Published:Updated:

தண்ணீரில் மூழ்கிய பாலம்; பரிசலில் சென்று பெண்ணுக்கு பிரசவம் பார்த்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பரிசல் பயணம்
108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பரிசல் பயணம்

``காலை 6 மணியளவில் காந்தவயல் மேலூர் பகுதியில் ஒரு பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வந்தது. கடந்த கால அனுபவத்தால் நாங்கள் இரண்டு குழுக்களாகப் பிரிந்துவிட்டோம்." - 108 ஆம்புலன்ஸ் டிரைவர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே லிங்காபுரம் - காந்தவயல் இடையே ஆற்றின் குறுக்கே பாலம் கட்டப்பட்டது. ஆனால், தண்ணீர் அதிகமாகும் போதெல்லாம் அது மூழ்கிவிடுகிறது. அது போன்ற நேரங்களில் மக்கள் பரிசல் பயணத்தையே நம்பி இருக்கின்றனர். ஆண்டுக்குக் குறைந்தபட்சம் ஐந்து மாதங்களுக்கு மேல் அந்தப் பாலம் தண்ணீருக்குள் மூழ்கிவிடுகிறது.

காந்தவயல் பரிசல் பயணம்
காந்தவயல் பரிசல் பயணம்
சமயோஜிதமாகச் செயல்பட்ட 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்... பிறந்த இரட்டைப் பெண் குழந்தைகள்!

இதனால் அடிப்படை பணிகள் தொடங்கி அனைத்துக்கும் மக்கள் பரிசலில்தான் செல்கின்றனர். இந்நிலையில், காந்தவயல் பகுதியில் ஒரு பெண்ணுக்குப் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

உடனடியாக 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் சொல்லப்பட்டுவிட்டது. ஆனால், காந்தவயல், வனப்பகுதியை ஒட்டி இருக்கிறது. மேட்டுப்பாளையம் நகரப் பகுதியில் இருந்து காட்டு வழியாகச் செல்ல சற்று நேரம் எடுக்கும். ஏற்கெனவே சில ஆண்டுகளுக்கு முன்பு 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அந்த கிராமத்துக்குச் சென்றபோது, பிரசவம் பார்க்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

காந்தவயல் கிராமம்
காந்தவயல் கிராமம்

இந்த முறையும் பிரசவ வலி ஏற்பட்ட பெண்ணுக்கு, 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்தான் வெற்றிகரமாக பிரசவம் பார்த்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் நந்தகோபால், சுகுமார், அருண்குமார், சுரேஷ் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர்கள் அஜித், விஜய், மேரி ஆகியோர் அடங்கிய குழுவினர்தான் பிரசவம் பார்த்துள்ளனர். இதுகுறித்து 108 ஆம்புலன்ஸ் டிரைவர் நந்தகோபால் கூறுகையில், ``காலை 6 மணியளவில் காந்தவயல் மேலூர் பகுதியில் ஒரு பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வந்தது.

108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பரிசல் பயணம்
108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பரிசல் பயணம்

கடந்த கால அனுபவத்தால் நாங்கள் இரண்டு குழுக்களாகப் பிரிந்துவிட்டோம். மேட்டுப்பாளையத்தில் இருந்து, ஆம்புலன்ஸ் மூலம் செல்ல 45 நிமிடம் முதல் 1 மணி நேரம் வரை ஆகும்.

இதனால் ஒரு குழு பரிசல் மூலமாகவும், மற்றொரு குழு ஆம்புலன்ஸ் மூலமாகவும் சென்றுவிட்டோம். நாங்கள் சென்றபோது பெண்ணுக்குப் பிரசவ வலி தீவிரமடைந்திருந்தது. தொழில்நுட்ப குழுவினருக்கு பிரசவம் மற்றும் ஆபத்துக்கால கட்டங்களுக்கான பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. அதனால், வெற்றிகரமாகப் பிரசவம் பார்த்து குழந்தை பிறந்தது.

பிரசவம்
பிரசவம்

இதே காந்தவயல் பகுதியில் நாங்கள் பார்த்துள்ள இரண்டாவது பிரசவம் இது. மேட்டுப்பாளையம் சுற்றுவட்டாரங்களில் இதுவரை 12 பிரசவங்களை 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் செய்துள்ளோம்.

பிரசவமானதும் குழந்தையை மட்டும் பரிசல் மூலம் உடனடியாக சென்று அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்துவிட்டோம்.

பிறந்த குழந்தையுடன் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பரிசல் பயணம்
பிறந்த குழந்தையுடன் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பரிசல் பயணம்
டோலி கட்டித் தூக்கிச் செல்லப்பட்ட கர்ப்பிணி; வேலூர் மலை கிராம மக்களைத் தொடரும் துயரம்!

அந்தப் பெண்ணை ஆம்புலன்ஸ் மூலம், மேல் சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளோம். இருவரும் நலமாக உள்ளனர்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு