Published:Updated:

நாஞ்சில் சம்பத்துக்கு `பேரறிஞர் அண்ணா விருது’ - தமிழ் வளர்ச்சித்துறை விருதுகளை அறிவித்தார் முதல்வர்

நாஞ்சில் சம்பத்

2021-ம் ஆண்டுக்கான தமிழ் வளர்ச்சித்துறை விருதுப் பட்டியலை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார், பேரறிஞர் அண்ணா விருதுக்கு நாஞ்சில் சம்பத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

நாஞ்சில் சம்பத்துக்கு `பேரறிஞர் அண்ணா விருது’ - தமிழ் வளர்ச்சித்துறை விருதுகளை அறிவித்தார் முதல்வர்

2021-ம் ஆண்டுக்கான தமிழ் வளர்ச்சித்துறை விருதுப் பட்டியலை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார், பேரறிஞர் அண்ணா விருதுக்கு நாஞ்சில் சம்பத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Published:Updated:
நாஞ்சில் சம்பத்

தமிழ் மொழியின் வளர்ச்சிக்குப் பெரிதும் பங்காற்றிய கவிஞர்கள் மற்றும் தமிழறிஞர்கள் போன்றோருக்கு, தமிழ் வளர்ச்சித்துறையின் கீழ் சிறந்த நபர்கள் தேர்வுசெய்யப்பட்டு தமிழ் அறிஞர்களின் பெயரில் ஆண்டுதோறும் ரூபாய் 1 லட்சம் ரொக்கத்துடன் தமிழக அரசு விருது வழங்கிவருகிறது. அதன்படி 2021-ம் ஆண்டுக்கான தமிழ் வளர்ச்சித்துறை விருதுகளை முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிட்டார். அதில் 2021-ம் ஆண்டுக்கான பேரறிஞர் அண்ணா விருது, தமிழ்ப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத்துக்கு வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

மேலும், 2021-ம் ஆண்டிற்கான மகாகவி பாரதியார் விருது பாரதி கிருஷ்ணகுமாருக்கும், பாவேந்தர் பாரதிதாசன் விருது செந்தலை கவுதமனுக்கும், சொல்லின் செல்வர் விருது சூர்யா சேவியருக்கும், சிங்கார வேலர் விருது கவிஞர் மதுக்கூர் ராமலிங்கத்துக்கும், வள்ளலார் விருது முனைவர் சஞ்சீவிராயருக்கும், தேவநேயப்பாவாணர் விருது முனைவர் அரசேந்திரனுக்கும், மறைமலை அடிகள் விருது சுகி.சிவத்துக்கும், இளங்கோவடிகள் விருது நெல்லை கண்ணனுக்கும், கம்பர் விருது பாரதி பாஸ்கருக்கும், உமறுப்புலவர் விருது ந.மம்மதுவுக்கும், கீ.ஆ.பெ விருது முனைவர் ராசேந்திரனுக்கும், ஜி.யு.போப் விருது ஏ.எஸ்.பன்னீர்செல்வத்துக்கும், அயோத்திதாசப் பண்டிதர் விருது ஞான.அலாய்ஸியசுக்கும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 பாரதி பாஸ்கர்
பாரதி பாஸ்கர்

இந்தப் பட்டியலில், தமிழ்த்தாய் விருது மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்துக்கும், சி.ப.ஆதித்தனார் விருது உயிர்மை திங்களிதழுக்கும் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் தமிழ் வளர்ச்சித்துறை விருது பெறுவோருக்கு இந்த ஆண்டு முதல் விருதுடன் ரூபாய் 2 லட்சம் ரொக்கமும், ஒரு சவரன் தங்கப் பதக்கமும் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.