Published:Updated:

குடும்பத்தினர் 5 பேர்... கிடைத்த வாக்கு 1... அதிர்ச்சியடைந்த கோவை பாஜக வேட்பாளர்

கோவை குருடம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட 9-வது வார்டுக்கு இடைத்தேர்தலில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் கார்த்திக் ஒரே ஒரு வாக்கை மட்டும் பெற்றுள்ளார்.

கோவை மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகளில் திமுக பெரும்பாலான இடங்களைக் கைப்பற்றிவருகிறது. அந்த வகையில் பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம், குருடம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட 9-வது வார்டுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.

கோவை
கோவை
உள்ளாட்சித் தேர்தல்: T23 புலி அச்சத்தையும் மீறி வாக்குகளைப் பதிவு செய்து வரும் மசினகுடி மக்கள்

திமுக சார்பில் அருள்ராஜ், அதிமுக சார்பில் வைத்தியலிங்கம், பாஜக சார்பில் கார்த்திக், தேமுதிக சார்பில் ரவிக்குமார் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

அங்கு மொத்தம் 1,551 வாக்குகள் உள்ள நிலையில், தேர்தலில் 913 வாக்குகள் பதிவாகின. இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்தே அருள்ராஜே முன்னிலை வகித்துவந்தார். அருள்ராஜ் 387 வாக்குகள் பெற, அவருக்கு அடுத்ததாக சுயேச்சை வேட்பாளர் ஜெயராஜ் 240 வாக்குகளைப் பெற்றார்.

கோவை தேர்தல் முடிவு
கோவை தேர்தல் முடிவு

அதிமுக வேட்பாளர் வைத்தியலிங்கம் 196 வாக்குகளைப் பெற்றார். மூன்று வாக்குகள் செல்லாதவை என்று அறிவிக்கப்பட்டன.

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல்: 169 இடங்களில் போட்டியிட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர், 77 இடங்களில் வெற்றி! - காலை நிலவரம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதையடுத்து, அருள்ராஜ் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. பாஜக சார்பில் போட்டியிட்ட கார்த்திக் ஒரு வாக்கையும், தேமுதிக ரவிக்குமார் இரண்டு வாக்குகளையும் பெற்றுள்ளனர். கார்த்திக் பாஜக இளைஞரணி மாவட்ட துணைத் தலைவராக இருக்கிறார். ``கார்த்திக் உட்பட அவர் குடும்பத்தில் 6 பேர் உள்ளனர்.

பாஜக கார்த்திக்
பாஜக கார்த்திக்

அவருடைய குடும்பத்தினர், கட்சியினர் வாக்களித்திருந்தாலே இதைவிட அதிகம் வாக்கு வாங்கியிருக்க முடியும். குடும்பத்தினர்கூட அவரை ஆதரிக்கவில்லை” என்று திமுக உள்ளிட்ட கட்சிகள் விமர்சித்துவருகின்றன.

இந்நிலையில், `தனது குடும்பத்தினருக்கு 4-வது வார்டில்தான் ஓட்டு இருப்பதாகவும், தேர்தலில் பணநாயகம் வென்றதாகவும்’ விளக்கம் அளித்துள்ளார் கார்த்திக்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு