவல்கள் வெளியானது. தொடர்ந்து விடுமுறை தொடர்பான குழப்பங்கள் நிலவி வந்தன.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திண்டுக்கல்லில் மருத்துவக் கல்லூரி கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்டு திரும்பும்போது செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில், பள்ளிகளுக்கான விடுமுறை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, ``எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது உண்மைதான். இதுதொடர்பான முறையான அறிவிப்புகள் நாளை வெளியாகும். 5-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கான விடுமுறை குறித்தும் அறிவிப்பு நாளை வெளியாகும்” என தெரிவித்தார்.

`நாம் உழைப்பவர்கள், நமக்கு கொரோனா வராது!' - கிராம மக்கள்முன் முதல்வர் எடப்பாடி
அடுத்த கட்டுரைக்கு