Published:Updated:

திருமணம் தாண்டிய உறவு; 12 துண்டுகளாக வெட்டிக் கொல்லப்பட்ட பியூட்டி பார்லர் ஊழியர் - கோவை அதிர்ச்சி

கோவை கொலை

கோவை திருணம் தாண்டிய உறவில் ஏற்பட்ட பிரச்னையில் பியூட்டி பார்லரில் வேலை பார்த்த பிரபு என்பவரைக் கொன்று அவரின் உடலை 12 துண்டுகளாக்கி வீசிய வழக்கில் பெண் உட்பட 3 பேர் கைது.

திருமணம் தாண்டிய உறவு; 12 துண்டுகளாக வெட்டிக் கொல்லப்பட்ட பியூட்டி பார்லர் ஊழியர் - கோவை அதிர்ச்சி

கோவை திருணம் தாண்டிய உறவில் ஏற்பட்ட பிரச்னையில் பியூட்டி பார்லரில் வேலை பார்த்த பிரபு என்பவரைக் கொன்று அவரின் உடலை 12 துண்டுகளாக்கி வீசிய வழக்கில் பெண் உட்பட 3 பேர் கைது.

Published:Updated:
கோவை கொலை

கோவை துடியலூர் வி.கே.எல்.நகர் பகுதி குப்பைத்தொட்டியிலிருந்து கடந்த வாரம் வெட்டித் துண்டாக்கப்பட்ட ஒரு கைப்பகுதி கண்டறியப்பட்டது. அது ஓர் ஆணின் இடது கை என்ற ஒற்றைத் தகவல் மட்டுமே போலீஸுக்குக் கிடைத்தது. இது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. உடனடியாக எட்டு தனிப்படை போலீஸ் டீம்கள் அமைக்கப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது.

குப்பைத்தொட்டியில் இருந்த கை
குப்பைத்தொட்டியில் இருந்த கை

ரெளடிகளைக் கண்காணிப்பது, முன்விரோத வழக்குகளை ஆராய்வது, தொழிற்கூடங்கள், மருத்துவமனைகள் என்று அனைத்துப் பகுதிகளிலும் போலீஸ் சல்லடை போட்டு விசாரித்தனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

250 சிசிடிவி கேமராக்களை ஆய்வுசெய்து, சமீபத்தில் காணாமல்போன 500-க்கும் மேற்பட்ட நபர்களைப் பற்றி விசாரித்தனர். அப்போதுதான் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பிரபு (39) என்பவரைக் காணவில்லை என்று அவரின் மனைவி கோவை காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தது தெரியவந்தது.

பிரபு
பிரபு

பிரபு கோவையில் தங்கி ஓர் பியூட்டி பார்லரில் பணியாற்றிவந்தார். குப்பைத்தொட்டியில் கைப்பற்றப்பட்ட கையின் ரேகைகளோடு, பிரபுவின் அறையிலிருந்து கைப்பற்றப்பட்ட கை ரேகைகள் ஒத்துப்போயின. பிரபுவின் செல்போன் எண்ணை விசாரித்தபோதுதான் அதிர்ச்சித் தகவல் வெளியானது.

பிரபுவுக்கு ஏற்கெனவே இரண்டு திருமணங்கள் ஆகியுள்ள நிலையில், சரவணம்பட்டி பகுதியைச் சேர்ந்த கவிதா என்ற பெண்ணுடன் திருமணம் தாண்டிய உறவு இருந்ததும் தெரியவந்திருக்கிறது. சரவணம்பட்டியிலுள்ள கவிதாவின் வீட்டில்தான் பிரபு வாடகைக்கு இருந்திருக்க்கிறார்.

கவிதா
கவிதா

இதற்கிடையே கவிதாவுக்கு திவாகர் என்ற மற்றொரு நபருடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் அவர் பிரபுவைக் கண்டுகொள்ளவில்லை என்று சொல்லப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த பிரபு, கவிதாவைத் தனிமையில் எடுத்த படங்களையெல்லாம் காண்பித்து டார்ச்சர் செய்திருக்கிறார்.

இதையடுத்துதான், திவாகர், அவரின் மற்றொரு நண்பர் கார்த்திக் ஆகியோர் மூலம் பிரபுவைக் கொலை செய்துள்ளனர். இது தொடர்பாக கவிதா, திவாகர், கார்த்திக் மூன்று பேரையும் போலீஸார் கைதுசெய்துள்ளனர். இந்த வழக்கு குறித்து மேற்கு மண்டல ஐ.ஜி சுதாகர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,

ஐ.ஜி சுதாகர்
ஐ.ஜி சுதாகர்

“ஆரம்பத்தில் அந்தக் கையைத் தாண்டி வேறு எந்தத் துப்பும் கிடைக்கவில்லை. பொதுவாக இது போன்ற வழக்குகளில் தலை பாகம் கிடைத்தால்தான், குற்றவாளிகளை நெருங்க முடியும். காணமால்போனதாக வழக்கு பதிவான விவரங்களை ஆராய்ந்தபோதுதான் பிரபு குறித்து அவர் மனைவி கொடுத்த புகார் தெரியவந்தது.

பிரபுவின் அறையில் ஆய்வுசெய்ததில், வாட்டர் பாட்டிலிலிருந்து எடுக்கப்பட்ட கைரேகையுடன், குப்பைத்தொட்டியிலிருந்து எடுத்த கைரேகை ஒத்துப்போனது. பிறகு அவருக்கு வேண்டப்பட்டவர்கள் குறித்து விசாரித்தோம். அப்போதுதான் கவிதா குறித்துத் தெரியவந்தது. கடைசியாக பிரபு, திவாகர் மற்றும் கார்த்திக்குடன் செல்லும் சிசிடிவி காட்சிகள் கிடைத்தன.

திவாகர்
திவாகர்

பிரபுவின் செல்போனும், திவாகரின் செல்போனும் ஒரே இடத்தில்தான் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டன. அவர்களிடம் தொடர்ந்து விசாரித்ததில் உண்மையை ஒப்புக்கொண்டனர். கவிதாவுக்கு டார்ச்சர் கொடுத்ததால், பிரபுவைக் கொல்ல முடிவுசெய்து கிட்டத்தட்ட ஒரு வாரம் திட்டமிட்டுள்ளனர். கவிதா மூலம் பிரபுவை காந்திமாநகரில் உள்ள ஓர் அறைக்கு அழைத்துள்ளனர்.

திவாகர் எலெக்ட்ரீஷியனாகப் பணிபுரிந்துவருகிறார். அதனால் கடுமையான ஆயுதங்கள் மூலம் அங்கு வந்த பிரபுவைக் கொலை செய்துள்ளனர். மாட்டிக்கொள்ளக் கூடாது என்பதற்காக அவரின் உடலை 12 துண்டுகளாக வெட்டி எடுத்துள்ளனர். அந்த பாகங்களை குப்பைத்தொட்டி, கிணறு, சாக்கடை என்று பல்வேறு பகுதிகளில் வீசியுள்ளனர். தற்போதுவரை தலை உட்பட எட்டு பாகங்களை மீட்டிருக்கிறோம். தலைப்பகுதி கிடைப்பதற்கு முன்பே குற்றவாளிகளைக் கண்டறிந்துவிட்டோம்.

உடல் பாகங்கள் வீசிய கிணறு
உடல் பாகங்கள் வீசிய கிணறு

கிட்டத்தட்ட ஒரே வாரத்தில் இந்த வழக்கை முடித்த  எஸ்.பி., டி.எஸ்.பி உள்ளிட்ட அனைவருக்கும் பாராட்டுகள். இதன் மூலம் ஒருவர் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டால், எந்தச் சூழ்நிலையிலும் காவல்துறை நெருங்கிவிடும் என்ற செய்தியை தெரியப்படுத்துகிறோம்” என்றார்.