Published:Updated:

கோவை: 3 நாள்களில் 21 பேருக்கு கொரோனா.. ஹாட்ஸ்பாட்டாகும் சின்னியம்பாளையம், ஆர்.ஜி.புதூர்?

ஆர்.ஜி.புதூர்
ஆர்.ஜி.புதூர்

கோவை: 3 நாள்களில் 21 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டதால், கோவை, சின்னியம்பாளையம் ஆர்.ஜி.புதூர் பகுதி ஹாட் ஸ்பாட்டாக மாறியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பாதிப்பு மிகவும் அதிகமாக உள்ள சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நள்ளிரவு முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாக தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

கோவை
கோவை
5 கர்ப்பிணிகள் உட்பட 9 நோயாளிகளுக்கு கொரோனா... கோவை அரசு மருத்துவமனை அதிர்ச்சி

கோவை மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. சின்னியம்பாளையம், ஆர்.ஜி.புதூர் பகுதி கொரோனா ஹாட் ஸ்பாட்டாக மாறியுள்ளது.

சின்னியம்பாளையம், ஆர்.ஜி.புதூர், ராமர் கோயில் வீதியைச் சேர்ந்த 28 வயது இளைஞர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தார். பரிசோதனை முடிவில் அந்த இளைஞருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. சுகாதாரத்துறை இதை வெளிப்படையாக அறிவிக்கவில்லை என்றாலும், சில அதிகாரிகள் அந்த இளைஞருக்கு கொரோனா பாசிட்டிவானதை உறுதிபடுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

சின்னியம்பாளையம்
சின்னியம்பாளையம்

ராமர் கோயில் வீதி, ஆர்.ஜி.புதூர். சின்னியம்பாளையம் பகுதிகளில் கடந்த மூன்று நாள்களில் 21 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. முக்கியமாக, ராமர்கோயில் வீதியில் மொத்தம் உள்ள 26 பேர்களில் 12 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, ராமர் கோயில் பகுதி தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சின்னியம்பாளையம் அருகே உள்ள மைலாம்பட்டி பகுதியில் கணவன், மனைவிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருப்பதால், சின்னியம்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடைகள் மூடப்பட்டுள்ளன. அந்தப்பகுதிகளில் மக்களுக்கு தொடர்ந்து கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

கொரோனா பரிசோதனை
கொரோனா பரிசோதனை

மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடனும், விழிப்புடனும் இருக்க வேண்டுமென மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனிடையே, கோவையில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் வெளியில் சுற்றினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு