Published:Updated:

``கோவை மக்கள் பதற்றமடைய வேண்டாம்... ஆனால்..!" - கொரோனா குறித்து எச்சரிக்கும் ஆட்சியர்

கோவை
News
கோவை

``கடந்த ஆண்டு கொரோனா 2-வது அலையில், கோவை மாவட்டத்தில் தினசரி பாதிப்பு 4,700 வரை இருந்தது. அது படிப்படியாகக் குறைந்து 72-ஆக வந்தது. ஆனால், தற்போது ஒரே நாளில் (நேற்று) பாதிப்பு எண்ணிக்கை 240-ஆக உயர்ந்துள்ளது.’’ - ஆட்சியர் சமீரன்

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்துவருவதால், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுவருகின்றன. இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ``கோவையில் கடந்த ஆண்டு கொரோனா 2-வது அலையில் தினசரி 4,700 வரை பாதிப்பு இருந்தது.

கோவை ஆட்சியர் சமீரன்
கோவை ஆட்சியர் சமீரன்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அது படிப்படியாகக் குறைந்து 72-ஆக வந்தது. ஆனால், தற்போது ஒரே நாளில் (நேற்று) பாதிப்பு எண்ணிக்கை 240-ஆக உயர்ந்துள்ளது. பொது இடங்களில் கொரோனா விதிகளைக் கடைபிடிக்காவிடில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

கோவை மாவட்ட எல்லை சோதனைச்சாவடிகளில் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டுவருகின்றன. மாவட்டத்தில் 2,730 படுக்கைகள், 99 கிலோ லிட்டர் ஆக்சிஜன் கொள்ளளவு, 2,750 ஆக்ஸிஜன் கான்சன்ட்ரேட்டர்ஸ் தயார்நிலையில் உள்ளன. சமூகப் பரவல் ஏற்படாமலிருக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

கோவை
கோவை

பொது இடங்களுக்குச் செல்லும்போது, மக்கள் கட்டாயம் இரண்டு மாஸ்க் அணிய வேண்டும். ஒமைக்ரான் வைரஸ் வேகமாகப் பரவும். தடுப்பூசி எடுக்காதவர்கள் உடனடியாகத் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மக்கள் பதற்றமடைய வேண்டாம். அதேநேரத்தில் மிகவும் கவனமாக, பாதுகாப்பாக இருக்க வேண்டும். அரசின் கொரோனா விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். லேசான வைரஸ் தொற்று மற்றும் அறிகுறி உள்ளவர்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக்கொள்ளவும். அவர்களைக் கட்டுப்பாட்டு அறை மூலமாகத் தொடர்ந்து கண்காணிப்போம்.

கொரோனா
கொரோனா

கேரளாவிலிருந்து பேருந்துகள் மூலம் கோவை வரும் பயணிகளை சோதனைச்சாவடியில் பரிசோதிக்க முடியாது. எனவே, பயணிகளுக்குப் பேருந்து நிலையங்களில் பரிசோதனை செய்யப்படும். கோவையில் 9-ம் தேதி நடைபெறவிருந்த ஜல்லிக்கட்டு, வேறு ஒரு தேதியில் நடைபெறும்” என்றார்.