Published:Updated:

ஊரடங்கு: `மாவட்ட எல்லைகள் மூடல்; இ-பாஸ் கட்டாயம்’ -முதல்வரின் முக்கிய அறிவிப்பு

 முதல்வர் எடப்பாடி பழனிசாமி
முதல்வர் எடப்பாடி பழனிசாமி

``மேலும் சில மாவட்டங்களில் ஊரடங்கை அமல்படுத்துவது குறித்தும் ஊரடங்கை கடுமையாக்குவது குறித்தும் முதல்வர் முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.”

கொரோனா வைரஸ் ஒவ்வொரு நாளும் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் மட்டும் அதிகளவில் பாதிப்பு இருந்துவந்த நிலையில் தற்போது மற்ற மாவட்டங்களிலும் தொற்று அதிகமாகப் பரவி வருகிறது. கிராமப்புறங்களிலும் அதிக பாதிப்புகள் ஏற்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், தேனி, மதுரை ஆகிய 6 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. எனினும், இந்த மாவட்டங்களில் கொரோனா பரவல் குறைவதாக இல்லை.

தலைமைச் செயலகம்
தலைமைச் செயலகம்

இந்த நிலையில், அந்தந்த மாவட்டங்களின் நிலவரம் குறித்து தெரிந்துகொள்ளவும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கவும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் இன்று ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். சென்னை தலைமைச் செயலகத்தில் வீடியோ கான்ஃபரன்ஸிங் மூலம் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வேலுமணி, உதயகுமார், தலைமைச் செயலர் சண்முகம், டிஜிபி திரிபாதி, சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

`இறைவனுக்குத்தான் தெரியும்!’ -கொரோனா முடிவுக்கு வருவது குறித்து முதல்வர் பழனிசாமி

கொரோனா வைரஸ் அதிகமாகப் பரவி வருவது குறித்தும் அதைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ராமநாதபுரம், திருச்சி, திருவண்ணாமலை, அரியலூர், தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் ஊரடங்கை கடுமையாக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. அதைத்தொடர்ந்து மாவட்ட எல்லைகளை மூடவும் மாவட்டங்களுக்கு இடையேயான பொது போக்குவரத்துகளை ரத்து செய்வது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

ஊரடங்கு
ஊரடங்கு

போக்குவரத்து மற்றும் தினசரி சந்தைகளில் மக்கள் கூடுவதன் வழியாக கொரோனா பரவல் அதிகரித்து வருவதாகவும் அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தால் மட்டுமே வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியும் என்றும் மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர்.

`288 சோதனைச் சாவடிகள்; பழைய இ-பாஸ் கேன்சல்!’ - சென்னையில் கடுமையாக்கப்படும் ஊரடங்கு

சென்னையில் அதிக பாதிப்பு ஏன்?

இந்த நிலையில், ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னர் முதல்வர் பழனிசாமி சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

* சென்னை, மக்கள்தொகை அதிகம் உள்ள மாநகரம். இங்கு குறுகலான தெருக்கள் உள்ளன. பொதுக்கழிப்பிடங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதனால்தான் அதிகமாக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. கொரோனா பரவலைத் தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம்.

இனி இ-பாஸ் கட்டாயம்!

* மண்டலத்துக்குள் போக்குவரத்து வசதிகள் இருப்பதால் நோய்த்தொற்றுகள் வேகமாகப் பரவுகிறது. நாளை முதல் ஜூன் 30-ம் தேதி வரை மண்டலங்களுக்கு இடையேயான போக்குவரத்துகள் ரத்து செய்யப்படுகின்றன. அந்தந்த மாவட்டங்களுக்கு உள்ளே போக்குவரத்துகள் இயங்க அனுமதி உண்டு.

* ஒரு மாவட்டத்தை விட்டு இன்னொரு மாவட்டத்துக்கு இனி செல்ல வேண்டுமெனில் இனி இ-பாஸ் கட்டாயமாகப் பெற வேண்டும். வெளி மாநிலம், வெளி மாவட்டம் ஆகிவற்றிலிருந்து வருபவர்களிடம் இ பாஸ் இருக்கும் பட்சத்தில் அவர்களை அனுமதிக்கலாம்.

* மாவட்டங்களில் எந்தப் பகுதியில் நோய்ப்பரவல் அதிகமாக உள்ளதோ அதைக் கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவிக்க வேண்டும் என்றும் அங்கு பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும் என்றும் ஆட்சியர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

* வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு முறையான பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். எல்லையில் இருக்கும் காவலர்கள் கவனமாக இந்தப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

மாவட்ட எல்லை
மாவட்ட எல்லை
Representational image

* மாவட்ட ஆட்சியர்கள் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அந்தந்தப் பகுதிகளில் தேவைக்கேற்ப நியமிக்கப்படுவார்கள்.

* பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சியில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் மற்றும் பொதுக்கழிப்பிடங்களில் தொடர்ந்து கிருமிநாசினிகளை அடிக்க வேண்டும்.

* இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் அதிக பரிசோதனைகளை செய்துள்ளது. இறப்பு சதவிகிதம் குறைந்துள்ளது. குணமடைந்தவர்களின் விகிதம் அதிகரித்துள்ளது. இதற்கு காரணமான சுகாதாரப் பணியாளர்களை பாராட்டுகிறேன்.

* நோய்ப்பரவல் படிப்படியாக அதிகரித்து உச்சத்தை அடைந்து, அதற்கு அடுத்தபடியாகதான் குறையும். எனவே, கொரோனா தடுப்புப்பணியில் அரசு முழுமையாக ஈடுபட்டு வருகிறது.

* சந்தைகள், வங்கிகள் எங்கு சென்றாலும் முகக்கவசங்கள் அணிந்து தனிமனித இடைவெளியை மக்கள் பின்பற்ற வேண்டும். வெளியில் சென்று வந்ததும் கைகளைக் கழுவ வேண்டும். இதை மக்கள் கடைப்பிடித்தாலே வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தலாம்.

அடுத்த கட்டுரைக்கு