Published:Updated:

ஃபேஷியல் செய்யச் சென்ற சிறுவனுக்கு நடந்த துயரம், கோவை அழகு நிலைய உரிமையாளர் கைது: என்ன நடந்தது?

ஃபேஷியல்

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் ஃபேஷியல் செய்யச் சென்ற சிறுவனின் முகம் காயத்தால் ரணமாக, அழகு நிலைய உரிமையாளர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.

ஃபேஷியல் செய்யச் சென்ற சிறுவனுக்கு நடந்த துயரம், கோவை அழகு நிலைய உரிமையாளர் கைது: என்ன நடந்தது?

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் ஃபேஷியல் செய்யச் சென்ற சிறுவனின் முகம் காயத்தால் ரணமாக, அழகு நிலைய உரிமையாளர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.

Published:Updated:
ஃபேஷியல்

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவரின் மகன் ஶ்ரீ விஷ்ணு (17), கடந்த வாரம் அதே பகுதியில் உள்ள `ராக்’ எனப்படும் ஆண்கள் அழகு நிலையத்துக்கு சென்றுள்ளார். முகத்துக்கு ஃபேஷியல் செய்தபோது, அவருக்கு ஸ்டீமிங் செய்துள்ளனர்.

காயமடைந்த சிறுவன்
காயமடைந்த சிறுவன்

அப்போது வெப்பம் அதிக அளவு இருந்ததால், விஷ்ணுவின் முகம் வெந்துவிட்டது. அதிர்ச்சியில் சிறுவன் வீட்டுக்குச் சென்று நடந்ததைக் கூறியுள்ளார். இதுகுறித்து விஜயகுமார் ஆர்.எஸ்.புரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அங்கு இரண்டு தரப்பினரையும் அழைத்து போலீஸ் விசாரித்துள்ளது. அப்போது, `கடையை 10 நாள்களுக்கு பூட்டி வைக்க வேண்டும். மருத்துவ செலவை ஏற்க வேண்டும்’ என்று காவல்துறையில் இருந்து அழகு நிலைய உரிமையாளர் சஞ்சய் தாஸ்க்கு உத்தரவிட்டுள்ளனர். ஆனால், அவர்கள் சொன்னபடி நடக்கவில்லை.

சம்பவம் நடந்த கடை
சம்பவம் நடந்த கடை

சிகிச்சைக்கு பணம் தர முடியாது என மறுத்ததுடன் கடையை பூட்டாமல் இருந்துள்ளனர். அதிர்ச்சியடைந்த விஜயகுமார், இதுகுறித்து கோவை மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்தார்.

அதனடிப்படையில் கடை உரிமையாளர் சஞ்சய் தாஸ் மற்றும் கடையில் பணியாற்றி வரும் வித்யாதரன் என்ற ஊழியர் மீது ஆர்.எஸ்.புரம் போலீஸ் வழக்குப்பதிவு செய்தனர்.

கைது
கைது

அதைத்தொடர்ந்து இருவரும் போலீஸாரால் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்தச் சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.