Published:Updated:

மாற்றுத்திறனாளி சிறுவனுக்குக் காலணி அணிவித்த கோவை ஆட்சியர் - குடும்பத்தினர் நெகிழ்ச்சி!

மாற்றுத்திறனாளி சிறுவன்

கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், மாற்றுத்திறனாளி சிறுவனுக்குக் காலணி அணிவித்துள்ளார்.

மாற்றுத்திறனாளி சிறுவனுக்குக் காலணி அணிவித்த கோவை ஆட்சியர் - குடும்பத்தினர் நெகிழ்ச்சி!

கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், மாற்றுத்திறனாளி சிறுவனுக்குக் காலணி அணிவித்துள்ளார்.

Published:Updated:
மாற்றுத்திறனாளி சிறுவன்

கோவை போத்தனூர் பகுதியைச் சேர்ந்தவர் வேல்முருகன். மாற்றுத்திறனாளியான வேல்முருகனுக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவரது மூத்த மகள் அரசுப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். அவரது இளைய மகன் அழகுமணிக்கு 3 வயதாகிறது.

வேல்முருகன் குடும்பம்
வேல்முருகன் குடும்பம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பெட்டிக் கடை நடத்தி வந்த வேல்முருகன், கொரோனா காலத்தில் வாழ்வாதாரம் இழந்து அன்றாட தேவைகளுக்கே சிரமப்பட்டு வந்தார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

வேல்முருகனின் குழந்தை அழகுமணியும் மாற்றுத்திறனாளிதான். இதையடுத்து, தனக்கு உதவி செய்யுமாறு, கடந்த 5-ம் தேதி மாவட்ட ஆட்சியரிடம் வேல்முருகன் மனு அளித்திருந்தார். இந்நிலையில், அவரது மனு பரிசீலனை செய்யப்பட்டு வேல்முருகன் மற்றும் சிறுவனுக்கு இன்று காலணிகள் வழங்கப்பட்டன.

மாற்றுத்திறனாளி சிறுவன் ஆட்சியர்
மாற்றுத்திறனாளி சிறுவன் ஆட்சியர்

மேலும், வேல்முருகன் மகளுக்கு மிதிவண்டி, புத்தகப் பை உள்ளிட்ட உபகரணங்களை மாவட்ட ஆட்சியர் சமீரன் வழங்கினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முக்கியமாக, மாற்றுத்திறனாளி சிறுவனின் கால்களைப் பிடித்து சமீரனே காலணியை அணிவித்தார். இதை கண்ட வேல்முருகனின் குடும்பத்தினர் கண்ணீர் மல்க அவருக்கு நன்றி தெரிவித்தனர். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சமீரன்
சமீரன்

"நாங்கள் வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். மிகவும் சிரமமாக இருப்பதால் எங்களுக்கு குடிசை மாற்று வாரியத்தில் வீடு ஒதுக்கி தர வேண்டும்" என்று ஆட்சியர் சமீரனிடம் வேல்முருகன் கோரிக்கை வைத்தார். அவர்களது கோரிக்கையை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக சமீரன் உறுதியளித்துள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism