Published:Updated:

கோவை: 400 படுக்கைகள்; திரைப்பட அனுபவம்! - கொரோனா சிகிச்சை மையமான கொடிசியா

கொடிசியா
கொடிசியா

கோவை மாவட்டத்தில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், கொடிசியா வளாகத்தின் ஒரு பகுதி கொரோனா சிகிச்சை மையமாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. கோவையிலும், கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. கோவையில் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 500-ஐ கடந்துவிட்டது. அதேபோல, கொரோனா வைரஸால் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொடிசியா
கொடிசியா
உயர் அதிகாரியின் அழைப்பு: உயிரிழந்த பி.டி.ஓ? - கொரோனா அதிர்ச்சியில் திருவள்ளூர் தி.மு.க

கோவையில், அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கிட்டத்தட்ட 2,700 படுக்கை வசதிகள் இருந்தாலும், நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவினாசி சாலையில் உள்ள கொடிசியாக வளாகத்தின் ஒரு பகுதி, கொரோனா சிகிச்சை மையமாக மாறியுள்ளது.

அதன்படி, கொடிசியாக வளாகத்தில் உள்ள D ஹால் கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டு, நேற்று இரவு முதல் பயன்பாட்டுக்கும் வந்துவிட்டது. முதல்கட்டமாக இ.எஸ்.ஐ மருத்துவமனையில் இருந்து 70-க்கும் மேற்பட்ட நோயாளிகள் கொடிசியாவுக்கு மாற்றப்பட்டுள்ளனர். அங்கு, ஆண், பெண் என்று இரண்டு வார்டுகள் பிரிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கொரோனா வார்டு
கொரோனா வார்டு

முக்கியமாக, நோயாளிகளின் பொழுதுபோக்குக்காக அந்தச் சிகிச்சை மையத்தில் ஆங்காங்கே திரைகள் வைக்கப்பட்டுள்ளன. அதில் திரைப்படங்கள் ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. கொடிசியா கொரோனா சிகிச்சை மையத்தைக் கோவை மாவட்ட ஆட்சியர் இராசாமணி ஆய்வு செய்தார்.

Vikatan

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் இராசாமணி, ``கொடிசியாவில் 400 படுக்கைகள் கொண்ட சிகிச்சை மையம் அமைக்கப்பட உள்ளது. முதல்கட்டமாக 286 படுக்கைகள் தயாராகிவிட்டன. அறிகுறி இல்லாத மற்றும் பாதிப்பு குறைவாக உள்ள நோயாளிகளுக்கு மட்டும் இங்கு சிகிச்சை அளிக்கப்படும். இங்கு சுழற்சி அடிப்படையில் 24 மணிநேரமும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப்பணியாளர்கள் பணியாற்றுவார்கள்.

கொடிசியா
கொடிசியா

நோயாளிகளுக்கு தேவையான உணவு, கழிப்பிடம் போன்ற அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறை மேற்பார்வையில் இந்த மையம் செயல்படும்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு