‘‘இப்பல்லாம் யார் சாதி பாக்கறாங்க?’’ என்பது போன்ற வசனங்கள் இப்போதும் காதில் ஒலித்துக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், அரசியல் தொடங்கி அரசு அலுவலகங்கள் வரை பின்னிப் பிணைந்து ஊடுருவியிருக்கிறது சாதியம். அதற்கு இன்னோர் உதாரணம் கோவை மாநகராட்சி.

கோவை மாநகராட்சியில், கடந்த ஆண்டு 325 தூய்மைப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டார்கள். அரசு வேலைக்கு ஆசைப்பட்டு, அந்தப் பணிக்கு எம்.இ., எம்.பி.ஏ., எம்.ஏ மற்றும் பிஹெச்.டி படித்த பலரும் விண்ணப்பித்து, பணியும் கிடைத்தது. அன்றைய நாள்களில் இது பெரும் விவாதத்தைக் கிளப்பியது. இந்தநிலையில், ‘‘மேற்கண்ட பணி நியமனத்தில் முறைகேடு நடந்திருக்கிறது. பணி நியமனம் பெற்றவர்களில் பலர், தூய்மைப் பணியில் ஈடுபடுவதில்லை. பட்டியல் சமூகத்தினர் மட்டுமே தூய்மைப் பணியில் ஈடுபடுகிறார்கள்’’ என்று புகார் எழுந்திருக்கிறது.

இந்த விவகாரம் குறித்து சமூகநீதிக் கட்சித் தலைவர் வழக்கறிஞர் பன்னீர்செல்வம் நம்மிடம் பேசினார். ‘‘கோவை மாநகராட்சியில் நீண்டகாலமாகப் பணிபுரிந்துவரும் தூய்மைப் பணியாளர்களுக்கு எந்த உபகரணமும் வழங்கப்படுவதில்லை. தமிழ்நாட்டில் மற்ற இடங்களில் கொடுக்கப்படும் ஊதியம்கூட அவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை. 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள்தொகை கொண்ட கோவை மாநகராட்சியில், 4,000 தூய்மைப் பணியாளர்கள் மட்டுமே இருக்கிறார்கள். கொரோனா காலத்தில் உயிரைத் துச்சமென நினைத்து பணியாற்றிய அவர்களின் குடியிருப்புகளைக்கூட நகரத்தைவிட்டு அப்புறப்படுத்தி, ஊருக்கு வெளியே கொண்டு சென்றுவிட்டார்கள். தினமும் 100 ரூபாய் போக்குவரத்துக்குச் செலவு செய்துதான் அவர்கள் பணிக்கு வருகிறார்கள்.

இந்தநிலையில்தான், 2020-ம் ஆண்டு, மே மாதம் 325 பேரைத் தூய்மைப் பணிக்கு எடுத்தார்கள். மூன்று முதல் ஐந்து லட்சம் ரூபாய் வரை பணம் வாங்கிக்கொண்டுதான் பணி ஆணை வழங்கியிருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் தூய்மைப் பணி செய்வதில்லை. அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே தூய்மைப் பணிக்கு அனுப்பப் படுகிறார்கள். மற்றவர்கள் மாநகராட்சி தொடர்பான வேறு வேலைகளில் பணியமர்த்தப்படுகிறார்கள். அதுவே, அருந்ததியர் சமுதாயத்தினர் பட்டதாரியாக இருந்தாலும், அவரைக் குப்பை அள்ளத்தான் அனுப்புகிறார்கள்.

இது குறித்துத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்டதற்கு, பதில் அனுப்பாமல் இழுத்தடித்தார்கள். பிறகு, சாதியைக் குறிப்பிடாமல் மேலோட்டமாகச் சில தகவல்களை வழங்கினார்கள். ஒருசில மண்டலங்களில் மட்டும் சாதியுடன், தூய்மைப் பணியாளரின் பெயர், அவர்கள் செய்யும் பணி உள்ளிட்ட விவரங்களை வழங்கினார்கள். அதில்தான், அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் திட்டமிட்டு தூய்மைப் பணி கொடுப்பது தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார் அளித்திருக்கிறோம். சென்னை உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்திருக்கிறோம்’’ என்றார்.

டாக்டர் அம்பேத்கர் மாநில மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் சங்கத் தலைவர் துரைராஜ் பேசினார், ‘‘325 தூய்மைப் பணியாளர்கள் நியமனத்தில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளன. எம்.இ., எம்.ஏ., பிஹெச்.டி பட்டதாரி களையெல்லாம் பணிக்கு அமர்த்தியிருக்கிறார்கள். பணபலத்தால் அரசியல் வாதிகள் துணையுடன் தூய்மைப் பணிக்கு வந்துவிட்டு, ஒருநாள்கூட அந்தப் பணியில் ஈடுபடுவதில்லை. மேற்பார்வையாளர்கள், பொறியாளர்களின் உதவியாளர்கள் என வெவ்வேறு பணிகளில் அவர்களை ஈடுபடுத்திவருகிறார்கள். இதற்கு எதிராக நாங்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளோம். நான் ப்ளஸ் டூ முடித்துவிட்டுத்தான் தூய்மைப் பணிக்கு வந்தேன். அதன் பிறகு பி.ஏ முடித்தேன். அப்படியிருந்தும், 15 ஆண்டுகளுக்கு மேல் போராடித்தான் மாநகராட்சியில் பதிவுரு எழுத்தர் பணி கிடைத்தது. இப்போது பணம் கொடுத்தவர்களை மட்டும் அலுவலகப் பணிக்குப் பயன்படுத்திக் கொண்டு, பட்டியல் சமூக மக்களை தூய்மைப் பணிக்குத் தள்ளியிருக்கிறார்கள்’’ என்றார் ஆதங்கத்துடன்.

மூத்த தூய்மைப் பணியாளர் ஜெகநாதன், “தம்பி, நான் 25 வருஷமா குப்பை அள்ளுறேன். இதுவரைக்கும் எனக்கு பிரமோஷன் கொடுக்கலை. இப்போ பணம் கொடுத்து வேலைக்கு வந்துட்டு, குப்பை அள்ளுற வேலையும் பார்க்காம எங்களையே ஏளனமா பேசுறாங்க. அவங்களுக்கு அதிகாரிங்க ஆதரவு இருக்குது. என்னத்தைச் சொல்ல... எங்க தலையெழுத்துல குப்பைன்னு எழுதிட்டான் கடவுள்’’ என்று வேதனைப்பட்டார்.

கோவை மாநகராட்சி ஆணையர் குமரவேல் பாண்டியனிடம் பேசினோம். ‘‘இந்தக் குற்றச்சாட்டில் உண்மையில்லை. இது தொடர்பாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்துக்கும் நாங்கள் பதில் அளித்திருக்கிறோம். திடக்கழிவு மேலாண்மை விதிகள் அமலுக்கு வந்த பிறகு, தூய்மைப் பணியில் நவீனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திவருகிறோம். 325 பேர் பணி நியமனத்தில், இட ஒதுக்கீடு உள்ளிட்ட அனைத்து விதிகளும் பின்பற்றப்பட்டுள்ளன. எங்கள் நிர்வாக விதிகளின்படி, சம்பந்தப்பட்ட துறைக்குள் யாரையும், எந்தப் பணிக்கு வேண்டுமானாலும் அமர்த்திக்கொள்ளலாம். இது தொடர்பான வழக்கில், சென்னை உயர் நீதிமன்றத்திலும் அறிக்கை சமர்ப்பித்திருக்கிறோம். அதேபோல பாரபட்சம் இல்லாமல் அனைவரையும் சமமாகவே நடத்துகிறோம்’’ என்றார்.

சமூகநீதி என்பது பெயரளவுக்கு இல்லாமல், சாமானியர்களைப் பாதுகாப்பதாக இருக்க வேண்டும்!