Published:Updated:

குன்னூர் டு கோவை: காரை நிறுத்திவிட்டு நலம் விசாரித்த ஸ்டாலின்; நெகிழ்ந்த மக்கள்!

அன்னூர் முதல்வர் வாகனம்
News
அன்னூர் முதல்வர் வாகனம்

ஸ்டாலின் குன்னூரிலிருந்து கோவை திரும்பியபோது சுவாரசியமான சம்பவம் ஒன்று நடந்தது.

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தைத் தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் நீலகிரி வருகை தந்திருந்தார். உயிரிழந்த முப்படைத் தலைமைத் தளபதி உள்ளிட்டோருக்கு அஞ்சலி செலுத்தியவர், நேற்று மதியம் குன்னூரிலிருந்து கோவை புறப்பட்டார்.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

கோவை விமான நிலையத்திலிருந்து மதியம் விமானம் மூலம் சென்னை சென்றார். ஸ்டாலின் குன்னூரிலிருந்து கோவை திரும்பியபோது சுவாரசியமான சம்பவம் ஒன்று நடந்தது.

அன்னூர் அருகே முதல்வரைப் பார்க்க ஏராளான மக்கள் சாலையேராமாக நின்றுகொண்டிருந்தனர். அப்போது ஜெராக்ஸ் கடைக்குச் சென்ற ஒரு மாணவியும் சாலையேராமாக நின்றுகொண்டிருந்தார்.

சாலையோரமாக நிற்கும் மக்கள்
சாலையோரமாக நிற்கும் மக்கள்

அவர் கையில் மனுவுடன் நிற்பதாக நினைத்த முதல்வர் ஸ்டாலின், காரை நிறுத்திவிட்டு இறங்கி அவர்களை நோக்கிச் சென்றார். இதைச் சற்றும் எதிர்பாராத மக்கள் இன்ப அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் அருகில் சென்றவுடன்தான் ஸ்டாலினுக்கு உண்மை தெரிந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதையடுத்து, அவர்களை நலம் விசாரித்துவிட்டு ஸ்டாலின் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். ஸ்டாலினின் இந்தச் செயலால் அன்னூர் மக்கள் நெகிழ்ந்தனர். இது குறித்து அங்கிருந்த மக்கள் கூறுகையில், ``கையில் பேப்பருடன் இருந்ததால் மனு கொடுக்க நிற்பதாக நினைக்கப் போகிறார்கள் என்று கிண்டலாகப் பேசிக்கொண்டிருந்தனர்.

அவர்கள் சொன்னபடியே முதல்வரே இறங்கிப் பேசினார். இதை நாங்கள் துளியும் எதிர்பார்க்கவில்லை” என்றனர்.