Published:Updated:

தினசரி 1,000 உணவுப் பொட்டலங்கள்.. அசத்தும் கோவை மாவட்ட நிர்வாகம்

உணவு
உணவு

கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் தினசரி 1,000 உணவுப் பொட்டலங்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றன.

`ஊரடங்கு உத்தரவால், அத்தியாவசியப் பொருள்கள் பாதிக்கப்படாது. காய்கறி, பால், மளிகைச் சாமான்கள், இறைச்சி போன்ற உணவுப் பொருள்கள் வழக்கம்போல கிடைக்கும்’ என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. ஆனால், ஒவ்வொரு ஊரிலும் ஏராளமான ஆதரவற்றோர் சாலையோரம் பசியுடன் அடுத்தவர்களின் உதவியை நோக்கி காத்துக் கிடக்கின்றனர்.

உணவு
உணவு

அதேபோல, களத்தில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள், காவல்துறையினர், ஊடகத்துறையினர் ஆகியோர் உணவு சாப்பிடுவதில் சிக்கல் உள்ளது.

கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. வீட்டுக்கும் போக முடியாது என்று பல்வேறு சவால்களுக்கு மத்தியில் 24 மணி நேரமும் பணியாற்றி வருகிறார்கள். இந்த நிலையில், கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில், பாலசுந்தரம் சாலையில் உள்ள வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் தினசரி 1,000 உணவுப் பொட்டலங்கள் தயாரிக்கப்படுகின்றன.

உணவு
உணவு

உணவு தேவைப்படும் எந்த மக்களும், அங்கு நேரடியாக வந்து உணவு எடுத்துக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோவை வடக்கு வட்டாட்சியர் மகேஷ், ``வருகின்ற 16-ம் தேதி வரை காலை 10 முதல் இரவு 7 மணி வரை இங்கு நேரடியாக வந்து உணவைப் பெற்றுக்கொள்ளலாம். ஆனால், இந்த இடத்தில் உணவு சாப்பிட அனுமதி இல்லை. இங்கு வர முடியாதவர்களுக்கு நேரடியாக சென்று உணவு வழங்குவதற்கான ஏற்பாடுகளையும் செய்துள்ளோம்.

உணவு
உணவு

மேலும், ஆதரவற்ற மக்களுக்கு காப்பகம் போல அமைத்து, அங்கு வைத்து அவர்களுக்குத் தேவையான வசதிகளை செய்து கொடுப்பதற்கும் ஆலோசனை நடத்தி வருகிறோம்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு