Published:Updated:

ஈமு கோழி மோசடி: 10 ஆண்டு சிறை, ₹1 கோடி அபராதம்; கோவை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

ஈமு கோழி
ஈமு கோழி

ஈமு கோழி மோசடியில் ஈடுபட்டுவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை, 1 கோடி ரூபாய் அபராதம் விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கொங்கு மண்டலத்தை அதிர வைக்கும் ஈமு கோழி மோசடி வழக்குகளின் விசாரணை கோவை பொருளாதார குற்றப்பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அதில் ஒன்றான ஈரோடு மாவட்டத்தின் ஈமு நிறுவன மோசடி வழக்கை விசாரணை செய்து சிறப்பு நீதிமன்றம் தற்போது தீர்ப்பை வழங்கியது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் மதி ஈமு பார்ம்ஸ் என்ற பெயரில் ஒரு நிறுவனம் தொடங்கப்பட்டது.

ஈமு கோழி
ஈமு கோழி
ஈமு கோழி மோசடி வழக்கில் 10 ஆண்டு சிறை; சிரித்துக் கொண்டே தீர்ப்பை ஏற்ற யுவராஜ்!

அந்த நிறுவனத்தில் 1.50 லட்சம் ருபாய் முதலீடு செய்தால், 1 செட் அமைத்து 10 ஈமு கோழி குஞ்சுகள், அதற்கு தேவையான தீவனங்கள், மாதம் 7,000 ரூபாய் பராமரிப்புத் தொகை, ஆண்டுக்கு 15,000 ரூபாய் ஊக்கத் தொகை தருவதாகக் கூறியுள்ளனர்.

மற்றொரு திட்டத்தில் 2 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், அந்த நிறுவனமே 10 ஈமு கோழி குஞ்சுகளை பராமரித்து மாதம் 10,000 ரூபாய், ஆண்டுக்கு 20,000 ரூபாய் ஊக்கத் தொகை வழங்குவதாக கூறியுள்ளனர். இதை நம்பி 51 முதலீட்டாளர்கள் சுமார் 1.33 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளனர்.

ஈமு கோழி
ஈமு கோழி
Ramesh.K

ஆனால்,அறிவித்தபடி பணத்தைத் தராமல் அந்நிறுவனத்தினர் மோசடி செய்துள்ளனர். இதனால். அவர்களிடம் பணம் முதலீடு செய்து ஏமாற்றமடைந்த ராஜேந்திரன் என்பவர் ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளித்திருந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அந்தப் புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு கோவை பொருளாதார குற்றப்பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதில் தீர்ப்பளித்த நீதிமன்றம், வழக்கின் முக்கிய குற்றவாளியான தங்கவேலு என்பவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 1.02 கோடி ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டது.

தங்கவேலு
தங்கவேலு

மேலும், பொதுமக்கள் இதுபோன்ற மோசடி திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டாம் என்று போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு