மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் ’தி ஹெம்ப் கஃபேடேரியா’ என்ற காஃபி ஷாப் இருக்கிறது. காஃபி, சாண்ட்விச் போன்றவைதான் இங்கு பிரதானம். ஆனால், மற்ற கடைகளில் இருந்து இது வித்தியாசப்படும் காரணம், இங்கு விற்பனை செய்யப்படும் சாண்ட்விச் மற்றும் காபியில் ’பாங்க் (Bhang)’ கலக்கப்படுவதுதான். பாங்க் காபி, பாங்க் சாண்ட்விச் போன்றவை இங்கு விற்பனை செய்யப்படுகின்றன. பாங்க் என்பது கஞ்சா மொட்டு, இலை, அல்லது பூவில் இருந்து தயாரிக்கப்படும் உண்ணக்கூடிய, மருத்துவ குணமுடைய ஒரு கலவை.

பொதுவாக சிவராத்திரியன்று பாங்க் சேர்த்து தயாரிக்கப்பட்ட பானம் விற்பனை செய்யப்படும். அன்று ஒரு நாள் மட்டுமே வடமாநிலங்களில் இந்த பாங்க் பானம் தயாரித்து அருந்துவதுண்டு. இந்த பாங்க் பானம் தயாரிக்கப்படும் அதே மருத்துவப் பொருள்களைக் கொண்டு, புனே ஹெம்ப் காபி ஷாப்பில் பாங்க் காபி, பாங்க் சாண்ட்விச் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த கடை புனேயில் கடந்த நான்கு ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. கடையின் உரிமையாளர், அம்ருதா என்ற பெண்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இது குறித்து அம்ருதா கூறுகையில், ’பாங்க் மருத்துவ குணம் கொண்டது. உடலுக்கு நம்ப முடியாத பலன்களை கொடுக்கிறது. அதனை எனது சுய அனுபவத்தில் தெரிந்து கொண்டேன். நாங்கள்

மகாராஷ்டிராவில் கஞ்சா பயிரிட அனுமதி இல்லை. ஆனால் உத்தரகாண்டில் கஞ்சா பயிரிட அனுமதிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் கஞ்சாவை பயிரிட சட்டபூர்வமாக அனுமதி பெற நடவடிக்கை எடுத்துள்ளேன். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நான் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டேன். அதற்கு உத்தரகாண்டில் இருந்து கொண்டு வந்த பாங்க் மருந்து நல்ல பயன்கொடுத்தது. அதுதான் எனது வாழ்க்கையின் திருப்பு முனையாக அமைந்தது’ என்று தெரிவித்துள்ளார்.