Published:Updated:

கோவை: உச்சத்தில் கொரோனா பாதிப்பு - எச்சரிக்கும் மாவட்ட ஆட்சியர்!

கோவை

கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருப்பதால், பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.

கோவை: உச்சத்தில் கொரோனா பாதிப்பு - எச்சரிக்கும் மாவட்ட ஆட்சியர்!

கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருப்பதால், பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.

Published:Updated:
கோவை

கோவை மாவட்டத்தில், கொரோனா மூன்றாவது அலை பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்துவருகிறது. நேற்றைய தினம் 3,912 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. பாதிப்பு விகிதம் சென்னையைவிட கோவையில் அதிகரித்திருக்கிறது.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த நிலையில், கோவையில் கொரோனா வைரஸ் பாதிப்புக்காக சித்தா மற்றும் ஆயுஷ் சிகிச்சை மையம் தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த சிகிச்சை மையங்களைத் திறந்துவைத்த கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அப்போது அவர், ``கோவை மாவட்டத்தில், கொரோனா பாதிப்பு கடந்த இரண்டு வாரங்களாக அதிகரித்துவருகிறது. பாதிப்பு உச்சகட்டத்தில் இருப்பதால் பொதுமக்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிந்து, தனிமனித இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். 10,000-க்கும் மேற்பட்டோர் கொரோனாவுக்காக சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

கோவை ஆட்சியர் சமீரன்
கோவை ஆட்சியர் சமீரன்

இதில் 11 சதவிகித நோயாளிகளுக்கு மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை தேவைப்படுகிறது. கோவையில் 97.6 சதவிகிதம் பேர் முதல் தடுப்பூசியும், 82 சதவிகிதம் பேர் இரண்டாவது தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர். தடுப்பூசி செலுத்தியதில், மாநில அளவில் கோவை இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கொரோனா கட்டுப்பாடுகளை மீறுபவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். கோவைக்கு முன்பே சென்னையில் கொரோனா பரவல் தீவிரமடைந்துவிட்டது. அதன் பிறகுதான் கோவையில் தீவிரமடையத் தொடங்கியது. முக்கியமாக தொழிற்சாலைப் பகுதிகளில் கொரொனா சமூகப் பரவல் காணப்பட்டது.

கோவை
கோவை

நாளடைவில் பாதிப்பு படிப்படியாகக் குறையும். கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருப்பதால், அரசின் நடவடிக்கைகளுக்குப் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism