கோவை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக யானை உயிரிழப்புகள் தொடர்ந்துகொண்டிருக்கிறது. மேட்டுப்பாளையம், தேக்கம்பட்டி பகுதியில், பெண் யானை ஒன்று நேற்று துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டது. இதுதொடர்பாக, வனத்துறை இரண்டு பேரை கைது செய்தது.

அதேபோல, சிறுமுகை, லிங்காபுரம் பகுதியில் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த ஒரு பெண் யானையும் நேற்று மரணமடைந்தது. நேற்று ஒரே நாளில் மட்டும் கோவை மாவட்டத்தில் இரண்டு யானைகள் உயிரிழந்தன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்நிலையில், சிறுமுகை பகுதியில் இன்று ஒரு ஆண் யானை உயிரிழந்துள்ளது. இதுகுறித்து வனத்துறை, ``கடந்த 28-ம் தேதி மாலை உடல்நலக் குறைவால் பெத்திக்குட்டை பகுதியில் படுத்திருந்த ஆண் யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, யானை மீண்டும் வனப்பகுதிக்கு சென்றது. அடுத்த நாளே யானை மீண்டும் படுத்துவிட்டது. யானைக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

ஆனால், யானையின் உடல்நிலையில் தகுந்த முன்னேற்றம் ஏதும் காணப்படவில்லை. இன்று யானையைக் கண்காணிக்க சென்றபோது பிற காட்டு யானைகள் அருகே இருந்து அச்சுறுத்தியதால் யானையின் உடல்நிலை குறித்து அறிய இயலவில்லை.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
யானைகள் விலகி சென்றதைடுத்து, சென்று பார்த்தபோது அந்த யானை அசைவின்றி படுத்த நிலையில் காணப்பட்டது. மருத்துவர் யானையை பரிசோதித்து பார்த்தபோது, அது ஏற்கெனவே இறந்து விட்டதாகக் கூறினார். இறந்த யானையை உடற்கூறு பரிசோதனை செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளனர்.

இதன் மூலம், கோவையில் இரண்டு நாள்களில் 3 யானைகள் உயிரிழந்துள்ளன. கடந்த மூன்று மாதங்களில் 13 யானைகள் உயிரிழந்துள்ளன. யானைகள் தொடர்ந்து உயிரிழப்பது வனவிலங்கு ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.