Published:Updated:

கோயம்பேடு வாகன நிறுத்தத்தில் 53 நாள்களுக்கு ரூ.2,120 கட்டணம்; களமிறங்கிய விகடனால் உடனடித் தீர்வு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கோயம்பேடு பார்க்கிங்கில் கட்டணம்
கோயம்பேடு பார்க்கிங்கில் கட்டணம்

சென்னைப் பெருநகரக் குழும அறிவிப்பின்படி, கோயம்பேடு பார்க்கிங்கில் வாகனத்தை நிறுத்திய பொதுமக்கள் ஒருநாளுக்குரிய கட்டணம் மட்டும் செலுத்தி விட்டு தங்கள் வாகனங்களை எடுத்துக்கொள்ளலாம்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கொரோனா பாதிப்பால் மத்திய அரசு திடீரென்று நாடு முழுவதும் ஊரடங்கு அறிவித்தது. இதனால், சென்னையிலிருந்து வெளியூர் சென்றவர்கள் மீண்டும் ஊர் திரும்ப முடியாமல் தவித்தனர். கோயம்பேடு டாக்டர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் பேருந்து நிலையத்தில் ஏராளமானோர் தங்கள் வாகனங்களை பேருந்து நிலைய பார்க்கிங்கில் விட்டுச் சென்றிருந்தனர். சுமார் 145 நான்கு சக்கர வாகனங்களும், 1,359 இரு சக்கர வாகனங்களும் அங்கு விட்டுச் செல்லப்பட்டுள்ளன. தற்போது. வாகனங்களைத் திரும்ப எடுக்கச் செல்கின்ற பொதுமக்களிடம் இந்த வாகனங்களுக்கு 55 நாள்களுக்கும் முழுநேர வாடகைக் கட்டணம் வசூலிப்பதாகச் சொல்லப்பட்டது. இந்த விவகாரம் குறித்து விகடன் நிறுவனம், அதிகாரிகள் கவனத்துக்குக் கொண்டு சென்றது. இதையடுத்து, இரு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் எதுவாக இருப்பினும், அவற்றிற்கு 'ஒருநாள் கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும்' என ஒப்பந்ததாரருக்குக் கடிதம் மூலம் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

koyambedu
koyambedu

இந்த உத்தரவுக்குப் பின்னணி இதுதான்!

கடந்த மார்ச் 24-ம் தேதி வெளியூரில் செய்தி சேகரிக்க நமது நிருபர் ஒருவர் கோயம்பேட்டில் இரு சக்கர வாகனத்தை நிறுத்தி விட்டுச் சென்றிருந்தார். ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், உடனடியாக அவரால் சென்னை திரும்ப முடியவில்லை. 53 நாள்கள் கழித்து மே 16- ம் தேதி சென்னை, கோயம்பேடு திரும்பிய அவரிடத்தில், வாகனத்தை எடுக்க 53 நாள்களுக்கும் சேர்த்து ரூ.2,120 கட்டணமாகச் செலுத்தக் கூறியுள்ளனர். இதனால், அதிர்ந்து போன அவர் விவரம் கேட்க, 'கம்ப்யூட்டர் பில். குறைக்க முடியாது' என்று கூறி விட்டனர்.

தொடர்ந்து விகடனின் மூத்த செய்தியாளர் வழியாக, இந்த விஷயம் சி.எம்.டி.ஏ உறுப்பினர் செயலர் கார்த்திகேயன் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து, ஊரடங்குக் காலத்துக்கான கட்டணத்தைச் செலுத்தத் தேவையில்லை. ஒரு நாள் கட்டணத்தை மட்டும் செலுத்தி விட்டு மக்கள் தங்கள் வாகனங்களை எடுத்துச் செல்ல அவர் உத்தரவு பிறப்பித்தார்.

சம்மரில் வாகனங்கள் மக்கர் பண்ணாதிருக்க, இந்த 6 செக்கிங் அவசியம் பாஸ்! #CarCare

இது குறித்து கார்த்திகேயன் கூறுகையில், ``இந்தப் பிரச்னை தொடர்பாக அதிகாரிகளோடு கலந்து பேசி பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படாதவாறு முக்கிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்திருக்கிறேன். அரசு அமல்படுத்திய ஊரடங்கு நாள்கள் எத்தனையோ அவற்றை குத்தகைதாரர்களுக்கு நாங்கள் கூடுதலாகக் கொடுத்துவிடுவோம். அதனால் அவர்களுக்கு நஷ்டமில்லை" என்றார். பிரச்னையைக் கவனத்துக்குக் கொண்டு சென்ற ஒன்றரை மணி நேரத்தில் மக்கள் பயன்பெறும் வகையில், உத்தரவு வெளியிட்ட கார்த்திகேயனுக்கு விகடன் நன்றி தெரிவித்துக் கொள்கிறது.

கட்டண பார்க்கிங்
கட்டண பார்க்கிங்

இப்போது கட்டணம் எவ்வளவு?

சென்னைப் பெருநகரக் குழும அறிவிப்பின்படி, வாகனம் நிறுத்திய பொதுமக்கள் ஒரு நாளுக்குரிய கட்டணமாக, நான்கு சக்கர வாகனங்களுக்கு 50 ரூபாயும், இரு சக்கர வாகனங்களுக்கு 40 ரூபாயும் மிதிவண்டிகளுக்கு 15 ரூபாயும் செலுத்தி விட்டு தங்கள் வாகனங்களை எடுத்துக் கொள்ளலாம். தமிழ்நாட்டில் பல நகரங்களில் இது போன்ற பார்க்கிங்குகள் செயல்படுகின்றன. பொதுமக்கள், இந்த உத்தரவை மேற்கோளாகக் காட்டி பார்க்கிங் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு பெறலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு