கோவை கொடிசியா வளாகத்தில் தொழில் கண்காட்சியை அமைச்சர் செந்தில் பாலாஜி திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர், ``12 மணி நேரம் தொழில் அமைப்புனருடன் பயணம் மேற்கொண்டேன்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இது மகிழ்ச்சியை அளிக்கிறது. 2 ஆண்டுகளுக்கு பின்னர் பயனுள்ள நிகழ்வாக இது உள்ளது. இங்கு கரூர் பகுதி மக்களும் வந்துள்ளனர். கோவை தொழில் அமைப்பினர் முதல்வரிடம் மனு அளித்துள்ளனர்.
முதல்வர் கோவைக்கு தனிக்கவனம் எடுத்து வருகிறார். இங்கு வைக்கப்பட்டுள்ள அனைத்து கோரிக்கைகளும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பயனுள்ள அனைத்து ஸ்டால்களிலும் சிறப்பான ஏற்பாடுகள் செய்துள்ளனர்.

கரூரில் இது போன்ற கண்காட்சிகள் நடத்தப்பட வேண்டும். கோவையைப் பொறுத்த வரை தொழில் கூட்டமைப்புகள் உள்ளன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
முதல்வர் வழிகாட்டுதலின்படி கோவை வந்துள்ளேன். கரூரும், கோவையும் எனக்கு இரண்டு கண்கள் போன்றவை. இந்தக் கண்காட்சியில் 460 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் ரூ.100 கோடிக்கும் அதிகமான வர்த்தகம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கோவையை சேர்ந்த பல்வேறு நிறுவனங்கள் இந்த கண்காட்சியின் வர்த்தகம் மூலம் பயன்பெற உள்ளனர்.” என்றார்.